பதம் பார்த்த ஆஸி., பேட்ஸ்மேன்கள்.. டெஸ்ட் கிரிக்கெட்டில் மோசமான சாதனை புரிந்த பும்ரா
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  பதம் பார்த்த ஆஸி., பேட்ஸ்மேன்கள்.. டெஸ்ட் கிரிக்கெட்டில் மோசமான சாதனை புரிந்த பும்ரா

பதம் பார்த்த ஆஸி., பேட்ஸ்மேன்கள்.. டெஸ்ட் கிரிக்கெட்டில் மோசமான சாதனை புரிந்த பும்ரா

Dec 27, 2024 03:24 PM IST Muthu Vinayagam Kosalairaman
Dec 27, 2024 03:24 PM , IST

  • மெல்போர்னில் நடைபெற்று வரும் பாக்ஸிங்டே டெஸ்டில் ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்கள் ஆதிக்கம் செலுத்துயுள்ளனர். ஸ்மித் முதல் இன்னிங்சில் சதமடித்து 140 ரன்கள் குவித்துள்ளார். இந்த போட்டியில் இந்திய வேகம் ஜஸ்பிரித் பும்ரா விக்கெட்டுகளை வீழ்த்தினாலும் ரன்களை விட்டுக்கொடுத்து தேவையற்ற சாதனை படைத்துள்ளார்.

பார்டர் கவாஸ்கர் டிராபியின் நான்காவது டெஸ்ட் போட்டி வியாழக்கிழமை தொடங்கியது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அபாரமாக ரன் குவித்தது. இந்த பவுலர்களில் நல்ல ஃபார்மில் இருக்கும் ஜஸ்பிரித் பும்ரா விக்கெட்டுகளை வீழ்த்தினாலும் அதிக ரன்களை விட்டுக் கொடுத்தார். இதன் மூலம் தேவையற்ற சாதனையை படைத்துள்ளார்

(1 / 6)

பார்டர் கவாஸ்கர் டிராபியின் நான்காவது டெஸ்ட் போட்டி வியாழக்கிழமை தொடங்கியது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அபாரமாக ரன் குவித்தது. இந்த பவுலர்களில் நல்ல ஃபார்மில் இருக்கும் ஜஸ்பிரித் பும்ரா விக்கெட்டுகளை வீழ்த்தினாலும் அதிக ரன்களை விட்டுக் கொடுத்தார். இதன் மூலம் தேவையற்ற சாதனையை படைத்துள்ளார்(BCCI - X)

ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 474 ரன்கள் குவித்தது. ஜஸ்பிரித் பும்ரா 99 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆனால் அவர் தனது டெஸ்ட் கிரிக்கெட் கேரியரில் அதிக ரன்களை விட்டுக்கொடுத்த மோசமான இன்னிங்ஸாக இது அமைந்துள்ளது. இதற்கு முன் அவர் இவ்வளவு ரன்கள் விட்டு கொடுத்ததில்லை

(2 / 6)

ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 474 ரன்கள் குவித்தது. ஜஸ்பிரித் பும்ரா 99 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆனால் அவர் தனது டெஸ்ட் கிரிக்கெட் கேரியரில் அதிக ரன்களை விட்டுக்கொடுத்த மோசமான இன்னிங்ஸாக இது அமைந்துள்ளது. இதற்கு முன் அவர் இவ்வளவு ரன்கள் விட்டு கொடுத்ததில்லை(AP)

இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் 28.4 ஓவர்கள் வீசிய பும்ரா 9 மெய்டன் 99 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

(3 / 6)

இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் 28.4 ஓவர்கள் வீசிய பும்ரா 9 மெய்டன் 99 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். (AFP)

இதற்கு முன் அவர் அதிக ரன்களை விட்டுக்கொடுத்த முந்தைய இன்னிங்ஸ்: 88 ரன்கள் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டு மட்டுமே எடுத்தது ஆகும். கடந்த 2020இல் நியூசிலாந்து அனிக்கு எதிராக  வெலிங்டனில் நடைபெற்ற போட்டியில் இதை செய்தார். இதேபோல் இங்கிலாந்துக்கு எதிராக 2018ஆம் ஆண்டில் 5/85, மீண்டும் இங்கிலாந்துக்கு எதிராக 2021ஆம் ஆண்டில் சென்னையில் வைத்து 3/84 மற்றும் 2018இல் ஓவலில் நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்து எதிராக 3/83 ஆகிய பவுலிங் தான் மிகவும் மோசமாக இருந்தது 

(4 / 6)

இதற்கு முன் அவர் அதிக ரன்களை விட்டுக்கொடுத்த முந்தைய இன்னிங்ஸ்: 88 ரன்கள் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டு மட்டுமே எடுத்தது ஆகும். கடந்த 2020இல் நியூசிலாந்து அனிக்கு எதிராக  வெலிங்டனில் நடைபெற்ற போட்டியில் இதை செய்தார். இதேபோல் இங்கிலாந்துக்கு எதிராக 2018ஆம் ஆண்டில் 5/85, மீண்டும் இங்கிலாந்துக்கு எதிராக 2021ஆம் ஆண்டில் சென்னையில் வைத்து 3/84 மற்றும் 2018இல் ஓவலில் நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்து எதிராக 3/83 ஆகிய பவுலிங் தான் மிகவும் மோசமாக இருந்தது (AFP)

ரன்களை விட்டுக் கொடுத்தாலும் இந்தியாவின் ஸ்டார் பந்துவீச்சாளர் என்பதை நிருபித்த பும்ரா 4 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். இந்த தொடரில் இதுவரை  இதுவரை 25 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்

(5 / 6)

ரன்களை விட்டுக் கொடுத்தாலும் இந்தியாவின் ஸ்டார் பந்துவீச்சாளர் என்பதை நிருபித்த பும்ரா 4 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். இந்த தொடரில் இதுவரை  இதுவரை 25 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்(AP)

முதல் இன்னிங்ஸில் உஸ்மான் கவாஜா, டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ் மற்றும் நாதன் லயன் ஆகியோரை ஜஸ்பிரித் பும்ரா வெளியேற்றினார். நல்ல ஃபார்மில் இருந்த டிராவிஸ் ஹெட்டை டக் அவுட் ஆக்கினார்.. இதன் மூலம் ஹெட்டை டக் அவுட் செய்த முதல் இந்திய பந்துவீச்சாளர் ஆனார்.

(6 / 6)

முதல் இன்னிங்ஸில் உஸ்மான் கவாஜா, டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ் மற்றும் நாதன் லயன் ஆகியோரை ஜஸ்பிரித் பும்ரா வெளியேற்றினார். நல்ல ஃபார்மில் இருந்த டிராவிஸ் ஹெட்டை டக் அவுட் ஆக்கினார்.. இதன் மூலம் ஹெட்டை டக் அவுட் செய்த முதல் இந்திய பந்துவீச்சாளர் ஆனார்.(AFP)

மற்ற கேலரிக்கள்