Morning Habits: ஸ்மார்ட் போன் பிணைப்பில் இருந்து விடுபட!மனஅழுத்தம் குறைய..காலையில் எழுந்தவுடன் இதை தவறாமல் செய்யுங்கள்
- நாள்தோறும் காலை நடைப்பயிற்சி தவறாமல் செய்வதில் இருந்து நன்றியுணர்வை பராமரிப்பது வரை, மன அழுத்தத்தைத் குறைக்கும் சக்தியை உருவாக்குவதற்கு மேற்கொள்ள வேண்டிய காலைப் பழக்கவழக்கங்களை பார்க்கலாம்
- நாள்தோறும் காலை நடைப்பயிற்சி தவறாமல் செய்வதில் இருந்து நன்றியுணர்வை பராமரிப்பது வரை, மன அழுத்தத்தைத் குறைக்கும் சக்தியை உருவாக்குவதற்கு மேற்கொள்ள வேண்டிய காலைப் பழக்கவழக்கங்களை பார்க்கலாம்
(1 / 6)
சுய அன்பு, சுய அக்கறை என்பது உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் உங்களை நீங்கள் கவனித்துக் கொள்வதற்கும், புத்துயிர் செய்து கொள்வதற்குமான செயலாக உள்ளது
(Unsplash)(2 / 6)
இரவில் நன்கு தூங்கி காலையில் எழுந்தவுடன், முதல் வேலையாக கைப்பேசியை கண்டுபிடிப்பதில் அவசரம் காட்டக்கூடாது. அதற்கு பதிலாக, அடுத்த அரை மணி நேரத்துக்கு இந்த தேடலை தள்ளி வைத்துவிட்டு நம்மைப் பற்றி, குறிப்பாக சுய அக்கறை பற்றி கவனம் செலுத்த முன்னுரிமை அளிக்க வேண்டும்
(Unsplash)(3 / 6)
காலை சூரிய ஒளியை உள்வாங்குவது உடலின் சர்க்காடியன் ரிதமை சீராக்க உதவுகிறது. எனவே இயற்கை நம்மை உள்ளிருந்து குணப்படுத்த அனுமதிக்கும் விதமாக இதை செய்ய வேண்டும். தொடர்ந்து காலை நடைப்பயிற்சி செய்வது நம்மை நன்றாக உணர வைக்கும்
(Unsplash)(4 / 6)
மெக்னீசியம், ஒமேகா-3 மற்றும் சிக்கலான கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்த இரவு உணவு ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இவை இரவு நேரத்தில் ரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பதைத் தடுக்கிறது. கார்டிசோலின் அளவைக் கட்டுப்படுத்துகிறது
(Unsplash)(5 / 6)
நன்றியுணர்வை பராமரிப்பது காலை வேலையில் அன்றாடம் செய்ய வேண்டிய முக்கிய விஷயமாகவும் மனஅழுத்தத்தில் இருந்து விடுபட உதவும் விதமாகவும் உள்ளது. இதை செய்வதால் வாழ்க்கையில் நேர்மறையான விஷயங்கள் மீது மனதை திரும்ப உதவுகிறது
(Pexels)மற்ற கேலரிக்கள்