குழந்தைகளுக்கு பணத்தை சேமிக்க கற்றுக்கொடுக்கும் 10 வழிகள் இவைதான்!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  குழந்தைகளுக்கு பணத்தை சேமிக்க கற்றுக்கொடுக்கும் 10 வழிகள் இவைதான்!

குழந்தைகளுக்கு பணத்தை சேமிக்க கற்றுக்கொடுக்கும் 10 வழிகள் இவைதான்!

Dec 29, 2024 10:05 AM IST Priyadarshini R
Dec 29, 2024 10:05 AM , IST

  • குழந்தைகளுக்கு பணத்தை சேமிக்க கற்றுக்கொடுக்கும் 10 வழிகள் இவைதான்!

நீங்கள் துவங்கி, எடுத்துக்காட்டாகுங்கள் - அவர்கள் முன் முதலில் நீங்கள் நல்ல பண பழக்கவழக்கங்களை பழகி, அதன் மூலம் குழந்தைகளுக்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டாக வேண்டும். அவர்கள் உங்களின் பட்ஜெட் திறன், சேமிக்கும் பழக்கம் மற்றும் வாங்கும்போது அவசியமானவற்றை மட்டும் வாங்கினால், அவர்களும் இதையே பின்பற்றுவார்கள். நீங்கள் ஏன் விடுமுறை கொண்டாட்டத்திற்கு பணத்தை சேமிக்க வேண்டும் என்று எண்ணுகிறீர்கள் என்பது குறித்து அவர்களுடன் உரையாடுங்கள். இது அவர்களுக்கு பணத்தை திட்டமிட்டு செலவிடுவதன் அவசியத்தை எடுத்துக்கூறும்.

(1 / 10)

பிக்கி பேங்குகளா, டிரான்ஸ்பரன்ட் ஜாரா? - பணத்தை வெளியில் பார்க்க முடியாத பிக்கி பேங்குகளுக்கு பதில், வெளியே பணம் தெரியும் ஜார்களைப் பயன்படுத்துங்கள். இதனால் குழந்தைகளுக்கு தங்களின் சேமிப்பு எப்படி வளர்ந்து வருகிறது என்பது தெரியும். சேமிப்பை அவர்கள் உண்மையான ஒன்றாகக் காண்பார்கள். அவர்களின் ஜார், சில்லறைகளாலும், காயின்களாலும் நிரமபுவதை அவர்கள் பார்க்கும்போது, அவர்கள், நாளடைவில் சேமிப்பு எப்படி பணத்தைப் பெருக்குகிறது என்று தெரிந்துகொள்வார்கள்.

(2 / 10)

தேவைகள் மற்றும் விருப்பங்கள் குறித்து பேசுங்கள் - குழந்தைகளுக்கு தேவைகள் மற்றும் விருப்பங்களுக்கு இடையில் உள்ள வித்யாசம் குறித்து பேசுங்கள். அதற்கு நீங்கள் அன்றாட தேவைகளை எடுத்துக்காட்டி அறிவுறுத்தாலாம். நீங்கள் மளிகை சாமான்கள் வாங்கச் செல்லும்போது, உங்களுக்கு பொம்மைகள் தேவையா? அல்லது விருப்பமா என்று கேட்டால், அவர்களுக்கு தேவைகளின் அடிப்படையில் பணத்தை செலவிடும் பழக்கத்துக்கு முன்னுரிமை கொடுக்க உதவும்.

(3 / 10)

வேலைகளுக்கு பணம் - அவர்களுக்கு பாக்கெட் மணி கொடுப்பதற்கு பதில், அவர்களுக்கு குறிப்பிட்ட வீட்டு வேலைகளை செய்து முடிப்பதற்கு பணம் கொடுங்கள். இதன் மூலம் அவர்களுக்கு பணம் கஷ்டப்பட்டு உழைத்து சாம்பாதிக்க வேண்டிய ஒன்று என்பது புரியும். அவர்களுக்கு வீடுகளை துடைக்க, அவர்களின் பொருட்களை அடுக்கி வைக்க மற்றும் உங்களுக்கு உதவ என நீங்கள் பணம் கொடுக்கும்போது, வேலையின் மதிப்பையும் அவர்களுக்கு இது கற்றுக்கொடுக்கும்.

(4 / 10)

செலவுகளை பட்டியலிட அறிவுறுத்துங்கள் - அவர்களுக்கு அவர்களின் செலவினங்களை பட்டியலிட பழக்குங்கள். என்ன பொருட்களை வாங்குகிறார்கள் என்பதை அவர்கள் குறித்துக்கொள்ள அறிவுறுத்துங்கள். இந்தப்பழக்கம் அவர்களுக்கு தேவையற்ற பொருட்கள் வாங்குவதை தவிர்க்க உதவும். இது அவர்களின் சேமிப்பு பழக்கத்தை மேம்படுத்தும். அவர்களுக்கு ஒவ்வொரு முறையும் அவர்கள் வாங்கும் பொருட்கள் மற்றும் அவர்களுக்கு கிடைக்கும் பணம் என பட்டியலிட்டாலே அவர்கள் முன்னேறலாம்.

(5 / 10)

அவர்களுக்கு ஷாப்பிங் அனுபவம் - உங்கள் குழந்தைகளை ஷாப்பிங்குக்கு அழைத்துச் செல்லுங்கள். அவர்களை பணத்தைக் கொடுக்க அனுமதியுங்கள். இந்த அனுபவம் அவர்களுக்கு பணத்தின் மதிப்பை குறித்து விளக்கும். மேலும் பொருட்களுக்காக இது எப்படி பரிமாறப்படுகிறது என்பதையும் சுட்டிக்காட்டும். எடுத்துக்காட்டாக, சிறிய பொருட்களுக்கு அவர்களின் பணத்தை செலவிட அறிவுறுத்துங்கள். இது அவர்களுக்கு செலவு மற்றும் சாம்பாதிப்பது என்பதை புரிந்துகொள்ள உதவும்.

(6 / 10)

வங்கிக்கணக்கு - உங்கள் டீன் ஏஜ் குழந்தைக்கு எளிய சேமிப்பு கணக்கை துவங்கவேண்டும். இது அவர்களுக்கு பணத்தை கையாளும் பழக்கத்தைக் கற்றுக்கொடுக்க உதவும். நாளடைவில் இந்தப்பழக்கம் அவர்களை முதலீட்டை நோக்கி தள்ளும். அவர்களின் சேமிப்பு எப்படி வளர்கிறது என்று அவர்களுக்கு விளக்குங்கள். வங்கி வழங்கும் வட்டி குறித்து எடுத்து கூறுங்கள்.

(7 / 10)

சேமிப்பு இலக்குகள் - உங்கள் குழந்தைகளுக்கு குறிப்பிட்ட சேமிப்பு இலக்குகளை நிர்ணயிக்க அறிவுறுத்துங்கள். அவர்களுக்கு பிடித்த பொருட்களை வாங்குவதற்கான சேமிப்பு. அவர்களின் இலக்குகளை அடைவதற்கு ஒரு வாரத்தில் அவர்கள் எவ்வளவு தொகை சேமிக்கவேண்டும் என்று கணக்கிட உதவுங்கள். எடுத்துக்காட்டாக, அவர்களுக்கு புதிய பொம்மை கார், ரூ.1000க்கு வாங்க வேண்டுமெனில் அவர்கள் 10 வாரத்திற்கு 100 ரூபாய் சேமிக்க வேண்டும் என்று கற்றுக்கொடுங்கள்.

(8 / 10)

வாங்கவேண்டும் என்ற உந்துதலால் வாங்குவது குறித்த விழிப்புணர்வு - உங்கள் குழந்தைகளுக்கு வாங்கவேண்டும் என்ற உந்துதலால் அவர்கள் வாங்குகிறார்களா என்பது குறித்து அவர்களுடன் பேசுங்கள். சந்தை நுட்பங்கள் மற்றும் வாங்கவேண்டும் என்ற உணர்வு குறித்து விளக்குங்கள். அவர்களுக்கு திடீரென ஒரு பொம்மை பிடித்துவிட்டது. அதை வாங்குவதற்கு முன் அவர்கள் சில காலம் காத்திருக்கவேண்டும். சில காலத்துக்குப் பின்னர் அவர்களுக்கு அது இன்னும் வேண்டுமா என்பது குறித்து பேசுங்கள்.

(9 / 10)

சேமிப்பை மகிழ்வானதாக மாற்றுங்கள் - சேமிப்பை ஒரு மகிழ்வான நடவடிக்கையாக மாற்றுங்கள். அதையொட்டி சில விளையாட்டுகளை உருவாக்குங்கள். உதாரணமாக, ஒவ்வொரு இலக்குக்கும் (விளையாட்டு ஜாமான்களுக்கு, வெளியே செல்வதற்கு) அழகழகான கண்ணாடி ஜார்களை வாங்கிக்கொடுங்கள். அதை அலங்கரிக்கவேண்டும். ஒவ்வொரு முறை அவர்கள் சேமிக்கும்போது, அவர்களின் இலக்குகளை அவர்கள் எண்ணிப்பார்க்க அறிவுறுத்துங்கள்.

(10 / 10)

மற்ற கேலரிக்கள்