Mohammed Siraj: முகமது சிராஜ் - நடிகை மஹிரா டேட்டிங் வதந்தி.. பிக் பாஸ் பிரபலத்துடன் ரிலேஷன்ஷிப் - உண்மை என்ன?
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Mohammed Siraj: முகமது சிராஜ் - நடிகை மஹிரா டேட்டிங் வதந்தி.. பிக் பாஸ் பிரபலத்துடன் ரிலேஷன்ஷிப் - உண்மை என்ன?

Mohammed Siraj: முகமது சிராஜ் - நடிகை மஹிரா டேட்டிங் வதந்தி.. பிக் பாஸ் பிரபலத்துடன் ரிலேஷன்ஷிப் - உண்மை என்ன?

Jan 30, 2025 09:15 PM IST Muthu Vinayagam Kosalairaman
Jan 30, 2025 09:15 PM , IST

  • Mohammed Siraj: இந்திய கிரிக்கெட் வீரர் முகமது சிராஜும், பாலிவுட் நடிகை மஹிரா சர்மாவும் டேட்டிங் செய்து வருவதாக வதந்திகள் உலா வருகின்றன. இதில் நடிகை மஹிரா சர்மா, பிக் பாஸ் போட்டியாளருடன் ஒருவருடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்ததும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது

சினிமாத்துறையும், இந்திய கிரிக்கெட்டும் பிரிக்க முடியாதவை என்று சொல்லு அளவில் நடிகைகள், இந்தியா கிரிக்கெட் வீரர்களுக்கு இடையே பல்வேறு காதல் கதைகள் இருந்து வருகின்றன. இதில் சில திருமணம் வரையும் முடிந்துள்ளன. திருமணத்துக்கு பின்னர் முறிவும் ஏற்பட்டுள்ளன. அந்த வகையில் லேட்டஸ்ட் சினிமா மற்றும் கிரிக்கெட் கலந்த காதல் கதையாக இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ், பாலிவுட் நடிகை மஹிரா சர்மா ஆகியோர் இடையிலான டேட்டிங் பற்றி பேசப்படுகிறது

(1 / 9)

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த நடிகையும், பிக் பாஸ் போட்டியாளருமான மஹிரா சர்மா, இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் ஆகியோர் டேட்டிங் செய்து வருவதாக வதந்திகள் பரவி வருகின்றன. 29 வயதான வேகப்பந்து வீச்சாளரான முகமது சிராஜ், பல்வேறு சிறப்பான பந்து வீச்சால் இந்திய அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்து வந்திருக்கும் நிலையில், தற்போது தனது தனிப்பட்ட வாழ்க்கை மூலமாகவும் கவனத்தை ஈர்த்துள்ளார்

(2 / 9)

பிக் பாஸ் இந்தி சீசன் 13இல் பைனலிஸ்டாக இருந்தவர் மஹிரா சர்மா. இதையடுத்து சிராஜ் - மஹிரா ஆகியோர் பல மாதங்களாக டேட்டிங்கில் இருந்து வருவதாக தகவல்கள் உலா வருகின்றன 

(3 / 9)

இந்த டேட்டிங் தகவல் பற்றி நடிகை மற்றும் கிரிக்கெட் வீரர் ஆகிய இருவரும் அதிகாரப்பூர்வமாக எதையும் உறுதிப்படுத்தவில்லை. கடந்த ஆண்டு நவம்பர் 2024இல் இவர்களுக்கு இடையிலான உறவு குறித்த தகவல் வெளிச்சத்துக்கு வந்தது.

(4 / 9)

சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் ஒருவரையொருவர் பின்தொடர்கிறார்கள். மஹிராவின் இன்ஸ்டாகிராம் பதிவுகளுக்கு சிராஜ் லைக் செய்து வந்தது பல்வேறு விதமான ஊகங்களுக்கு வழிவகுத்தது. இதை வைத்து இவர்கள் காதலில் இருப்பதாகவும் கூறப்படுகிறது

(5 / 9)

சமீபத்தில் கிரிக்கெட் வீரர் சிராஜ், பிரபல பாலிவுட் பாடகி ஆஷா போஸ்லேவின் பேத்தி ஜனாய் போஸ்லேவை டேட்டிங் செய்து வருவதாக தகவல்கள் வெளியாகின. இதற்கு பின்னணியாக ஜனாய் தனது இன்ஸ்டாகிராமில் சிராஜுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்தது எனவும் சொல்லப்பட்டது 

(6 / 9)

மஹிரா மற்றும் சிராஜ் இடையே காதல் இருப்பது உண்மைதான் என இருவருக்கும் நெருக்கமான வட்டார தகவல்கள் தெரிவித்துள்ளன. தற்போது டேட்டிங் செய்து வரும் இவர்கள், தங்களது உறவை ரகசியமாக வைத்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது. ​​அவர்கள் ஒருவரையொருவர் பரஸ்பரம் புரிந்துகொள்ளும் முயற்சியில் இருந்து வருவதாகவும் கூறப்படுகிறது

(7 / 9)

நடிகை ஷெஃபாலி ஜெரிவாலாவுடனான பிரபல பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிக் பாஸ் போட்டியாளர் பராஸ் சாப்ரா, நடிகை மஹிராவுடன் சில காலம் ரிலேஷன்ஷிப்பில் இருந்ததை வெளிப்படுத்தினார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக இருந்த பின், வீட்டை விட்டு வெளியேறிய பிறகு சில நாள்கள் உறவில் இருந்ததாகவும், அதன்பின் பிரிந்ததாகவும் கூறியுள்ளார்

(8 / 9)

மஹிராவை பிரிந்ததற்கான காரணம் பற்றி பராஸ் எதுவும் கூறவில்லை. 'பெரும்பாலான லிவ்-இன் ரிலேஷன்ஷிப் பாழாகிவிட்டன' என்று அவர் சுருக்கமாக கூறினார். பிரிவுக்கு பின்னர் இன்ஸ்டாவில் ஒருவரையொருவர் பின்தொடர்வதை நிறுத்திவிட்டனர்

(9 / 9)

மற்ற கேலரிக்கள்