மு.க.ஸ்டாலின் முதல் டி.கே.சிவக்குமார் வரை! தொகுதி மறுசீரமைப்பு கூட்டத்தில் தலைவர்கள் பேசியது என்ன?
- சென்னையில் நடைபெற்ற தொகுதி மறுசீரமைப்பு கூட்டத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன், தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் மற்றும் 15 கட்சிகளை சேர்ந்த 25க்கும் மேற்பட்ட தலைவர்கள் இதில் பங்கேற்றனர்.
- சென்னையில் நடைபெற்ற தொகுதி மறுசீரமைப்பு கூட்டத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன், தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் மற்றும் 15 கட்சிகளை சேர்ந்த 25க்கும் மேற்பட்ட தலைவர்கள் இதில் பங்கேற்றனர்.
(1 / 9)
தொகுதி மறுசீரமைப்பு (Delimitation) என்பது இந்தியாவில் மக்களவை தொகுதிகளை மறுவரையறை செய்யும் செயல்முறையாகும். இது மக்கள்தொகை அடிப்படையில் நடைபெறுவதால், தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை குறைக்கும் என்ற அச்சம் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் எழுந்துள்ளது. மேலும் ஒரிசா மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களிலும் தொகுதிகள் எண்ணிக்கை குறையும் அபாயம் உள்ளது.
(HT_PRINT)(2 / 9)
தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான கூட்டம் சென்னை கிண்டியில் உள்ள ஐடிசி சோழா ஓட்டலில் தொடங்கி உள்ளது. இக்கூட்டத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன், தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் மற்றும் 15 கட்சிகளை சேர்ந்த 25க்கும் மேற்பட்ட தலைவர்கள் இதில் பங்கேற்றனர்.
(CMOTamilnadu X )(3 / 9)
மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு நடந்தால், சொந்த நாட்டில் நாமே அரசியல் அதிகாரம் இழந்த குடிமக்களாக மாறும் அபாயம் ஏற்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.
(@TNDIPR21)(4 / 9)
தொகுதி மறுசீரமைப்பு பாஜகவுக்கு சாதகமாக அமையும், ஏனெனில் அவர்கள் வடக்கில் அதிக செல்வாக்கு பெற்றுள்ளனர். மக்கள்தொகை அடிப்படையில் மட்டுமே எல்லை மறுவரையறை செய்யப்பட்டால், கேரளம் உள்ளிட்ட தென்மாநிலங்கள் பாதிக்கப்படும். மக்கள் தொகை குறைப்பை பாராட்டிய மத்திய அரசே தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் தண்டிக்கிறது என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்து உள்ளார்.
(Handout)(5 / 9)
வடமாநிலங்கள் எங்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிவிடும். உத்தரப் பிரதேசம், பீகார், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் போன்ற மாநிலங்கள் ஆதிக்கம் செலுத்துவதை எந்த வகையிலும் ஏற்க முடியாது என ரேவந்த் ரெட்டி தெரிவித்து உள்ளார்.
(PTI)(6 / 9)
(7 / 9)
தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் வடக்கு மற்றும் தெற்கு இடையேயான போராட்டம் அல்ல; சமமான மாநிலங்களின் ஒன்றியமாக இந்தியாவின் பார்வையை மீட்கும் போராட்டம் என கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் தெரிவித்து உள்ளார்.
(Handout)(8 / 9)
"மக்கள்தொகையைக் கட்டுப்படுத்திய மாநிலங்கள் தண்டிக்கப்படக்கூடாது" என ஒடிசா முன்னாள் முதலமைச்சர் நவீன் பட்நாயக் தெரிவித்து உள்ளார்.
(PTI)மற்ற கேலரிக்கள்