தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Small Business: ’படித்த இளைஞர்களே பால் பண்ணை வைக்க வாங்க!’ பணம் கொட்டும்! அமைச்சர் மனோ தங்கராஜ் அழைப்பு!

Small Business: ’படித்த இளைஞர்களே பால் பண்ணை வைக்க வாங்க!’ பணம் கொட்டும்! அமைச்சர் மனோ தங்கராஜ் அழைப்பு!

Jul 05, 2024 07:09 PM IST Kathiravan V
Jul 05, 2024 07:09 PM , IST

  • DIC மூலம் படித்த இளைஞர்களுக்கு பண்ணை அமைக்க தேவையான ஆலோசனைகள், பயிற்சிகள் போன்றவை வழங்கப்படும். இதன் மூலம் குறைந்தது 10,000 புதிய கால்நடை வளர்ப்போரை உருவாக்க திட்டமிட்டுள்ளோம் என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்து உள்ளார்.

படித்த இளைஞர்கள் கால்நடை பண்ணைகளை அமைக்க முன்வரவேண்டும் என பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ்  வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

(1 / 7)

தமிழ்நாடு பொருளாதாரத்தில், சேவைத்துறை 45%, தொழில் துறை 34%, விவசாயம் 21% பங்களிக்கின்றன மற்றும் இந்தியாவின் இரண்டாவது பெரிய பொருளாதாரமாகவும், தேசிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 8.8% பங்களிக்கிறது. உலகில் உற்பத்தி செய்யப்படும் பாலில் 25% பால் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் தமிழ்நாட்டின் பங்கு 4.47% ஆகும்.

(2 / 7)

சர்வதேச சந்தை வளர்ச்சியின் காரணமாக, உலகளாவிய பால் பொருட்களின் விநியோகத்தில் இடைவெளிகள் உள்ளது. அந்த இடைவெளியை இந்தியாவால் நிரப்ப முடியும் என்கிறார் சர்வதேச பால் பண்ணை கூட்டமைப்பின் தலைவர் டாக்டர் பிரேஸல். ஐரோப்பா கண்டம் மற்றும் நியூசிலாந்து நாட்டில் பால் உற்பத்தியில் சரிவு ஏற்பட்டுள்ளது.

(3 / 7)

சர்வதேச தரத்திற்கு ஏற்ப ஒவ்வொரு கால்நடையின் மூலம் உற்பத்தி செய்யப்படும் பாலின் அளவை அதிகரிப்பதன் வாயிலாக இந்தியா குறிப்பாக தமிழ்நாடு உலக பால் சந்தையில் ஆதிக்கம் செலுத்த முடியும்.

(4 / 7)

உலக சந்தை பால் உற்பத்தியில் தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக கொண்டு செல்ல படித்த இளைஞர்கள், பெண்கள், தொழில் முனைவோர்கள் பால் உற்பத்தியில் ஈடுபட வேண்டும். அவ்வாறு முன் வருவோர்க்கு பால்வளத்துறை உறுதுணையாக செயல்படும். பல்வேறு துறை சார்ந்த திட்டங்களின் மானியங்களை ஒருங்கிணைத்து குறிப்பாக தாட்கோ மூலமாக ஆதிதிராவிடர்களுக்கு திட்ட மதிப்பீட்டில் 30% அல்லது (ரூ.2,25,000) இதில் எது குறைவோ மானியமாக வழங்கப்படும். மேலும், பழங்குடியினருக்கு திட்ட மதிப்பீட்டில் 50% அல்லது (ரூ.3,75,000) இதில் எது குறைவோ மானியமாக வழங்கப்படும்.

(5 / 7)

TAMCO திட்டத்தின் கீழ் சிறுபான்மையினருக்காக கடன் திட்டங்கள் குறைந்த வட்டியில் (6%) வழங்கப்படுகிறது. TABCEDCO திட்டத்தின் கீழ் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினருக்கு குறைந்த வட்டியில் (6%) வங்கிகள் மூலம் கடன்கள் வழங்கப்படுகிறது.

(6 / 7)

DIC மூலம் படித்த இளைஞர்களுக்கு 15% முதல் 35% வரை திட்ட மதிப்பீட்டில் மானியத்துடன் கூடிய வங்கிக் கடன் வழங்கப்படுகிறது. மேலும், காப்பீடு, மருத்துவ உதவிகள், பண்ணை அமைக்க தேவையான ஆலோசனைகள், பயிற்சிகள் போன்றவை வழங்கப்படும். இதன் மூலம் குறைந்தது 10,000 புதிய கால்நடை வளர்ப்போரை உருவாக்க திட்டமிட்டுள்ளோம் என தெரிவித்து உள்ளார்.

(7 / 7)

மற்ற கேலரிக்கள்