K. Bhagyaraj: பாக்யராஜ் என்னும் திரைக்கதை ஆளுமையை உருவாக்கிய மிடில் கிளாஸ் குடும்பக் கதைகள் - எப்படி?
- அந்த ஏழு நாட்கள், முந்தானை முடிச்சு, டார்லிங் டார்லிங், டார்லிங் ஆகிய பல வெற்றிப் படங்களை இயக்கியவர், இயக்குநர் பாக்யராஜ். இவர் தமிழ் சினிமாவில் செய்த பல்வேறு விஷயங்கள் குறித்துப் பார்ப்போம்.
- அந்த ஏழு நாட்கள், முந்தானை முடிச்சு, டார்லிங் டார்லிங், டார்லிங் ஆகிய பல வெற்றிப் படங்களை இயக்கியவர், இயக்குநர் பாக்யராஜ். இவர் தமிழ் சினிமாவில் செய்த பல்வேறு விஷயங்கள் குறித்துப் பார்ப்போம்.
(1 / 8)
யார் இந்த பாக்யராஜ்? ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகேயுள்ள வெள்ளன்கோயில் என்னும் குக்கிராமத்தில் கிருஷ்ணசாமி நாயுடு - அமராவதி அம்மாள் தம்பதியருக்கு 1953ஆம் ஆண்டு, ஜனவரி 7ஆம் தேதி பிறந்தவர் தான், கே.பாக்யராஜ். பாக்யராஜுக்கு செல்வராஜ், தன்ராஜ் ஆகிய இரு அண்ணன்கள் இருந்தனர்.
(2 / 8)
பாக்யராஜ், ஆரம்பத்தில் தனது படங்களில் துணைவேடத்தில் நடித்த பிரவீணாவை திருமணம் செய்தார். துரதிர்ஷ்டவசமாக அவர் 25 வயதிலேயே மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். பின், அப்போது உச்ச நடிகையாக இருந்த பூர்ணிமா ஜெயராமை மணந்துகொண்டார். இந்த தம்பதியருக்கு சரண்யா - சாந்தனு ஆகிய இரு பிள்ளைகள் உள்ளனர்.
(3 / 8)
ஆரம்பத்தில் இருந்தே சினிமாவில் ஒரு பெரிய இயக்குநராக வேண்டும் என்னும் முனைப்பில் சென்னைக்குக் கிளம்பிய கே.பாக்யராஜ், பாரதிராஜாவின் முதல் படமான 16 வயதினிலே திரைப்படத்தில் உதவி இயக்குநராக சேர்ந்தார். பின் சிகப்பு ரோஜாக்கள் படத்தில் வசனம் எழுதிய பாக்யராஜ், பாரதிராஜா எழுதி இயக்கிய ’புதியவார்ப்புகள்’ படத்துக்கு வசனம் எழுதியதோடு, அதே படம் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாகவும் அறிமுகம் ஆனார். பின் பாரதிராஜா இயக்கிய கைதியின் டைரி திரைப்படத்துக்கு கதை, வசனம் எழுதினார், பாக்யராஜ்
(4 / 8)
1979ஆம் ஆண்டு ’சுவர் இல்லாத சுத்திரங்கள்’ மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமான பாக்யராஜ், தனது வித்தியாசமான திரைக்கதை மூலம் ஹிட்டடித்தவர். அதன் பின் 1981ஆம் ஆண்டு வெளியான ‘மெளன கீதங்கள், இன்று போய் நாளை வா’ ஆகியப் படங்கள் மிகப்பெரிய ஹிட்டடித்தன. இதில் 'இன்றுபோய் நாளை வா' திரைப்படம்,சந்தானம் ஹீரோவாக நடித்த 'கண்ணா லட்டு தின்ன ஆசையா' படத்தின் மூல வெர்ஷன் ஆகும். பின், பாக்யராஜ் கதாநாயகனாக நடித்து இயக்கிய ‘விடியும் வரை காத்திரு’ என்னும் நல்ல கிரைம் திரில்லராக இருந்து வெற்றிபெற்றது.
(5 / 8)
முந்தானை முடிச்சு: பாக்யராஜ் 30 லட்சம் ரூபாயில் எடுத்துக்கொடுத்த முந்தானை முடிச்சு திரைப்படம், 25 வாரங்களுக்கும் மேல் திரையில் ஓடி சுமார் மூன்று கோடி ரூபாய் வருவாய் ஈட்டித்தந்ததாம். அதற்குக் காரணம், இப்படத்தில் இருந்த காமெடி காட்சிகளும் பாக்யராஜின் திரைக்கதையும் தான் காரணம் எனப் பல்வேறு தரப்பினரால் புகழப்பட்டது.
(6 / 8)
அதேபோல், இயக்குநர் பாக்யராஜ் இயக்கி நடித்த, ‘அந்த ஏழு நாட்கள்’ திரைப்படத்தில் இடம்பெற்ற பாலக்காடு மாதவன் கதாபாத்திரமும், அம்பிகாவை காதலிக்கும் பாக்யராஜ் காட்சிகளும் இன்றளவும் பேசப்படுபவையாக இருக்கின்றன. பின் 1984ல் பாக்யராஜ் இயக்கி, நடித்து, தயாரித்து வெளியான திரைப்படம் தான், ‘தாவணிக் கனவுகள்’. இப்படத்தில் 5 தங்கைகளை கஷ்டப்பட்டு கரைசேர்க்கத் துடிக்கும் அண்ணன் கதாபாத்திரத்தில் பாக்யராஜ் நடித்திருப்பார். அவரது ஹவுஸ் ஓனராக சிவாஜி கணேசன் நடித்திருப்பார். அதிலும், சென்னை சென்றபின் பாக்யராஜ் எழுதிய லெட்டரை, போஸ்ட்மேன் சிவாஜி முன்பு, படித்துக் காட்டும் காட்சிகள் காமெடியானவை.
(7 / 8)
எம்.ஜி.ஆரின் கலையுலக வாரிசு என, எம்.ஜி.ஆராலேயே அறிவிக்கப்பட்ட கே.பாக்யராஜ், அவரது மறைவுக்குப் பின், எம்ஜிஆர் மக்கள் முன்னேற்றக் கழகம் என்னும் கட்சியைத் தொடங்கி படுதோல்வியைச் சந்தித்தார். பின் அதிமுகவில் பயணித்த பாக்யராஜ், 2006ஆம் ஆண்டு கலைஞர் கருணாநிதி முன் திமுகவில் இணைந்தார். தற்போது சில மாதங்களுக்கு முன், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவில் இணைந்துகொண்டார், பாக்யராஜ். தவிர, பல்வேறு படங்களிலும் முக்கிய காதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
(8 / 8)
பாக்யராஜ் தனது திரைப்படங்களில், கதைகள் பலவற்றையும் ஒரு நடுத்தர குடும்பத்தினர் சந்திக்கும் பிரச்னைகளையே எடுத்தார். அதனால் அவரது கதைகள் பலவும் மிடில் கிளாஸ் மக்களால் ரசிக்கப்பட்டன. இன்னொன்று, பாக்யராஜின் திரைப்படங்களுக்கு அவர் வைக்கும் டபுள் மீனிங் டைட்டில்களும், படத்தில் சபலப்பட்ட ஆண்கள் செய்யும் சேட்டைகளையும் அப்படியே ரசிக்கும்படியாக காட்சிப்படுத்தியிருப்பார்.அது அன்றைய காலத்தில் அவருக்கு வெற்றிவாகை சூட உதவின. தவிர, குறைந்த பட்ஜெட்டில், குறைந்த கதைக்களங்களைப் பயன்படுத்தியே தனது படத்தினை வித்தியாசமான திரைக்கதை மற்றும் வசனத்தில் ரசிகர்களை கட்டிப்போட்டவர், பாக்யராஜ். அதனாலேயே இவர் இயக்கிய படங்கள் பலவும் சூப்பர் ஹிட்டடித்தன.
மற்ற கேலரிக்கள்