ஏலியன் படத்தில் எம்ஜிஆர்! நம்பியார் தான் வில்லன்! எந்தப்படம் தெரியுமா? கிளாசிக்கல் த்ரோபேக்!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  ஏலியன் படத்தில் எம்ஜிஆர்! நம்பியார் தான் வில்லன்! எந்தப்படம் தெரியுமா? கிளாசிக்கல் த்ரோபேக்!

ஏலியன் படத்தில் எம்ஜிஆர்! நம்பியார் தான் வில்லன்! எந்தப்படம் தெரியுமா? கிளாசிக்கல் த்ரோபேக்!

Dec 15, 2024 01:30 PM IST Suguna Devi P
Dec 15, 2024 01:30 PM , IST

  • விண்வெளி தொடர்பான சயின்ஸ் ஃபிக்ஷன் திரைப்படம் என்றாலே நமக்கு ஹாலிவுட் தான் நினைவுக்கு வரும். ஆனால் தமிழிலேயே பல ஆண்டுகளுக்கு முன்பே வெளியான எம். ஜி.ஆரின் ஏலியன் திரைபப்படம் குறித்து கேள்வி பட்டதுண்டா?  

தமிழ் சினிமாவில் எப்போது உச்ச நச்சத்திரமாக இருக்கும் நடிகர்கள் புதியதாக ஏதேனும் ஒன்றை சினிமா துறையில் முயற்சி செய்து பார்ப்பது வழக்கமாக இருந்து வருகிறது. இதற்கு முன்னோடியாக இருந்தவர் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகராக இருந்தவர் தான் எம்.ஜி.ஆர், இவரும் அவரது திரை காலத்தில் புதிய முயற்சிகளை செய்துள்ளார்.  

(1 / 6)

எம்.ஜி.ஆர் படங்கள் என்றாலே நம்பியார் உடன் சண்டையிட்டு கதாநாயகியை காப்பாற்றுவது என்றுதான் நமது மனதில் பதிந்து இருக்கின்றது.  இதே தான் இந்த படத்திலும், சிறிய மாற்றம் என்னவென்றால் இந்த முறை நம்பியார் ஒரு ஏலியன். இவர் வேற்று கிரகத்தில் இருந்து வந்த ஒருவர் ஆவார். இவரிடம் சண்டையிட்டு பானுமதியை காப்பாற்றுவார். 

(2 / 6)

1963 ஆம் ஆண்டு இயக்குனர் ஏ.காசிலிங்கம் இயக்கத்தில் எம்.ஜி.ஆர், பானுமதி மற்றும் நம்பியார் நடித்து வெளிவந்த கலையரசி எனும் திரைப்படத்தில் வேற்று கிரகவாசிகள் மற்றும் மனிதர்களிடையே நடக்கும் பிரச்சனைகளை மையமாக வைத்து இந்த படம் உருவாகி இருந்தது. இப்படத்தில் மனிதர்கள் உலகத்தில் இருக்கும் பானுமதியை வேற்று கிரகவாசியான நம்பியார் கடத்தி கொண்டு போகிறார். 

(3 / 6)

பல புத்தகங்களில் இருந்து பல தகவல்களை சேகரித்தே இந்த படத்தை இயக்குனர் காசிலிங்கம் இயக்கியுள்ளார் எனக் கூறப்படுகிறது. இதுவே இந்தியா சினிமா உலகில் வந்த முதல் விண்வெளி சம்மந்தமான திரைப்படமாகும். 

(4 / 6)

தமிழ் சினிமா மட்டுமல்லாது அரசியல் துறையில் அளப்பரிய சாதானைகளை செய்தவர் தா எம்.ஜி.ஆர், இவரது திரைப்பயணத்தில் எழுதப்பட்ட பல சாதனைகளில் இந்த கலையரசி படமும் ஒரு முக்கியமான இடத்தை பிடித்துள்ளது.  

(5 / 6)

இந்த திரைப்படத்தில் காட்டப்படும் வேற்று கிரகம் முழுக்க தொழில்நுட்ப ரீதியாக வளர்ச்சி அடைந்த போதும் கலையில் மிகவும் மழுங்கி போயித்தான் இருக்கிறது. இதனை சமன் செய்வதற்கு பூமியில் இருந்து பானுமதியை கடத்தில் சென்று பாடல் கற்றுத் தர சொல்கிறார்கள். பானுமதியை காப்பாற்ற அந்த கிரகத்திற்கு செல்லும் எம்.ஜி.ஆர் போலவே அங்கும் ஒரு எம்.ஜி. ஆர் இருக்கிறார். முழுக்க கதை திருப்பங்களும், சுவாரசியங்களும் கலந்து படம் மிகவும் நன்றாக இருக்கும்.  

(6 / 6)

மற்ற கேலரிக்கள்