Mettur Dam: இன்று இரவுக்குள் 3ஆவது முறையாக நிரம்பும் மேட்டூர் அணை! டாக்டர் ராமதாஸ் கொடுக்கும் ’நச்’ ஐடியா!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Mettur Dam: இன்று இரவுக்குள் 3ஆவது முறையாக நிரம்பும் மேட்டூர் அணை! டாக்டர் ராமதாஸ் கொடுக்கும் ’நச்’ ஐடியா!

Mettur Dam: இன்று இரவுக்குள் 3ஆவது முறையாக நிரம்பும் மேட்டூர் அணை! டாக்டர் ராமதாஸ் கொடுக்கும் ’நச்’ ஐடியா!

Dec 31, 2024 04:57 PM IST Kathiravan V
Dec 31, 2024 04:57 PM , IST

  • அணைக்கு வினாடிக்கு 2875 கன அடி தண்ணீர் வரும் நிலையில், அதில் 2000 கன அடி நீரை 2 நாட்களுக்கு திறந்து விட்டாலே இப்போது இணைக்கப்பட்டுள்ள ஏரிகள் நிரம்பி விடும் என மருத்துவர் ராமதாஸ் கூறி உள்ளார். 

தமிழ்நாட்டின் மிகப்பெரிய பாசன ஆதாரமாகத் திகழும் மேட்டூர் அணை  இன்று இரவு  நிரம்பும் என்று எதிர்பாக்கப்படுகிறது.

(1 / 8)

தமிழ்நாட்டின் மிகப்பெரிய பாசன ஆதாரமாகத் திகழும் மேட்டூர் அணை  இன்று இரவு  நிரம்பும் என்று எதிர்பாக்கப்படுகிறது.(Vertigo_Warrior (Twitter))

மொத்தம் 120 அடி நீர்மட்டம் கொண்ட மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 119.97 அடியாக உள்ளது. 

(2 / 8)

மேட்டூர் அணைக்கு வினாடிக்கு  2875 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

(3 / 8)

மேட்டூர் அணை அதன் முழுக் கொள்ளளவை எட்டிய பிறகு , உபரி நீரை சேலம் மாவட்ட ஏரிகளுக்கு அனுப்பி நிரப்ப வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்து உள்ளார். 

(4 / 8)

அணை நிரம்பிய பிறகு கூடுதலாக கிடைக்கும் தண்ணீரை ஏரிகளுக்கு அனுப்புவது தான் பயனுள்ளதாக இருக்கும். இந்தத் திட்டத்தால் யாருக்கும், எந்த பாதிப்பும் ஏற்படாது. இத்திட்டத்தின்படி மொத்தமுள்ள 100 ஏரிகளையும் நிரப்ப வேண்டும் என்றால் கூட, 0.555 டி.எம்.சி தண்ணீர்தான் தேவைப்படும் என மருத்துவர் ராமதாஸ் கூறி உள்ளார். 

(5 / 8)

அணைக்கு வினாடிக்கு 2875 கன அடி தண்ணீர் வரும் நிலையில், அதில் 2000 கன அடி நீரை 2 நாட்களுக்கு திறந்து விட்டாலே இப்போது இணைக்கப்பட்டுள்ள ஏரிகள் நிரம்பி விடும் என அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறி உள்ளார். 

(6 / 8)

பா.ம.க. வலியுறுத்திய மேட்டூர் உபரி நீர் திட்டம் என்பது சேலம் மாவட்டத்திலுள்ள திருமணிமுத்தாறு, சரபங்கா ஆகிய ஆறுகளை இணைத்து, மேட்டூர் அணையின் உபரி நீரை நீரேற்று நிலையங்கள் மூலம் அந்த ஆறுகளுக்குக் கொண்டுசென்று, சேலம், நாமக்கல், திருச்சி மாவட்டங்கள் வரை கொண்டுசெல்ல வேண்டும் என அவர் கூறி உள்ளார். 

(7 / 8)

இத்திட்டத்தால் நேரடியாக 30 ஆயிரத்து 154 ஏக்கர் நிலங்களும், நிலத்தடி நீர்வளம் மேம்படுவதன் மூலம் 18 ஆயிரத்து 228 ஏக்கர் நிலங்களும் பாசன வசதி பெறும். இத்திட்டத்தில் வசிஷ்ட நதி என அழைக்கப்படும் வட வெள்ளாற்றையும் இணைத்தால் விழுப்புரம், கடலூர் மாவட்ட விவசாயிகளும் பயனடைவர் என மருத்துவர் ராமதாஸ் கூறி உள்ளார். 

(8 / 8)

மற்ற கேலரிக்கள்