Metti Oli Shanthi: ‘அந்த கிளுகிளுப்பு இருக்கே.. லவ் பண்ணவங்கள கல்யாணம் பண்ணிக்காத சாந்தி..’ - ரஜினி சொன்ன நச் அட்வைஸ்
உடனே அவர் காதலித்தவர்களை கண்டிப்பாக கல்யாணம் செய்து கொள்ளக் கூடாது என்று சொன்னதுடன், அவரை விடுத்து, வேறு யாரையாவது தான் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்று சொன்னார். - ரஜினி சொன்ன நச் அட்வைஸ்
(1 / 7)
Metti Oli Shanthi: ‘அந்த கிளுகிளுப்பு இருக்கே.. லவ் பண்ணவங்கள கல்யாணம் பண்ணிக்காத சாந்தி..’ - ரஜினி சொன்ன நச் அட்வைஸ்
(2 / 7)
படையப்பா திரைப்படத்தில் ரஜினியுடன் பகிர்ந்து கொண்ட சுவாரசியமான அனுபவத்தை, பிரபல டான்ஸ் மாஸ்டரும், நடிகையுமான மெட்டி ஒலி சாந்தி பகிர்ந்து இருக்கிறார்.
ரஜினி சார் பாடலுக்கான ஒத்திகைக்கு வரும் முன்னரே, யாரோ அவரிடம் சொல்லிவிட்டார்கள்.
இது குறித்து அவர் பேசும் போது, “ நான் ரஜினி சாருடன் நிறைய பாடல்களில் இணைந்து நடனமாடி இருக்கிறேன். பாட்ஷா திரைப்படத்தில் தான் முதன்முறையாக நான் அவருடன் இணைந்து ஆடினேன். அப்போது நான் அவரின் வெறித்தனமான ரசிகை என்பதை, ரஜினி சார் பாடலுக்கான ஒத்திகைக்கு வரும் முன்னரே, யாரோ அவரிடம் சொல்லிவிட்டார்கள்.
(3 / 7)
ஆகையால் நான் அவர் வந்தவுடன், அவரைக் கட்டிப்பிடித்து, அவரிடம் நான், அவரின் எப்பேர்பட்ட ரசிகை என்பதைச் சொன்னேன். அதைக்கேட்ட அவர், அப்படியா…அப்படியா… என்று சொல்லி, அவரும் என்னை கட்டி அணைத்துக் கொண்டார்.
சாந்தி நீ யாரையாவது காதலித்திருக்கிறாயா என்று கேட்டார்.
நாங்கள் மிக மிக ஜாலியாக வேலை செய்த பாடல் என்றால், படையப்பா திரைப்படத்தில் ‘சுத்தி சுத்தி வந்தீக’ பாடல் தான். அந்த பாடலில், நானும் அவரும் நன்றாக அறிமுகமாகி இருந்தோம். எங்களுக்குள் நல்ல பழக்கம் இருந்தது.
பாடல் இடைவேளையில் அவர் என்னிடம், சாந்தி நீ யாரையாவது காதலித்திருக்கிறாயா என்று கேட்டார்.
(4 / 7)
உடனே நான் காதலித்து இருக்கிறேன் சார் என்று சொன்னேன். உடனே அவர் காதலித்தவர்களை கண்டிப்பாக கல்யாணம் செய்து கொள்ளக் கூடாது என்று சொன்னதுடன், அவரை விடுத்து, வேறு யாரையாவது தான் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்று சொன்னார்.
(5 / 7)
இதைக் கேட்டவுடன் நான் அதிர்ச்சியாகி விட்டேன். உடனே நான் அவரிடம் ஏன் அப்படி சொல்கிறீர்கள் சார் என்று கேட்டேன். அதற்கு அவர் ஆமாம்.. அப்போதுதான் பின்னாளில் அந்த காதலியை பார்க்கும் பொழுது, வயிற்றுக்குள் ஜில் என்ற ஃபீல் கிடைக்கும்.
(6 / 7)
நிச்சயமாக நாம் காதலித்த பெண்ணை கல்யாணம் செய்து கொள்ளக்கூடாது.
அப்போது, அந்த காதல் வாழுகிறது அல்லவா? சாகவில்லை இல்லையா..? அதற்காகத்தான் அப்படி சொல்கிறேன். நிச்சயமாக நாம் காதலித்த பெண்ணை கல்யாணம் செய்து கொள்ளக்கூடாது.
மற்ற கேலரிக்கள்