Mercury Transit In Aries: பிரிக்கப்போகும் புதன்.. கசக்கிப் பிழிந்து அதிகமாக பணம் சம்பாதிக்கப்போகும் ராசிகள்
- Mercury Transit In Aries: மேஷ ராசியில் புதன் பகவானின் பெயர்ச்சியால் அதிர்ஷ்டம்பெறும் ராசிகள் குறித்துக் காண்போம்.
- Mercury Transit In Aries: மேஷ ராசியில் புதன் பகவானின் பெயர்ச்சியால் அதிர்ஷ்டம்பெறும் ராசிகள் குறித்துக் காண்போம்.
(1 / 7)
Mercury Transit In Aries:ஜோதிடத்தின்படி ஒவ்வொரு கிரகமும், ஒவ்வொரு ராசிக்குப் பெயர்ச்சியாகும்போதும் மூன்று கிரகசேர்க்கை மற்றும் நான்கு கிரக சேர்க்கை ஆகிய கிரகங்களின் சேர்க்கையால், திரிகிரக யோகம் மற்றும் சதுர்கிரக யோகம் போன்ற பல்வேறு யோகங்கள் உண்டாகின்றன.
அப்படி ஏற்படும்போது, யோகங்களின் நல்ல தாக்கம் மற்றும் கெட்ட தாக்கம் ஆகியவை, 12 ராசிகளிலும் உண்டு செய்யும். புதன் பகவான் வரக்கூடிய மே10ஆம் தேதி, மேஷ ராசியில் சஞ்சரிக்கவுள்ளார். புதன் பகவான், பேசும் திறன், மனநிலை, பகுத்து பேசும் தன்மை, அனைத்திற்கும் பொருந்திப்போதல் போன்ற கொள்கைகளை வலுவாகப் பிரதிபலிக்கிறது.
(2 / 7)
அப்படி வரக்கூடிய மே 10ஆம் தேதி, மாலை 6:39 மணிக்கு, புதன் பகவான், மேஷ ராசிக்குப் பெயர்ச்சியாகிறார். இந்தப் பெயர்ச்சியால் ரசாயனத்துறை, மருந்துத்துறை, மின் துறை, சிமெண்ட் துறையில் இருப்பவர்கள் அபரிமிதமான லாபத்தை ஈட்டுவர். புதன் பகவான், வணிகத்திற்கு ஏற்ற காரகன் ஆவார். எலக்ட்ரிக்கல் தொழில் செய்பவர்கள், தேயிலை மற்றும் காபி தொழில் செய்பவர்கள், சிமென்ட் மற்றும் வைரத்தொழில் செய்பவர்கள், கனரக பொறியியல் சார்ந்த தொழில் செய்பவர்கள் புத்துணர்வோடு எழுச்சியினைச் சந்திப்பர்.
தகவல் தொழில் நுட்பத்துறையில் மந்த நிலை மாறி, சற்று எழுச்சியான சூழல் உண்டாகும். பங்குச் சந்தை சாதகம் ஆகும். இசை மற்றும் படைப்பாற்றல் சார்ந்த தொழிலில் இருக்கும் எழுத்தாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்களின் வளர்ச்சி நல்லமுறையில் இருக்கும்.
மேஷத்தில் இந்தப் பெயர்ச்சியினால் சில ராசியினர் நன்மைகளைப் பெறுவர். அந்த ராசிகள் குறித்துக் காண்போம். மேஷத்தில் புதன் பகவான் 21 நாட்கள் சஞ்சரிப்பதால் அதிகளவு நன்மைபெறும் ராசிகள் குறித்துக் காண்போம்.
(3 / 7)
கடகம்: மேஷ ராசியில் புதன் பெயர்ச்சியாவதால், கடக ராசியினர் இழந்த நற்பெயரைப் பெறுவார்கள். வீடு, வீட்டடி மனை, வண்டி வாங்கும் சூழல் ஏற்படும். அலுவலகத்தில் உங்கள் சக அதிகாரிகளிடையே மதிப்பு உயரும்.
(4 / 7)
சிம்மம்: மேஷ ராசியில் புதன் பெயர்ச்சி ஆவது, சிம்ம ராசியினருக்கு, நீண்ட நாட்களாக கிடைக்காமல் இருந்த ஊதிய உயர்வு கிடைக்க வழிசெய்யும். உங்களது எதிரிகளுக்கு முன் தலை நிமிர்ந்து வாழ்வீர்கள். வம்பு, வழக்குகளில் சாதகமான தீர்ப்பு வரும். நிதானத்தைக் கடைப்பிடியுங்கள்.
(5 / 7)
தனுசு: இந்த ராசியினருக்கு புதன் பெயர்ச்சியால், குழந்தையில்லாத தனுசு ராசியினருக்கு நல்ல செய்தி கிட்டும். திருமணம் நடக்காதவர்களுக்கு திருமண நிச்சயம் ஆகும். கடன் பெற்றவர்கள், அதனை அடைப்பர்.
(6 / 7)
கும்பம்: இந்த ராசியினருக்கு புதனின் பெயர்ச்சியால், சம்பள உயர்வு கிட்டும். ஆண்டு வருவாய் அதிகரிக்கும். இந்த காலகட்டத்தில் குடும்பத்தில் நல்ல காரியங்கள் நடக்கும். சண்டை சச்சரவுகள் நீங்கி, குடும்பத்தில் அமைதி நிலவும்.
(7 / 7)
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ ஜோதிடர்கள்/ பஞ்சாங்கங்கள்/ சொற்பொழிவுகள்/ நம்பிக்கைகள்/ வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்
மற்ற கேலரிக்கள்