தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Mercury Rising In Pisces: மீனத்தில் உதயமாகும் புதன்.. காசு விஷயத்தில் கவனமாக இருக்கவேண்டிய ராசிகள்

Mercury Rising In Pisces: மீனத்தில் உதயமாகும் புதன்.. காசு விஷயத்தில் கவனமாக இருக்கவேண்டிய ராசிகள்

Apr 18, 2024 09:46 AM IST Marimuthu M
Apr 18, 2024 09:46 AM , IST

  • Mercury Rising In Pisces: புதன் பகவான் மீன ராசியில் உதிப்பதால் சில ராசியினர் எச்சரிக்கையாக வேண்டும். அப்படி எச்சரிக்கையாக இருக்கவேண்டிய ராசிகள் குறித்துக் காண்போம்.

பகுத்தறிவு மற்றும் சமயோசித உணர்வு ஆகியவற்றின் காரண கர்த்தாவாக விளங்கக் கூடியவர், புதன் பகவான். இவர் தனது ஆளுகையை மிதுனம் மற்றும் கன்னி ராசியில் செலுத்தக் கூடியவர். ஜாதகத்தில் புதன் பகவான் பலவீனமடைந்தால் ஏராளமான பிரச்னைகளை சந்திப்பீர்கள். வரக்கூடிய ஏப்ரல் 19ஆம் தேதியான நாளை, காலை 10:23 மணிக்கு மீன ராசியில் புதன் பகவான் உதித்து வருகிறார். இந்த காலத்தில் சில ராசியினர் மிகப்பெரிய நஷ்டங்களைச் சந்திக்கின்றனர்.

(1 / 8)

மேஷம்: இந்த ராசியினருக்கு புதன் பகவான் மீன ராசியில் உதிப்பதால் வரக்கூடிய வருவாய் வராமல் போகலாம். கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தினை யாரிடமும் வட்டிக்கு ஆசைப்பட்டு கடனாக கொடுத்துவிடாதீர்கள். இக்காலத்தில் கொடுத்தால் கொடுத்த பணத்தை மீட்பது கடினம். இந்த காலத்தில் வரவுக்கு ஏற்ப செலவு செய்யப் பழகுங்கள். இல்லையெல் கடன்படுவீர்கள். உங்களுக்கு வீண் விரயச் செலவுகள் உண்டாகலாம். தொழில் செய்யக்கூடியவர்களுக்கு சுணக்கமான காலகட்டம் என்பதால் வருவாய் குறையும்.

(2 / 8)

மிதுனம்: இந்த ராசியினருக்கு புதன் பகவான் உதிப்பதால் நஷ்டப்படும் சூழல் உண்டாகியுள்ளது. இந்த காலகட்டத்தில் பிறர் கடன் வாங்க ஜாமீன் கையெழுத்துப் போடாதீர்கள். வம்பு, வழக்குகளில் சிக்கும் வாய்ப்பு உள்ளதால், யாரிடமும் தேவையற்ற வீண்சண்டையை வளர்க்காதீர்கள். ஒவ்வொரு செலவினையும் ஆராய்ந்து பார்த்து செலவுசெய்யுங்கள். ஆடம்பரச் செலவுகளைத் தவிருங்கள். தொழில் முனைவோருக்கு இந்த காலத்தில் சரியான லாபம் கிடைக்காது. கடின உழைப்பினைக் கொட்டினாலும் பணம் கிடைப்பதில் பிரச்னை வரலாம்.

(3 / 8)

துலாம்: இந்த ராசியினருக்கு புதன் பகவான், மீன ராசியில் உதித்து வருவதால் கடன் வாங்கும் சூழல் உண்டாகும். இருந்த பொருட்களை இழக்கும் சூழல் ஏற்படும். தேவையற்ற மனப் பதற்றத்திற்கு ஆளாவீர்கள். உங்கள் தொழிலில் போட்டியாளர்கள் அதிகம் உருவெடுப்பார்கள்.

(4 / 8)

விருச்சிகம்: இந்த ராசியினருக்கு புதன் பகவான், மீன ராசியில் உதித்து வருவதால், உங்களின் பணிச்சுமை கூடும். திடீர் செலவுகள் அதிகரிக்கும். இதனால் அதனை சமாளிக்க முடியாமல் அல்லாடுவீர்கள். பொருளாதார ரீதியிலான தன்னிறைவினைப்பெற மாட்டீர்கள்.

(5 / 8)

தனுசு: இந்த ராசியினருக்கு புதன் பகவான், மீன ராசியில் உதித்து வருவதால், பண விஷயத்தில் இக்கட்டான சூழல் உண்டாகும். உயர்ந்த நிலையில் தொழில் செய்தவர்கள் நஷ்டப்பட்டு தாழ்ந்த நிலைக்குச் செல்வீர்கள். எந்தவொரு விஷயத்திலும் முடிவு எடுக்கும் முன் ஒரு தடவைக்கு இரு தடவை ஆலோசனை செய்து முடிவு எடுப்பது முக்கியம். நமக்கு வருவாயாக கிடைக்கும் ஒவ்வொரு தொகையையும் நிதானித்து செலவழிப்பது முக்கியமானது.

(6 / 8)

கும்பம்: இந்த ராசியினருக்கு புதன் பகவான் மீன ராசியில் உதித்து வருவதால், பொருளாதாரத்தில் சிக்கல் எழலாம். மேலும், இக்காலத்தில் வங்கியிலோ அல்லது அஞ்சலகங்களிலோ சேமிப்புக் கணக்கினைத் தொடங்கி, சேமிக்கத் தொடங்குங்கள். இல்லையென்றால், கையில் இருக்கும் பணத்தை இழப்பீர்கள்.

(7 / 8)

பொறுப்புத் துறப்பு:இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

(8 / 8)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்