தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Mercury - Rahu Combination In Pisces After 18 Years Lucky Signs

Mercury - Rahu: 18 வருஷத்துக்குப் பின் ஜோடி போடும் புதன் - ராகு.. பக்காவான வெற்றி பெறும் ராசிகள்!

Feb 21, 2024 09:16 PM IST Marimuthu M
Feb 21, 2024 09:16 PM , IST

  • 2006ஆம் ஆண்டுக்குப் பின், வக்கிரமாக இருக்கும் ராகுவும், பகுத்தறிவுக்கு உதவும் புதன் பகவானும் மீன ராசியில் இணைகின்றனர்.

இந்த ராகு மற்றும் புதன் இணைவால் மகிழ்ச்சியைப் பெறப்போகும் ராசிகள் குறித்துக் காண்போம்.

(1 / 7)

ரிஷபம்: இந்த ராசியினருக்கு புதன் - ராகு சேர்க்கையால் குடும்ப உறுப்பினர்களிடையே இருந்த சண்டை சச்சரவுகள் நீங்கும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் கிடைக்கும். பணியில் சக அலுவலர்களிடையே இருந்த பிரச்னைகள் நீங்கும். நீங்கள் முதலீடு செய்திருந்தால் நல்ல லாபத்தைப் பெறும் காலம் இது. 

(2 / 7)

கடகம்: இந்த ராசியினருக்கு புதன் - ராகு சேர்க்கையால், கணவன் - மனைவி இடையே இருந்த சண்டை சச்சரவுகள் நீங்கும். மனதுக்கு வலுதரும்  நல்ல பயணங்களைப் புரிவீர்கள். எதிரிகளால் இருந்த தொல்லைகள் குறையும். புதிய வியாபாரம் மற்றும் முதலீட்டை அதிகப்படுத்தினால் நன்மை கிட்டும். 

(3 / 7)

சிம்மம்: இந்த ராசியினருக்கு புதன் - ராகு சேர்க்கையால்,வெகுநாட்களாகத் திருமணம் நடக்காதவர்களுக்கு திருமணம் கைகூடும். கடனை அடைப்பீர்கள். தன்னம்பிக்கை கூடுவதால், செய்யும் வேலையைத் தெளிவாக செய்வீர்கள். குடும்பத்தில் அந்நியோன்யம் அதிகரிக்கும். 

(4 / 7)

விருச்சிகம்: இந்த ராசியினருக்கு புதன் - ராகு சேர்க்கையால், கணவன் - மனைவி இடையே இருந்த பிரச்னை நீங்கும். பகட்டு வாழ்க்கைக்காக பணத்தைச்செலவழித்துவிட்டு பின் வருத்தப்படுவீர்கள். எதையும் நிதானத்துடன் செய்தால் நல்ல பதவி வந்துசேரும். திறமையை சரியாகப் பயன்படுத்தினால் வெற்றியைப் பெறுவீர்கள்.

(5 / 7)

விருச்சிகம்: இந்த ராசியினருக்கு புதன் - ராகு சேர்க்கையால், கணவன் - மனைவி இடையே இருந்த பிரச்னை நீங்கும். பகட்டு வாழ்க்கைக்காக பணத்தைச்செலவழித்துவிட்டு பின் வருத்தப்படுவீர்கள். எதையும் நிதானத்துடன் செய்தால் நல்ல பதவி வந்துசேரும். திறமையை சரியாகப் பயன்படுத்தினால் வெற்றியைப் பெறுவீர்கள்.(Freepik)

மீனம்: இந்த ராசியினருக்கு புதன் - ராகு இணைவால் பணித்திறன் கூடும். பணியிடத்தில் நல்ல பெயர் கிடைக்கும். வெகுநாட்களாக கனவுகண்டதைக் கையில் பெறுவீர்கள். எதிரிகளின் உள்ளடிகளைத் தடுத்து நிறுத்துவீர்கள். பணி வாழ்வும் தொழில் வாழ்வும் சமமாக வளம் பெறும். 

(6 / 7)

பொறுப்புத் துறப்பு:இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

(7 / 7)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்