Sperm Health: அதிகரிக்கும் ஆண் மலட்டுத்தன்மை.. விந்துணுக்களின் ஆரோக்கியம், தரத்தை அதிகரிக்க தவறாமல் செய்ய வேண்டியவை
Sperm Health: சமீப காலமாக ஆண்கள் அதிக மலட்டுத்தன்மை பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர். விந்தணுக்களின் தரம் இல்லாததால் கரு உருவாக்குவதில் சிக்கல் ஏற்படுகிறது. இதற்காக மருத்துவரை அணுகுவதை காட்டிலும் ஆரோக்கியமான பழக்கவழக்கங்களில் ஈடுபடுத்தி கொண்டால் விந்தணுக்களின் தரம் மேம்படும்
(1 / 6)
மோசமான வாழ்க்கை முறை, முறையற்ற உணவு பழக்கம் ஆண்களின் விந்தணுக்களின் தரத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இது ஆண் மலட்டுத்தன்மை பிரச்னையை அதிகரிக்கிறது. ஆரோக்கியமான விந்தணுக்கள் கரு உருவாவதற்கு உதவுகிறது. தரமான விந்தணு ஒருவரின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் பிரதிபலிக்கிறது. ஒரு ஆணின் விந்தணுக்களின் எண்ணிக்கை குறையும் போது, பெண் கருத்தரிப்பது கடினமாகிவிடும்
(2 / 6)
மொபைல் போன்கள் பயன்பாடு: ஆண்கள் தங்கள் பேண்ட் பைகளில் ஸ்மார்ட்போன்களை வைப்பது இயல்பான விஷயம்தான் என்றாலும், அவ்வாறு செய்வதால் விந்தணுக்களின் தரம் பாதிக்கப்படுவது பலருக்கும் தெரியாது. செல்போன்களில் இருந்து வெளிவரும் மின்காந்த கதிர்வீச்சு விந்தணுக்களின் தரத்தை மோசமாக்குகிறது என்று பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே, ஆண்கள் எந்த காரணத்துக்காகவும் தங்கள் மொபைல் போன்களை பேண்ட்களில் வைத்திருக்கக்கூடாது
(3 / 6)
மடிக்கணினி பயன்பாடு: வீட்டிலிருந்தே வேலை செய்யும் நடைமுறை தற்போது அதிகரித்துள்ள நிலையில், ஆண்கள் பலரும் தங்கள் மடிக்கணினிகளை மடியில் வைத்து வேலை செய்கிறார்கள். மடிக்கணினியில் வரும் வெப்பத்தின் தாக்கம் விந்தணுக்களின் தரத்தை மோசமாக்கும். எனவே மடிக்கணினியை மடியில் வைத்து வேலை செய்வதைத் தவிர்க்கவும். அதேபோல் அடிக்கடி வெந்நீரில் சூடான குளியல் எடுப்பதைத் தவிர்க்கவும்
(4 / 6)
உடலில் தண்ணீர் பற்றாக்குறை அல்லது நீரிழப்பு ஆண்களின் விந்தணுக்களின் தரத்தையும் பாதிக்கிறது. எனவே, ஆண்கள் ஒவ்வொரு நாளும் குறைந்தது 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். உடலில் நீரேற்றத்தை நன்கு பராமரிப்பது விந்தணு உற்பத்திக்கு உதவுகிறது. அதிக தண்ணீர் குடிப்பது விந்தணுக்களின் தரத்தை மேம்படுத்துவதோடு, அதன் எண்ணிக்கையை அதிகரிக்க உதவுகிறது
(5 / 6)
மது மற்றும் சிகரெட்டுகளை தவிர்த்தல்: சிகரெட் புகைத்தல் மற்றும் அதிகப்படியான மது அருந்துதல் விந்தணுக்களின் தரத்தை மோசமாக்கும். இது மட்டுமல்லாமல், மது மற்றும் சிகரெட் ஆண்களின் கருவுறுக்குதல் தன்மையையும் குறைக்கும். எனவே இந்த பழக்கங்களை தவிர்க்கவும்
மற்ற கேலரிக்கள்