'வெள்ளந்தியான மனிதர்கூட வாழ்றது ரொம்ப ஆனந்தம்.. கொஞ்சம் கஷ்டமும் கூட': மெய்யழகன் பட இயக்குநர் சி.பிரேம் குமார்
- ‘இரவில் எல்லோரும் தூங்கி இருப்பாங்க. நாம் உரையாடத்தேவையில்லை. அது நமக்கான நேரமாக இருக்கும். இப்போது அதை சரி பண்ணிக்கிட்டு வரேன். மனிதர்கள் கூடவும் உரையாட ஆரம்பிச்சிட்டேன்’ என இயக்குநர் சி.பிரேம் குமார் கூறியிருக்கிறார்.
- ‘இரவில் எல்லோரும் தூங்கி இருப்பாங்க. நாம் உரையாடத்தேவையில்லை. அது நமக்கான நேரமாக இருக்கும். இப்போது அதை சரி பண்ணிக்கிட்டு வரேன். மனிதர்கள் கூடவும் உரையாட ஆரம்பிச்சிட்டேன்’ என இயக்குநர் சி.பிரேம் குமார் கூறியிருக்கிறார்.
(1 / 6)
மெய்யழகன் திரைப்படத்தின் இயக்குநர் சி.பிரேம் குமாருக்கு, அண்மையில் பிஹைண்ட்வுட்ஸ் நிறுவனம், விருது கொடுத்தது. அதன் விழாமேடையில் அப்படத்தின் இயக்குநர் பிரேம் குமாரிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு, அவர் பதில் அளித்திருக்கிறார். அதன் தொகுப்பினைக் காணலாம். இந்த வீடியோ மார்ச் 28ஆம் தேதி, பிஹைண்ட் வுட்ஸ் யூடியூப் சேனலில் வெளியானது.
'ரியல் மெய்யழகன் உங்களுக்காக வந்திருக்காங்க?
ரியல் மெய்யழகனை அறிமுகப்படுத்த வேண்டியது என் கடமை. மெய்யழகன் ஒருத்தர் இருக்கமுடியுமான்னு சந்தேகத்தை ஆச்சரியத்தில் கேட்டாங்க. சாட்சி இவங்க இரண்டு பேர் தான். மருது பாண்டி வந்து, ஃபிலிம் இன்ஸ்டியூட்டில் என் கூட படிச்சவர். நெருங்கிய நண்பர். அசுரவதம் படத்தின் இயக்குநர். நான் பார்த்து ஆச்சரியப்படுத்தக்கூடிய எழுத்தாளர். முத்து அண்ணன், என் குடும்பத்தில் ஒருத்தர்னு சொல்லலாம். எங்க வீட்டுக்கு எலக்ட்ரீசியன் மற்றும் பிளம்பர். பல இன்டர்வியூஸில் அவருடைய சேட்டையைப் பற்றி நான் சொல்லியிருக்கிறேன்.இவங்க இரண்டு பேரும் தான், மெய்யழகன் கதாபாத்திரத்தை எழுத முக்கியமான காரணங்கள். இவங்க இரண்டு பேர்கிட்டேயும் அவ்வளவு வருஷம் கழித்தும் குழந்தைத்தனம் இன்னும் உயிர்ப்புடன் இருக்கு.
வெள்ளந்தியான மனிதர்கூட வாழ்றது எவ்வளவு ஆனந்தமான அனுபவம்?
ரொம்ப ஆனந்தம். கொஞ்சம் கஷ்டமும் கூட. இரண்டுபேரையும் சமாளிக்கவே முடியாது. நம்மள நம்முடைய குழந்தைப் பருவத்துக்குக் கூட்டிட்டுப் போயிடுவாங்க'.
(2 / 6)
'அடுத்து என்ன படம்?
இரண்டு கதைகள் எழுதிட்டு இருக்கேன். ஒன்று, பெரும்பாலும் முடிச்சிட்டேன். இன்னொரு கதையும் எழுதிட்டு இருக்கேன். இனிமேல் தான் முடிவு எடுக்கணும். 96 படத்துடைய இரண்டாம் பாகம் எழுதிட்டேன். ராம், ஜானு, சுபா எல்லாரும் இருக்காங்க.
மெய்யழகன் படத்தை மக்கள் கொண்டாடித் தீர்த்து இருக்காங்க? உங்களுக்கு எப்படி அது ஃபெர்ஷனலாக ஃபீல் ஆகுது?
இந்த ரெஸ்பான்ஸ் எதிர்பார்க்கல. சந்தோஷமாக இருக்கு. இந்தப் படத்துக்கான எஃபர்ட் ஆரம்பத்தில் இருந்தே வித்தியாசமாக இருந்தது. வழக்கமானது மாதிரி இல்லை. அதற்கு மியூஸிக் கம்போஸ் பண்ணுனது ஆகட்டும், நடிகர்களைத் தேர்வு செய்தது ஆகட்டும், எங்களுக்கு ஒரு புது அனுபவம். அதே மாதிரி தான், ஆடியன்ஸோட ரெஸ்பான்ஸும் ரொம்ப வித்தியாசமாக இருந்தது'.
(3 / 6)
'அரவிந்த் சுவாமி நடிக்கும்போது அவங்களுக்கு ஜோடியாக, ஏன் தேவதர்ஷினி இருக்கணும்னு நினைச்சீங்க?
அவங்க தான் இருக்கணும் என்பதில் நான் பிடிவாதமாக இருந்தேன். ஆரம்பத்தில் எனக்குள் இருந்த தயக்கம் என்னன்னா, 96 படத்தில் நடிச்சிட்டாங்க. மீண்டும் அவங்களை இந்தப் படத்தில் நடிக்க வைக்கணுமா. இல்லை புது நடிகர்கள்கிட்ட போகலாமான்னு ஒரு குழப்பம் இருந்தது. எங்க டைரக்ஷன் டீம்கிட்டேயும் சொல்றப்போ, தேவதர்ஷினி மேம் மாதிரி ஒருத்தவங்க வேணும்னு சொல்லியிருந்தேன். அவங்களும் ஒரு வாரம்பார்த்திட்டு, அவங்களையே கூப்பிட்டிறலாம்ன்னு சொன்னாங்க. சரி நானும் அவங்கள கூப்பிடலாம்ன்னு சொல்லிட்டேன். தேவதர்ஷினி மேமை கூப்பிடணும் என்பது எழுதி முடிச்சதும் எடுத்த முடிவு'.
(4 / 6)
'ஒவ்வொரு கதை சொல்லிக்கும் ஒரு பாணி உண்டு. ஆனால் இரண்டு பேரின் உரையாடலை கதையாக சொல்லமுடியும் என்பது என்ன வித்தை?
எனக்குத் தெரியலை. இந்தக் கேள்வியைப் பலரும் கேட்டிருக்காங்க. இதை துணிச்சல்னு சொல்லமாட்டேன். விஜய்சேதுபதி ஒரு தடவை சிரிச்சிட்டார். செம்பருத்தி செடியில் செம்பருத்தி தானே பூக்கும். எனக்கு இயல்பாக இது தான் வருது. டைரக்ஷன் பண்றதுக்கு முன்னாடி, எனக்கு சரியாகப் பேச வராது. பேசக் கத்துக்கிட்டதே டைரக்ஷன் பண்ணித்தான்'.
(5 / 6)
சொந்த ஊரில் ரூம் போட்டு தங்கியிருக்கேன் என்னும் வசனம் எல்லாம் எப்படி உள்ளே கொண்டு வந்தீங்க?
எனக்கு அந்த மாதிரி நடந்தது சார். 99-ல் ஊரை விட்டு சென்னைக்கு வந்திட்டேன். என்னுடைய நண்பர்கள் எல்லாம் பி.ஜி.முடிச்சிட்டு தஞ்சாவூர் வர்றாங்க. நான் போயிட்டேன். போய் இறங்குறவரை தெரியாது. எனக்கு தங்குறதுக்கு இடமில்லைன்னு. சரின்னு ஒரு லாட்ஜில் ரூம் போட்டு தங்கினேன். அட்ரஸ் எழுதச்சொல்லும்போதுகூட, தஞ்சாவூர் அட்ரஸ் தான் எழுதுறேன்.பிறகு அவங்க சொன்னவுடன், அதை அழிச்சிட்டு சென்னை அட்ரஸ் எழுதுறேன். சொந்த ஊரில் ரூம் போட்டு தங்கியது ரொம்ப வலிமிக்க அனுபவம். அதைத்தான் ஒரு வரியாக சொன்னது. கனெக்ட் ஆகுறவங்க, கனெக்ட் பண்ணிப்பாங்க.
(6 / 6)
'பெரும்பாலான காட்சிகள் இரவு நேரக்காட்சிகளாகவே இருக்கு. நீங்கள் இரவு நேரக் காதலனா?
இரண்டு மூணு கதைகள் இரவில் நடக்கிற மாதிரி இருக்கு சார். இரவு பிடிக்கிறதுக்கு நல்ல காரணமாக இருக்காது. இரவில் எல்லோரும் தூங்கி இருப்பாங்க. நாம் உரையாடத்தேவையில்லை. அது நமக்கான நேரமாக இருக்கும். இப்போது அதை சரி பண்ணிக்கிட்டு வரேன். மனிதர்கள் கூடவும் உரையாட ஆரம்பிச்சிட்டேன். இன்னொன்று, பூனைகளும் காரணம். 10 வருஷமாக இருக்குது. பூனைகள் இரவில் தூங்காது. அதுகூட இருக்கிறது சுவாரஸ்யமாக இருக்கும். சென்னை வந்து இரவில் ரொம்ப அழகாக இருக்கும். அந்த அழகு பகலில் எங்கு போச்சுன்னு இருக்கும்'.
நன்றி: பிஹைண்ட்வுட்ஸ்
மற்ற கேலரிக்கள்