தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Manivannan Death: மனைவி கொடுத்த மாரடைப்பு.. ‘அண்ணன் குடியால சாகல.. - மணிவண்ணன் சகோதரி பேட்டி!

Manivannan Death: மனைவி கொடுத்த மாரடைப்பு.. ‘அண்ணன் குடியால சாகல.. - மணிவண்ணன் சகோதரி பேட்டி!

Nov 18, 2023 05:48 PM IST Kalyani Pandiyan S
Nov 18, 2023 05:48 PM , IST

மணிவண்ணன் இறப்பு குறித்து அவரது சகோதரி பேசி இருக்கிறார். 

மணிவண்ணன் சகோதரி பேட்டி!

(1 / 6)

மணிவண்ணன் சகோதரி பேட்டி!

இது குறித்து பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு பேட்டியளித்த மணிவண்ணன் சகோதரி, “மணிவண்ணன் அண்ணா இறப்பதற்கு இரண்டு வாரங்களுக்கு முன் சேரிலிருந்து கீழே விழுந்துவிட்டார். அப்படி விழுந்ததில் ஏதாவது பிரச்சினைகள் ஏற்பட்டிருக்குமா என்று நாங்கள் மருத்துவமனைக்கு சென்று, பல்வேறு சோதனைகளை எடுத்துப் பார்த்தோம். ஆனால் அதில் எல்லாமே நார்மலாக  இருப்பதாகதான் வந்தது.  . 

(2 / 6)

உண்மையில் மணிவண்ணன் அண்ணாவுக்கு முதுகுத்தண்டில் பிரச்சினை இருந்தது. அதனால் அவர் நடப்பதற்கு கொஞ்சம் சிரமப்பட்டார். முதுகுத்தண்டில் கிட்டத்தட்ட 3 அறுவை சிகிச்சைகள் அவருக்கு நடந்தன. ஆனால் அதன் பின்னர் நடப்பதில் பிரச்சினை இருந்தாலும், மற்றபடி அவருக்கு எந்த பிரச்சினையும் இல்லை. அண்ணிக்கு கடந்த 2004 ஆம் ஆண்டு கேன்சர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.   

(3 / 6)

கிட்டதட்ட 10 வருடங்களாக அவர் அந்த நோயுடன் போராடிக் கொண்டிருந்தார். இடையில் கொஞ்சம் நார்மலாக ஆகினார். ஆனால் ஒரு கட்டத்தில் அவரது உடல் நிலை மோசமானது. மருத்துவர்கள் அழைத்து இன்னும் இரண்டு மாதங்கள் மட்டுமே அவர் உயிரோடு இருப்பார் என்று அண்ணனிடம் மட்டும் சொல்லி இருக்கிறார்கள். அதை அண்ணாவால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.   

(4 / 6)

அண்ணாவுக்கு அண்ணியின் மீது அளவு கடந்த பிரியம் இருந்தது. ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட நூறு முறையாவது அண்ணியை செங்கமலம், செங்கமலம் என்று சொல்லிக் கொண்டே இருப்பார். அவர் இன்னும் சிறிது காலம் தான் வாழப் போகிறார் என்ற செய்தியை, தன்னுடைய நண்பர் ஒருவருக்கு மட்டும் சொல்லி கதறி அழுத்திருக்கிறார் அண்ணன்.  

(5 / 6)

அந்த துயரம் தான் அவருக்கு மாரடைப்பை உருவாக்கி, உயிரையே கொண்டு சென்று விட்டது. அண்ணா ஜூன் 15 அன்று இறந்தார் அண்ணி ஆகஸ்ட் 16ஆம் தேதி இறந்தார். ஆனால் இங்கு அவர் குடியால் தான் உயிரை விட்டார் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அதில் உண்மையில்லை. அவருக்கு கல்லீரலில் பிரச்சினை வந்த உடனே, அந்த குடிப்பழக்கத்தை அவர் தூக்கி போட்டு விட்டார். ஆனால் அண்ணி இறந்து விடுவார் என்று சொன்ன அந்த ஒரு விஷயத்தை அவரால் தாங்க முடியவில்லை. அதனால் கடைசி இரண்டு மாதங்கள் அவர் குடித்துக் கொண்டுதான் இருந்தார்.” என்று பேசினார்

(6 / 6)

மற்ற கேலரிக்கள்