Manickam narayanan: ‘அஜித் ஒன்னா நம்பர் திருடன்.. விஜய் அப்படி கிடையாது’ - மாணிக்கம் நாராயணன் விளாசல்!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Manickam Narayanan: ‘அஜித் ஒன்னா நம்பர் திருடன்.. விஜய் அப்படி கிடையாது’ - மாணிக்கம் நாராயணன் விளாசல்!

Manickam narayanan: ‘அஜித் ஒன்னா நம்பர் திருடன்.. விஜய் அப்படி கிடையாது’ - மாணிக்கம் நாராயணன் விளாசல்!

Jun 02, 2024 03:31 PM IST Kalyani Pandiyan S
Jun 02, 2024 03:31 PM , IST

Manickam narayanan: அவரது படத்திற்கு ஓப்பனிங் இருக்கும். ஆனால், வியாபாரம் ஆகுமா ஆகாதா என்பது தெரியாது. சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தில் இவர் விவேகம் திரைப்படத்தில் நடித்திருந்தார் - மாணிக்கம் நாராயணன் விளாசல்!

Manickam narayanan: ‘அஜித் ஒன்னா நம்பர் திருடன்.. விஜய் அப்படி கிடையாது’ - மாணிக்கம் நாராயணன் விளாசல்!

(1 / 7)

பிரபல தயாரிப்பாளரான மாணிக்கம் நாராயணன் அஜித் குறித்து ஆகாயம் சினிமாஸ் சேனலுக்கு பேட்டி கொடுத்திருக்கிறார்.அஜித்திற்கு மார்க்கெட் கிடையாதுஇது குறித்து அவர் பேசும் போது, “விஜய்க்கு இருக்கும் மார்க்கெட் அஜித்திற்கு கிடையாது. அஜித்திற்கு நிச்சயமாக ஓப்பனிங் இருக்கிறது. ஆனால் விஜய்க்கு கிடைக்கும் நீண்ட தூர வசூல் வேட்டை அஜித்திற்கு கிடைக்கவில்லை. அவர் அண்மையில் நடித்த படங்களில் மிகப்பெரிய ஹிட் ஆகி, அதிக நாட்கள் ஓடியது என்றால், அது விசுவாசம் திரைப்படம். விசுவாசம் திரைப்படத்தில் நயன்தாரா நடிப்பும் முக்கியப்பங்கு வகித்து இருந்தது. 

(2 / 7)

இன்னொன்று, அந்த படத்தின் எமோஷன் மக்களோடு நன்றாக கனெக்ட் ஆகிவிட்டதால், அந்த படம் ஓடியது. அது போன்ற படங்கள் அவருக்கு 5 படங்களுக்கு ஒரு முறை அல்லது 10 படங்களுக்கு ஒரு முறை தான் அமையும். துப்பாக்கியை மட்டும் வைத்துதான் அவர் படங்களில் துப்பாக்கியை மட்டும் வைத்து சுட்டுக் கொண்டே இருக்க வேண்டியதுதான். சில சமயங்களில் திரைக்கு வெளியே கூட அவரது துப்பாக்கிகள் விழுந்து விடுகின்றன.(கிண்டலாக) அஜித்தை யாரும் அழைத்து படம் எடுக்க மாட்டார்கள். இவராகத்தான் சென்றுதான் அவருக்கான படத்தை கமிட் செய்வார். அஜித்தை விரும்பி செல்கிறவர்கள் மிக மிகக் குறைவு. காரணம் என்னவென்றால், அவர் முன்னமே தனக்கான பணத்தை வாங்கிக் கொள்வார்.   

(3 / 7)

அவரது படத்திற்கு ஓப்பனிங் இருக்கும். ஆனால், வியாபாரம் ஆகுமா ஆகாதா என்பது தெரியாது. சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தில் இவர் விவேகம் திரைப்படத்தில் நடித்திருந்தார்.அந்த படம் தோல்வியடைந்த காரணத்தினால்தான் அந்த பேனருக்கு அவர் மீண்டும் விசுவாசம் படத்தில் நடித்துக் கொடுத்தார். அஜித்தை வைத்து சத்யஜோதி பிலிம்ஸ் அல்லது போனி கபூர் தவிர்த்து வேறு யார் படம் எடுப்பார் சொல்லுங்கள் பார்ப்போம். 

(4 / 7)

ரத்னத்தை அவர் சாய்பாபா கோயிலுக்கு சென்று  சந்தித்து என்னை வைத்து படம் எடுங்கள் என்று கெஞ்சியதாக சொல்லப்படுகிறது. அவர்களும் இவ்வளவு பெரிய ஸ்டார், இவ்வளவு கீழ் இறங்கி வந்து கேட்கும் பொழுது படம் எடுக்க ஒத்துக் கொள்கிறார்கள். 

(5 / 7)

எல்லோரும் ஒரு நடிகனை ரோட்டில் பார்த்தால் அவரது கிளாமருக்கு மயங்குகிறார்கள் அல்லவா?  அதேபோலத்தான் தயாரிப்பாளர்களும் மயங்கி விடுகிறார்கள். அவர்களாகத்தான் தெரிந்து கொள்ள வேண்டும். 

(6 / 7)

இல்லை என்றால் அந்த மயக்கம் தீராது. ரத்னத்துடன் பிரச்சினை ஆனவுடன் அஜித் போனி கபூருக்கு  வாய்ப்பை கொடுத்தார். அஜித்தால் பத்து தயாரிப்பாளர்களை கூட பிடிக்க முடியவில்லை. சக்கரவர்த்தியுடன் அவர் நீண்ட நாட்களாக பயணித்து வந்தார். அவருடன் பிரச்சினை ஏற்பட்ட உடன் தயாரிப்பாளரை மாற்றி விட்டார். சக்கரவர்த்தி மிகவும் நல்லவர். ஆனால் அஜித் ஒன்னா நம்பர் திருடன்” என்று பேசினார். 

(7 / 7)

மற்ற கேலரிக்கள்