மாதவிடாய் காலத்தில் கோயில்களுக்கு போனா தீட்டா?.. யார் சொன்னா?.. உண்மை காரணம் இதுதான்! - மாளவிகா அவினாஷ்!
மாதவிடாய் காலங்களில் பெண்கள் கோயில்களுக்குச் செல்லும் பொழுது, இரண்டு சக்தி நிலைகளும் மோதுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. அதனால்தான் மாதவிடாய் காலங்களில் கோயிலுக்கு செல்ல வேண்டாம் என்று பெரியோர்கள் கூறினார்கள். ஆனால், - மாளவிகா அவினாஷ்!
(1 / 5)
பாலச்சந்தர் இயக்கிய அண்ணி சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை மாளவிகா அவினாஷ். தொடர்ந்து சினிமாவில் கால் பதித்த அவர் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தார். அதன் பின்னர் சீரியல் பக்கம் சென்றவர் பல்வேறு சீரியல்களில் நடித்தார்.கே.ஜி. எப் திரைப்படத்தில் இவர் ஏற்று நடித்திருந்த கதாபாத்திரம் அனைவரையும் கவனிக்க வைத்தது. பிரபல நடிகர் அவினாஷை திருமணம் செய்து கொண்ட இவருக்கு கால்வி என்ற மகன் இருக்கிறான். அவர் ஒரு மாற்றுத்திறனாளி. அவர் குறித்து, மாளவிகா அவினாஷ்கலாட்டா பிங்க் யூடியூப் சேனலுக்கு கொடுத்த பேட்டியில் பேசி இருக்கிறார். இது குறித்து அவர் பேசும் போது, "எனக்கு வரலட்சுமி என்ற ஒரு கலைஞர்தான் மாசாணி அம்மனை அறிமுகப்படுத்தினார். இவன் பிறந்த நேரம். அவனுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தது. அப்போது நீ அவளிடம் சென்று கேள். மாசாணி அம்மன் உனக்குத் தேவையானவற்றை செய்து கொடுப்பார் என்று கூறினார்.
(2 / 5)
மாசாணி அம்மன் அருள் இதையடுத்து நாங்கள் அவளை சென்று சந்தித்தோம். இப்போது அவன் ஓரளவுக்கு நன்றாக மாறி இருக்கிறான். ஆரம்பத்தில் அவனால் பேச முடியாது. பேச்சு வரவில்லை என்பதற்காக, நாம் முயற்சி செய்யாமல் இருக்க முடியாது; நடக்க முடியாது என்பதற்காக அது நடப்பதற்கு தேவையான முயற்சிகளை நாம் எடுக்காமல் இருக்க முடியாது.அப்படித்தான் பார்க்கிறேன். அந்த விஷயத்தை நான் அப்படித்தான் பார்க்கிறேன். நரசிம்மர்தான் எங்களுடைய குலதெய்வம் இந்த குலதெய்வம் திருச்சிக்கு அருகில் உள்ள சிறிய கிராமத்தில் இருக்கிறது. இங்கு இருக்கிறவர்கள் கன்னடம் பேசுகிறார்கள். திருச்சிக்கும்,கன்னடத்திற்கும் என்ன சம்பந்தம் என்று எனக்கு இப்போது வரை தெரியவில்லை.
(3 / 5)
தன்வந்திரி கடவுளும் எங்கள் வீட்டில் இருக்கிறது. ஆயுர்வேதத்திற்கு அடிப்படை கடவுள் அவர்தான். அவர்தான் மாதவிடாய் எல்லாம் தீட்டு இல்லை என்று சொன்னதாக கேட்கிறீர்கள். எந்த கடவுளுக்குமே பெண்களுக்கு ஏற்படக்கூடிய மாதவிடாய் தீட்டு கிடையாது. அதற்கு உண்மையான அறிவியல் காரணம் என்பது வேறு.
(4 / 5)
காரணம் என்ன?எப்போதுமே நம்முடைய உடலின் சக்தியானது மேல்நிலை நோக்கி செல்ல வேண்டும். அதாவது கடவுளை நோக்கி அந்த சக்தியை செல்ல வேண்டும். பெண்களின் மாத விடாய் காலங்களில், அவர்களது சக்தியானது கீழ் நோக்கிச் செல்லும். கோயிலில் சக்தி நிலையானது மேல் நோக்கிச் செல்லும். அப்படி இருக்கும் பொழுது மாதவிடாய் காலங்களில் பெண்கள் கோயில்களுக்குச் செல்லும் பொழுது, இரண்டு சக்தி நிலைகளும் மோதுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. அதனால்தான் மாதவிடாய் காலங்களில் கோயிலுக்கு செல்ல வேண்டாம் என்று பெரியோர்கள் கூறினார்கள். ஆனால், காலப்போக்கில் அது மாறி தீட்டு என்று ஆகிவிட்டது. யோகாவிலும் இதுதான் நடக்கிறது; இதுதான் உண்மையான அர்த்தம்.
மற்ற கேலரிக்கள்