51 வயது.. 39 வயது போனி கபூர் மகனுடன் லிவ்-இன்.. சிக் உடலுடன் கிக் ஏத்தும் மலைக்கா அரோராவின் யோகா பயிற்சிகள்
- பார்த்ததும் சூடேற்றும், மலைக்கா அரோராவின் யோகா காட்சிகளை பார்த்தால், நீங்களும் பரவசமாவீர்கள். இதோ அதற்கான சில சாம்பிள் போட்டோக்கள். நீங்கள் யோகக் கலை கற்கலாம்.
- பார்த்ததும் சூடேற்றும், மலைக்கா அரோராவின் யோகா காட்சிகளை பார்த்தால், நீங்களும் பரவசமாவீர்கள். இதோ அதற்கான சில சாம்பிள் போட்டோக்கள். நீங்கள் யோகக் கலை கற்கலாம்.
(1 / 7)
பாலிவுட்டில் நடிகை மலைக்கா அரோரா தனது கட்டுக்கோப்பான உடலுக்காக பெரிதும் புகழப்பட்டவர். இவரது வயது 51. தன்னை விட குறைந்த வயதுடைய அதாவது 39 வயதுடைய தயாரிப்பாளர் போனி கபூரின் மகன் அர்ஜூன் கபூருடன் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்தவர். மக்கள் தாங்கள் ஆரோக்கியமாக இருக்க உதவும் வகையில் மலைக்கா அரோரா, அடிக்கடி பல யோகா வீடியோக்களையும் புகைப்படங்களையும் பகிர்ந்து கொள்கிறார். அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து அவரது உடலை டோன் செய்யும் ஆறு ஆசனங்கள் குறித்துப் பார்ப்போம்.(Instagram/@malaikaaroraofficial)
(2 / 7)
விருபாக்சனம் அல்லது மர போஸ். ஒருவர் நிமிர்ந்து நின்று தனது கைகளை தலைக்கு மேல் சேர்ந்து கும்பிடவேண்டும். ஒரு காலை மடக்கி இன்னொரு கால் மீது நிறுத்தி, மனதிலும் உடலிலும் சமநிலையைக் கொண்டுவர விருபாக்சனம் உதவுகிறது. இது கால்களை வலிமையாக்குகிறது மற்றும் இடுப்பினையும் முதுகெலும்பையும் வலுப்படுத்தவும் உதவுகிறது.(Instagram/@malaikaaroraofficial)
(3 / 7)
நவாசனா என்பது படகு போஸ் போன்றது. வயிற்றைச் சுற்றியுள்ள அதிகமான கொழுப்பை எரிக்க ஒரு சிறந்த வழியாகும். இந்த ஆசனத்தை ஒருவர் தொடர்ந்து பயிற்சி செய்தால், அவர்கள் இடுப்பு மடிப்புகள் மற்றும் முதுகு தசைகளையும் வலுப்படுத்த முடியும்.(Instagram/@malaikaaroraofficial)
(4 / 7)
உத்கடாசனம் என்பது நாற்காலி போஸ் ஆகும். நம் உடலில் உள்ள கெண்டைக்கால்கள், முதுகு மற்றும் இடுப்பு நெகிழ்வுகள் உத்கடாசனம் செய்வதால் வலுப்படுகிறது. இது இதயம் மற்றும் வயிற்று உறுப்புகளைத் தூண்டுவதற்கும் உதவுகிறது.(Instagram/@malaikaaroraofficial)
(5 / 7)
ஆஞ்சநேயாசனம் என்பது ஒரு காலை முன்பும், ஒரு காலை பின்பும் நீட்டுவது. கைகளை கும்பிடுவதுபோல் வைத்து பின்பு வளைக்க வேண்டும். கழுத்தைச் சுற்றியுள்ள நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்த உதவுகிறது. இந்த போஸ் இடுப்புக்கு ஆழமான நீட்சியை அளிக்கிறது மற்றும் மார்பு மற்றும் தோள்களைத் திறக்க உதவுகிறது.(Instagram/@malaikaaroraofficial)
(6 / 7)
பார்ஸ்வோட்டனாசனம் என்பது தீவிரமான பக்க நீட்சி போஸ் ஆசனம் ஆகும். நீங்கள் கால்களை வி ஷேப்பில் நீட்டி, குனிந்து கைகளை முதுகில் கட்டிக்கொள்ளவும். தலையை முன்புறத்தில் நீட்டுவது போல் நீட்டவும். இதனால் நெகிழ்வுத்தன்மை அதிகரிக்கிறது. இது செரிமானத்தையும் தூண்டுகிறது. இது உங்கள் உடலின் வலிமையையும் ஸ்திரத்தன்மையையும் மேம்படுத்தும் ஒரு போஸ் ஆகும்.(Instagram/@malaikaaroraofficial)
மற்ற கேலரிக்கள்