தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Maharaja Box Office: ரொம்ப நாளைக்கு அப்புறம் ஆறுதல் வெற்றி..மகாராஜா பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் இங்கே!

Maharaja Box office: ரொம்ப நாளைக்கு அப்புறம் ஆறுதல் வெற்றி..மகாராஜா பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் இங்கே!

Jun 17, 2024 03:29 PM IST Kalyani Pandiyan S
Jun 17, 2024 03:29 PM , IST

Maharaja box office:  விஜய்சேதுபதி நடிப்பில் வெளியான மகாராஜா திரைப்படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரம் இங்கே 

Maharaja: தமிழ் சினிமாவில்  ‘மக்கள் செல்வன்’ என்று அழைக்கப்படும் விஜய் சேதுபதியின் நடிப்பில், அண்மையில் வெளியான திரைப்படம் ‘மகாராஜா’. 

(1 / 5)

இந்தப்படத்தின் வசூல் விபரங்கள் தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு இருக்கின்றன.

(2 / 5)

அதன் படி, முதல் வார இறுதி நாளான நேற்றோடு, மகாராஜா திரைப்படம் 32. 6 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. 

(3 / 5)

மேலும், இது தொடர்பாக வெளியான போஸ்டரில், இந்த வசூல் மூலமாக, முதல் வார இறுதியில், உலக அளவில் அதிகம் வசூலித்த திரைப்படமாக மகாராஜா திரைப்படம் மாறியிருப்பதாகவும்  குறிப்பிடப்பட்டு இருக்கிறது. 

(4 / 5)

விஜய் சேதுபதியின் 50 வது படம்விஜய் சேதுபதியின் 50 வது திரைப்படமாக வெளியான இந்தப்படத்தை குரங்கு பொம்மை படத்தை இயக்கி கவனம் ஈர்த்த நித்திலன் சாமிநாதன் இயக்கியிருக்கிறார். பாலிவுட்டின் பிரபல இயக்குநரான அனுராக் காஷ்யப், இந்தப் படத்தில் முக்கிய வில்லனாக நடித்துள்ளார். ஒளிப்பதிவு இயக்குனராக தினேஷ் புருஷோத்தமன் பணிபுரிந்துள்ள நிலையில், அஜனீஷ் லோக்நாத் இசை சார்ந்த பணிகளை கவனித்துக்கொண்டார். பாடல் வரிகளை கவிப்பேரரசு வைரமுத்து எழுத, எடிட்டராக பிலோமின் ராஜ் பணிபுரிந்துள்ளார். இந்த ஆக்ஷன் படத்தில் ஸ்டண்ட் இயக்குநராக பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் அனல் அரசு பணிபுரிந்துள்ளார். வசனத்தை நித்திலன் சாமிநாதன், ராம் முரளி ஆகியோர் இணைந்து எழுதியுள்ளனர். இந்தப்படத்தில், விஜய்சேதுபதி உடன் மம்தா மோகன்தாஸ், நட்டி (நட்ராஜ்), பாரதிராஜா, அபிராமி, முனிஷ்காந்த் மற்றும் பலர் நடித்து உள்ளனர்.

(5 / 5)

மற்ற கேலரிக்கள்