Mahalakshmi Yoga: உண்டான மகாலட்சுமி யோகம்.. வெல்லப்போகும் ராசிகள்!
- ஜோதிடத்தின்படி, ஒவ்வொரு கிரகமும் ஒரு சில காலத்தில் ராசியை மாற்றிக்கொண்டே இருக்கும்.
- ஜோதிடத்தின்படி, ஒவ்வொரு கிரகமும் ஒரு சில காலத்தில் ராசியை மாற்றிக்கொண்டே இருக்கும்.
(1 / 6)
இதுபோன்ற காலங்களில் கிரகங்களின் சேர்க்கை சிலருக்கு நன்மையும் சிலருக்கு பாதகத்தையும் தரும்.மகர ராசியில் செவ்வாயும் சந்திரனும் சேர்வதால், மகாலட்சுமி யோகம் உண்டாகிறது. இந்த யோகம் சில ராசியினருக்கு, மிகுந்த சாதகமான பலன்களை உருவாக்குகிறது. சிலருக்குப் பணப்பிரச்னைகளைத் தீர்க்கிறது.
(2 / 6)
மேஷம்: மேஷ ராசிக்கு, பத்தாம் இடத்தில் மகாலட்சுமி யோகம் உண்டாகிறது. ஆகவே, மேஷ ராசியினர், இக்கால கட்டத்தில் தொழிலில் மேம்படுவார்கள். வருவாய் கூடும். பணிக்கான அங்கீகாரம் பெறுவீர்கள். செவ்வாய், ஆளுமையை மேம்படுத்தும். கல்யாணம் கைகூடாதவர்களுக்கு கல்யாணம் கைகூடும்.
(3 / 6)
விருச்சிகம்: விருச்சிக ராசிக்கு, மூன்றாம் இடத்தில் மகாலட்சுமி யோகம் உண்டாகியிருப்பதால், வெகுநாட்களாக வாங்க நினைத்த பொருட்களை வாங்குவீர்கள். எந்த ஒரு அவசர முடிவுகளையும் எடுக்கக்கூடாது. ஆறப்போடுங்கள். எல்லாம் சரியாகும். குடும்பத்தில் இணக்கமான சூழல் உண்டாகும். உங்கள் பணிக்கு ஏற்ற வாய்ப்பைப் பெறுவீர்கள். (Freepik)
(4 / 6)
மகரம்: இந்த ராசியின் முதல் இல்லத்தில் மகாலட்சுமி யோகம் கிடைக்கிறது. இந்த ராசியினருக்கு வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தாண்டவம் ஆடும். உயர் அலுவலர்களுடன் இணக்கமான சூழல் உண்டாகும். அனைத்துத் துறைகளிலும் சீரான வளர்ச்சி இருக்கும். உடல்நலம் மேம்படும்.
(5 / 6)
பொறுப்புத் துறப்பு:இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே
மற்ற கேலரிக்கள்