Fire Accident: மஹா கும்பமேளா நிகழ்வில் ஏற்பட்ட தீ விபத்து.. கூடாரத்தில் பற்றி எரிந்த தீ போராடி அணைப்பு
- உத்தரபிரதேச மாநிலம் பிரயாகராஜில் உள்ள மஹாகும்ப மேளாவுக்காக அமைக்கப்பட்ட நகரத்தில், செக்டார் 19இல் தீ விபத்து ஏற்பட்டது. சமையல் சிலிண்டர்கள் வெடித்ததால் ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
- உத்தரபிரதேச மாநிலம் பிரயாகராஜில் உள்ள மஹாகும்ப மேளாவுக்காக அமைக்கப்பட்ட நகரத்தில், செக்டார் 19இல் தீ விபத்து ஏற்பட்டது. சமையல் சிலிண்டர்கள் வெடித்ததால் ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
(1 / 6)
மஹாகும்ப் தீ விபத்து: மஹாகும்ப் கூடார நகரத்தின் செக்டார் 19 இல், முகாம்களில் ஒன்றில் சிலிண்டர் வெடித்த நிலையிஸ் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது
(HT photo)(2 / 6)
பிரயாகராஜில் மஹாகும்பமேள நிகழ்வின் போது முகாமில் அமைக்கப்பட்டிருந்த கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து கரும்புகை வெளியேறியது. பற்றி எரிந்த தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்
(PTI)(3 / 6)
செக்டர் 19இல் இருந்த சுவாமி ஹரிபிரகாஷ் கேம்பில் தீ விபத்து ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது
(HT Photo)(4 / 6)
தேசிய பேரிடர் மீட்பு படையினர் சம்பவ இடம் விரைந்து மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். தீ விபத்தில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது
(PTI)(5 / 6)
பற்றி எரியும் தீ மற்ற பந்தல்களில் பரவாமல் இருக்க தண்ணீரை பீய்ச்சி அடிக்கும் தீ அணைப்பு வீரர்கள்
(PTI)(6 / 6)
பிரயாக்ராஜில் உள்ள சங்கத்தில் நடந்த மகா கும்பமேளாவின் போது கூடாரங்களில் தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து, ஒரு பக்தர் மொபைல் போனில் பேசுகிறார். கீதா அச்சகத்தின் கூடாரத்தில் உள்ள செக்டார் 19 இல் மாலை 4.30 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டதாக பிரயாக்ராஜ் மாவட்ட நீதிபதி ரவீந்திர குமார் தெரிவித்தார். இந்த விபத்தில் உயிரிழப்புகள் எதும் ஏற்படவில்லை எனவும், நிலைமை சில மணி நேரங்களில் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
(PTI)மற்ற கேலரிக்கள்