Maha Kumbh Mela 2025: நிறைவை நெருங்கும் மகா கும்பமேளா.. தொடர்ந்து குவியும் கோடிக்கணக்கான பக்தர்கள்!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Maha Kumbh Mela 2025: நிறைவை நெருங்கும் மகா கும்பமேளா.. தொடர்ந்து குவியும் கோடிக்கணக்கான பக்தர்கள்!

Maha Kumbh Mela 2025: நிறைவை நெருங்கும் மகா கும்பமேளா.. தொடர்ந்து குவியும் கோடிக்கணக்கான பக்தர்கள்!

Published Feb 20, 2025 11:20 AM IST Karthikeyan S
Published Feb 20, 2025 11:20 AM IST

  • Maha Kumbh Mela 2025: உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்ப மேளாவில் புனித நீராடிய பக்தர்களின் எண்ணிக்கை 55 கோடியைத் தாண்டியுள்ளதாக உத்தரப்பிரதேச அரசு தெரிவித்துள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் திரிவேணி சங்கமத்தில் மகா கும்ப மேளா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. ஜனவரி 13 ஆம் தேதி தொடங்கி விமரிசையாக நடைபெற்று வரும் கும்பமேளாவில் நாள்தோறும் துறவிகள், பக்தர்கள், சாதாரண மக்கள் என ஏராளமானோர் புனித நீராடி வருகின்றனர்.

(1 / 8)

(PTI)

கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகியவை கூடும் திரிவேணி சங்கமத்தில் பெளஷ் பெளர்ணமியை முன்னிட்டு தொடங்கிய கும்பமேளா கடந்த 38 நாட்களாக பெரும் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது.

(2 / 8)

உலகின் மிகப்பெரிய ஆன்மீக விழாவாக கருதப்படும் மகா கும்பமேளாவில் புனித நீராட உலகெங்கிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் திரிவேணி சங்கமத்தில் திரண்டு வருகின்றனர். குடியரசுத் தலைவர், பிரதமர் மோடி உள்ளிட்ட நாட்டின் மூத்த தலைவர்கள், பிரபலங்கள், மகா கும்பமேளாவில் பங்கேற்று புனித நீராடி வருகின்றனர்.

(3 / 8)

ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் தனது குடும்பத்தினருடன் பிரயாக்ராஜில் நடந்து வரும் மகா கும்பமேளா திருவிழாவின் போது திரிவேணி சங்கமத்தில் புனித நீராடிய பின்னர் பிரார்த்தனை செய்தார்.

(4 / 8)

திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுவதற்காக படகுகளில் செல்லும் ஆயிரக்கணக்கான பக்தர்கள். 

(5 / 8)

மகர சங்கராந்தி (ஜனவரி 14), மவுனி அமாவாசை (ஜனவரி 29), வசந்த் பஞ்சமி (பிப்ரவரி 3) ஆகிய நாட்களில் மகா கும்பமேளாவில் முக்கியமான நீராடல் நடைபெற்றது. ஜனவரி 13 ஆம் தேதி தொடங்கிய கும்பமேளாவில் (பிப்.19) வரை 55 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் புனித நீராடி இருப்பதாக உத்தரப்பிரதேச அரசு தெரிவித்துள்ளது.

(6 / 8)

மகா கும்பமேளா 2025 மூலம் பொருட்கள் மற்றும் சேவைகள் மூலம் ரூ.3 லட்சம் கோடிக்கு (USD 360 பில்லியன்) வணிகத்தை உருவாக்கியுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது இந்தியாவின் மிகப்பெரிய பொருளாதார நிகழ்வுகளில் ஒன்றாகவும் பார்க்கப்படுகிறது. 

(7 / 8)

கும்பமேளா பிப்ரவரி 26-ம் தேதி நிறைவு பெறவுள்ள நிலையில், பிரயாக்ராஜை நோக்கி வரும் பக்தர்கள் கூட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கும்பமேளா நிறைவு நாளில் நாளில் மகா சிவராத்திரி பண்டிகையும் கொண்டாடப்பட உள்ளது. 

(8 / 8)

சு.கார்த்திகேயன், சீனியர் கன்டென்ட் ப்ரொடியூசராக இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் பணிபுரிகிறார். வானொலி, டிஜிட்டல் ஊடகங்களில் 13+ ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, தேசம் மற்றும் சர்வதேசம், பொழுதுபோக்கு, ஆன்மிகம், லைஃப்ஸ்டைல் உள்ளிட்ட பிரிவுகளில் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் செய்திகளை எழுதி வருகிறார். சிவகாசி ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரியில் இளங்கலை தகவல் தொழில்நுட்பம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் மின்னணு ஊடகம் மற்றும் தொடர்பியல் துறையில் பட்டம் பெற்றுள்ள இவர், கல்வி வானொலி ஞானவாணி, ஈ நாடு டிஜிட்டல், ஒன் இந்தியா தமிழ், டாப் தமிழ் நியூஸ், டைம்ஸ் நவ் ஆகிய நிறுவனங்களைத் தொடர்ந்து 2022 முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

மற்ற கேலரிக்கள்