Magaram Rasi: ’மகரத்தில் உச்சம் தொடும் செவ்வாய்!’ அலறி ஓடப்போகும் எதிரிகள்! முழு பலன்கள் இதோ!
- ”செவ்வாய் உச்சத்தால் தைரியம் கூடுவதாக இருக்கும், இது ஆற்றலையும், தன்னம்பிக்கையையும் தரும். நேருக்கு நேர் நின்று எதிர்களை சமாளிக்க கூடிய தைரியம் இந்த பிப்ரவரி மாதம் ஏற்படும்”
- ”செவ்வாய் உச்சத்தால் தைரியம் கூடுவதாக இருக்கும், இது ஆற்றலையும், தன்னம்பிக்கையையும் தரும். நேருக்கு நேர் நின்று எதிர்களை சமாளிக்க கூடிய தைரியம் இந்த பிப்ரவரி மாதம் ஏற்படும்”
(1 / 8)
செவ்வாய் பகவான் தன்னம்பிக்கை, தைரியம், விடாமுயற்சி, வீரம், உள்ளிட்டவைகளுக்கு காரணியாக விளங்கி வருகிறார்.
(2 / 8)
மகர ராசியில் செவ்வாய் பகவான் வரும் பிப்ரவரி 5ஆம் தேதியான நாளை உச்சம் பெறுகிறார். செவ்வாய் பகவான் உச்சம் பெறும் வேளையில், செய்ய வேண்டியவற்றை செய்யாமல் தள்ளிப்போடுவதும், செய்யக்கூடாததை அவசர கதியில் செய்வதை தவிர்ப்பது நன்மை தரும்
(3 / 8)
நேர்மை, நன்நெறி, ஒழுக்கத்தோடு செயல்பட வேண்டிய காலகட்டமாக இது உள்ளது. எதற்கும் அஞ்சாமல் மகர ராசியினர் செயல்படும்போது எதிரிகள் மகரராசியினரை கொண்டு அஞ்சும் நிலை ஏற்படும்.
(4 / 8)
உங்களை கண்டு ஏளனம் செய்த நபர்கள், உறவினர்கள், நண்பர்களின் கருத்துகளை எல்லாம் முறியெடுத்து முன்னேறும் நிலையையும் இந்த செவ்வாய் உச்சம் ஏற்படுத்தி தரும்.
(5 / 8)
ஏற்கெனவே மகர ராசிக்காரர்கள் பாதசனி பாதிப்பில் இருந்து வருகின்றனர். இந்த நிலையில் செவ்வாய் உங்கள் ராசியிலேயே உச்சம் பெறுவது, மிகப்பெரிய பலத்தை உங்களுக்கு நிலம் சார்ந்த விஷயங்களில் தரும்.
(6 / 8)
நிலம் வாங்குவதில் இருந்த தடை, வீடு வாங்குவதில் இருந்த தடை உள்ளிட்ட பிரச்னைகள் நீங்கும். கணவன், மனைவி உறவில் இணக்கம் உண்டாகும். முயற்சி தடைகள் நீங்குவதற்கு ஏற்க காலமாக இது இருக்கும்.
(7 / 8)
செவ்வாய் உச்சத்தால் தைரியம் கூடுவதாக இருக்கும், இது ஆற்றலையும், தன்னம்பிக்கையையும் தரும். நேருக்கு நேர் நின்று எதிர்களை சமாளிக்க கூடிய தைரியம் இந்த பிப்ரவரி மாதம் ஏற்படும்.
மற்ற கேலரிக்கள்