தாயை இழந்து தவிக்கும் வைரமுத்து.. பாடலாசிரியர் வீட்டில் நடந்த சோகம்.. இரங்கல் தெரிவிக்கும் பிரபலங்கள்..
பாடலாசிரியரும் கவிஞருமான வைரமுத்துவின் தாயார் அங்கம்மாள் வயதுமூப்பு காரணமாக உயிரிழன்துள்ளார். அவரது இறுதி சடங்குகள் இன்று அவரது சொந்த ஊரான வடுகப்பட்டியில் நடிக்கவுள்ளது.
(1 / 6)
தமிழ் சினிமாவின் வளர்ச்சியில் மிகப்பெரிய பங்காற்றியவர் பாடலாசிரியரும் கவிஞருமான வைரமுத்துவின் தாயார் வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார்.
(2 / 6)
அவரது இறுதிச் சடங்குகள் அனைத்தும் சொந்த ஊரான தேனி மாவட்டம் வடுகப்பட்டியில் இன்று நடக்கிறது என வைரமுத்து அவரது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.
(3 / 6)
இந்த செய்தியை அறிந்த முதலமைச்சர் ஸ்டாலின் வைரமுத்துக்கு ஆறுதல் மற்றும் இரங்கலைத் தெரிவித்துள்ளார். மேலும் வைரமுத்துவுக்கு அன்பையும் தமிழையும் ஊட்டி வளர்த்த அன்னை எனவும் பெருமிதம் செய்துள்ளார்.
(4 / 6)
வைரமுத்து, தமிழ் சினிமாவில் காதல், காமம், உத்வேகம், சோகம், மகிழ்ச்சி, தத்துவம் என ஏகப்பட்ட ஜானர்களில் பாடல்களை அள்ளிக் கொடுத்து மக்களை தன் வசம் ஈர்த்தவர்.
(5 / 6)
அத்துடன், தமிழ் இலக்கியத்திற்கு தன் ஏராளமான படைப்புகளை வழங்கியுள்ளார். அவர் தமிழ் மொழிக்கு செய்த பெருமைகளுக்காக ஏராளமான விருதுகளையும் பெற்றுள்ளார்.
மற்ற கேலரிக்கள்