Rahu and Mercury: 18ஆண்டுகளுக்குப் பின் நிகழும் மாற்றம்.. ராகு-புதன் இணைவால் அதிர்ஷ்டம்பெறும் ராசிகள்
- மீன ராசியில் ராகு மற்றும் புதன் சேர்க்கையால் அதிர்ஷ்டம்பெறும் ராசிகள் குறித்துப் பார்க்கலாம்.
- மீன ராசியில் ராகு மற்றும் புதன் சேர்க்கையால் அதிர்ஷ்டம்பெறும் ராசிகள் குறித்துப் பார்க்கலாம்.
(1 / 6)
மீன ராசியில் ராகு பகவான் சஞ்சரித்து வருகிறார். இந்த காலத்தில் மார்ச் மாதம் 7ஆம் தேதி, புதன் பகவான், மீன ராசிக்குள் நுழைகிறார். அப்போது புதன் பகவானும் ராகு பகவானும் ஒருவரையொருவர் கைகோர்த்து நடக்கப்போகின்றனர். 2006ஆம் ஆண்டுக்குப் பின், மீன ராசியில் புதன் மற்றும் ராகு இணையும் நிகழ்வு நடக்கிறது. இதனால் மூன்று ராசியினர் பெருமளவு அதிர்ஷ்டத்தைப் பெறுகின்றனர்.
(2 / 6)
ரிஷபம்: இந்த ராசியின் 11ஆம் இல்லத்தில் இந்த ராகு- புதன் இணைவு நடக்கிறது. ஆகையால் வியாபாரத்தில் வளர்ச்சி இருக்கும். ஓரளவு நல்ல லாபம் கிடைக்கும். வெகுநாட்களாக நீங்கள் சொல்லமுடியாமல் தவித்த துன்பங்கள் மறையும். மனக்கஷ்டங்கள் மாறும். முன்னர் செய்த முதலீடுகள் லாபத்துக்கு வழிவகுக்கும்.
(3 / 6)
கடகம்: இந்த ராசியின் 9ஆம் இல்லத்தில் ராகு - புதன் சேர்க்கையால், வெகுநாட்களாக நீங்கள் தொட்டு இழுத்துக்கொண்டே இருந்த பணிகள் முடிவடையும். அயல்நாட்டிலோ அல்லது அயல் மாநிலத்திலோ படிக்க ஆசைபட்டால் நல்ல மாற்றத்தைப் பெறுவீர்கள். பயணங்கள் உங்கள் ஆன்ம பலத்தை அதிகரிக்கச்செய்யும்.
(4 / 6)
விருச்சிகம்: இந்த ராசியின் 5ஆம் இல்லத்தில் ராகு மற்றும் புதன் சேர்க்கையால், கணவன் - மனைவி இடையே இருந்த சண்டை சச்சரவுகள் நீங்கும். அந்நியோன்யம் பெருகும். அன்பின் மகத்துவத்தைப் புரிந்துகொள்வீர்கள். உங்கள் பிடிவாதக் குணம் மாறும். உங்களது எண்ணங்கள் சரியாக இருந்தால் வெற்றி கிடைக்கும். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். சொந்தக்காரர்களை நம்பாதீர்கள்.
(Freepik)(5 / 6)
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே
மற்ற கேலரிக்கள்