Lucky Colour: 7 நாட்கள்.. 7 நிறங்கள்.. அதிர்ஷ்டம் தரும் ஆடைகள்.. எந்த நாளில் எந்த நிறம் அணிய வேண்டும் தெரியுமா?
- Lucky Colour: ஜோதிடத்தின் படி, எந்தெந்த நாட்களில் எந்தெந்த நிறங்களில் ஆடைகளை அணிய வேண்டும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
- Lucky Colour: ஜோதிடத்தின் படி, எந்தெந்த நாட்களில் எந்தெந்த நிறங்களில் ஆடைகளை அணிய வேண்டும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
(1 / 8)
ஜோதிடத்தில் நிறங்களுக்கும் அதிக முக்கியத்துவம் உண்டு. ஒவ்வொரு கிழமைக்கும் அந்தந்த கோள்களுக்கான பிரத்யேக நிறங்களில் ஆடை அணிவது நல்ல பலன்களை தரும் என்பது நம்பிக்கை. உங்கள் ராசி, பிறந்த நட்சத்திரம், பிறந்த தேதி ஆகியவற்றைப் பொறுத்து அதிர்ஷ்ட நிறமானது மாறும் என்றாலும் ஏழு நாட்களுக்கும் உரிய இந்த 7 நிறங்கள் அனைவரும் அணிவதற்கு ஏற்றது.
(Image: freepik)(2 / 8)
வாரத்தின் முதல் நாளான ஞாயிறு சூரியனுடன் தொடர்புடையது. மஞ்சள் நிற ஆடைகளை அணிவது மங்களகரமானது. ஆரஞ்சு நிற ஆடை அணிவது நல்ல அதிர்ஷ்டத்தைத் தரும் என்று கூறப்படுகிறது.
(Image: freepik)(3 / 8)
ஜோதிடத்தின் படி, திங்கட்கிழமை சந்திரனுக்கு உரிய நாள். இந்த நாளுக்கு வெள்ளை நிறம் நல்லது. வெள்ளை நிற ஆடைகளை அணிவதன் மூலம் சந்திரனின் ஆசி கிடைக்கும். மேலும், தெளிவான மனதுடனும், தூய்மை உணர்வுடனும் நாளை தொடங்கலாம்.
(Image: freepik)(4 / 8)
செவ்வாய் கிரகத்திற்கு உரிய நிறமாக சிவப்பு பார்க்கப்படுகிறது. இதன்படி, செவ்வாய்க்கிழமைகளில் சிவப்பு வண்ண ஆடைகளை அணியலாம். சிவப்பு நிறம் ஒருவருக்கு தைரியத்தையும் தன்னம்பிக்கையும் அளிக்கிறது.
(Image: freepik)(5 / 8)
நல்ல அதிர்ஷ்டத்தை கொடுக்கும் புதன்கிழமை புதன் கிரகத்துடன் தொடர்புடையது. இந்த கிழமைகளில் புதனுக்கு விருப்பமான பச்சை நிறம் மிகவும் சாதகமானது. பச்சை நிறம் மன அமைதியையும் அதிர்ஷ்டத்தையும் தரும் என்பது நம்பிக்கை.
(Image: freepik)(6 / 8)
வியாழன் குருவுக்கு உரியநாளாக கருதப்படுகிறது. வியாழன் பகவான் மஞ்சள் நிறத்தை விரும்புகிறார். எனவே, இந்த நாளில் மஞ்சள் நிற ஆடைகளை அணியலாம்.
(Image:Freepik)(7 / 8)
சுக்கிரனின் ஆதிக்கம் நிறைந்த வெள்ளிக்கிழமை இளஞ்சிவப்பு அல்லது வெள்ளை நிற ஆடைகளை அணிவது நல்ல பலன்களைத் தரும். அந்த நிறம் இல்லையென்றால் நீங்கள் அடர் பச்சை மற்றும் அடர் நீல நிறத்தை அணியலாம்.
(Image: freepik)(8 / 8)
ஜோதிட சாஸ்திரத்தின்படி, சனிக்கிழமை சனிபகவானுடன் தொடர்புடையது. கருப்பு அல்லது அடர் நீலம் இந்த நாளுக்கு சாதகமானது. கருப்பு நிற உடை அணிவதால் சனிபகவானின் தீவிரம் குறைந்து நல்ல அருள் கிடைக்கும். (குறிப்பு: இந்த கட்டுரையில் உங்களுக்கு வழங்கப்பட்ட தகவல்கள் மற்றும் பரிந்துரைகள் முற்றிலும் உண்மை மற்றும் துல்லியமானவை என்று நாங்கள் கூற முடியாது. நிபுணர்களின் அறிவுறுத்தலின்படி இந்த தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றுவதற்கு முன்பு சம்பந்தப்பட்ட துறையில் உள்ள நிபுணர்களின் ஆலோசனையைப் பெறுவது நல்லது).
(image:freepik)மற்ற கேலரிக்கள்