LPG Cooking Cylinder Prices Slashed: வணிக சிலிண்டர் விலை குறைப்பு.. சென்னையில் எவ்வளவு தெரியுமா?
- LPG Cooking Cylinder Prices Slashed: நாட்டின் பல்வேறு நகரங்களில் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை குறைக்கப்பட்டுள்ளது. சென்னை உட்பட பல்வேறு நகரங்களின் விலை பட்டியல் இதோ..!
- LPG Cooking Cylinder Prices Slashed: நாட்டின் பல்வேறு நகரங்களில் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை குறைக்கப்பட்டுள்ளது. சென்னை உட்பட பல்வேறு நகரங்களின் விலை பட்டியல் இதோ..!
(1 / 6)
பெட்ரோல், டீசல் விலையை சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப நிர்ணையித்துக் கொள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி கொடுத்துள்ளது. அதேபோல சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்து கொள்கின்றன. ஒவ்வொரு மாதமும் சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப இந்த விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
(2 / 6)
இந்த நிலையில், ஜூலை 1 முதல், நாடு முழுவதும் வணிக பயன்பாட்டு சிலிண்டர்களின் விலை ஓரளவு குறைக்கப்பட்டுள்ளது. நாட்டின் நான்கு மெட்ரோ நகரங்களில் மூன்றில், ஒவ்வொரு 19 கிலோ எடை கொண்ட வணிக சிலிண்டரின் விலை ரூ .31 குறைக்கப்பட்டுள்ளது. ஒரு மெட்ரோ நகரத்தில், விலை ரூ .30 குறைக்கப்பட்டுள்ளது. புதிய விலைகள் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தன. இருப்பினும், 14.2 கிலோ மானியமில்லாத சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையில் மாற்றம் இல்லை. (படம்: ANI)
(3 / 6)
எண்ணெய் நிறுவனங்கள் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டு சிலிண்டரின் விலை ரூ.31 குறைந்துள்ளது. அதன்படி, டெல்லியில் ஒரு சிலிண்டரின் விலை ரூ .1,646 ஆக உள்ளது. டெல்லியில் வணிக எரிவாயு சிலிண்டர்களின் விலை ரூ.30 குறைக்கப்பட்டுள்ளது. மும்பை மற்றும் சென்னையில், 19 கிலோ எடை கொண்ட வணிக எரிவாயு சிலிண்டரின் விலை முறையே ரூ .1,598 மற்றும் ரூ .1,809.5 ஆக குறைந்துள்ளது. இரு நகரங்களிலும் விலை ரூ.31 குறைந்துள்ளது. (படம்: PTI)
(4 / 6)
இருப்பினும், மானியமில்லாத 14.2 கிலோ எல்பிஜி சிலிண்டரின் விலையில் எந்த மாற்றமும் இல்லை. இந்தியன் ஆயில் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, கொல்கத்தாவில் மானியமில்லாத சமையல் எரிவாயுவின் விலை ரூ .829 ஆகும். 14.2 கிலோ மானியமில்லாத எல்பிஜி சிலிண்டரின் விலை டெல்லி, மும்பை மற்றும் சென்னையில் முறையே ரூ .803, ரூ .802.5 மற்றும் ரூ .818.50 ஆக நீடிக்கிறது. (படம்: ANI)
(5 / 6)
இருப்பினும், உஜ்வாலா யோஜனாவின் கீழ் உள்ளவர்கள் 14.2 கிலோ மானியமில்லாத சமையல் எரிவாயு சிலிண்டரை சற்று குறைந்த விலையில் வாங்க முடியும். கொல்கத்தா, டெல்லி, மும்பை மற்றும் சென்னையில், 14.2 கிலோ மானியமில்லாத எல்பிஜி சிலிண்டரின் விலை முறையே ரூ .529, ரூ .503, ரூ .502.50 மற்றும் ரூ .518.50 உள்ளது. (படம்: ANI)
மற்ற கேலரிக்கள்