30 வருட அபூர்வம்.. சனி.. சூரியன்.. சுக்கிரன் சேர்ந்து விட்டனர்.. பணமழை உறுதி.. 3 ராசிகளுக்கு ஜாக்பாட்
- Money Luck: 30 ஆண்டுகளுக்கு பிறகு தனது சொந்த ராசியான கும்ப ராசியில் பயணம் செய்து வருகின்றார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். இந்நிலையில் சூரிய பகவான் மார்ச் 15 ஆம் தேதியான இன்று கும்ப ராசியில் நுழைந்தார்.
- Money Luck: 30 ஆண்டுகளுக்கு பிறகு தனது சொந்த ராசியான கும்ப ராசியில் பயணம் செய்து வருகின்றார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். இந்நிலையில் சூரிய பகவான் மார்ச் 15 ஆம் தேதியான இன்று கும்ப ராசியில் நுழைந்தார்.
(1 / 7)
நவகிரகங்களின் தலைவனாக சூரிய பகவான் விளங்கி வருகின்றார். இவர் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் மிகப்பெரிய தாக்கத்தை அனைத்து ராசிகளுக்கும் ஏற்படுத்தும். ஒவ்வொரு மாதமும் தனது இடத்தை சூரிய பகவான் மாற்றும் பொழுது தமிழ் மாதம் பிறக்கின்றது. சூரிய பகவான் சிம்ம ராசியின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார்.
(2 / 7)
நவகிரகங்களில் நீதிமானாக விளங்கக்கூடிய கர்மநாயகன் சனிபகவான். இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுக்கக் கூடியவர். அதிலும் நன்மைகள் தீமைகள் என அனைத்தையும் தரம் பிரித்து இரட்டிப்பாக திருப்பிக் கொடுப்பார். அதனால் இவரை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள். நவகிரகங்களில் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக சனி பகவான் விளங்கி வருகின்றார்.
(3 / 7)
தற்போது 30 ஆண்டுகளுக்கு பிறகு தனது சொந்த ராசியான கும்ப ராசியில் பயணம் செய்து வருகின்றார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். இந்நிலையில் சூரிய பகவான் மார்ச் 15 ஆம் தேதியான இன்று கும்ப ராசியில் நுழைந்தார். ஏற்கனவே சனி பகவான் கும்பத்தில் பயணம் செய்து வருகின்ற காரணத்தினால் தற்போது சனி பகவானும் இணைந்துள்ளார்.
(4 / 7)
தந்தை மகன் உறவாக இருந்தாலும் சனி மற்றும் சூரியன் எதிரி கிரகங்களாகவே ஜோதிட சாஸ்திரத்தில் கருதப்படுகின்றனர். இருப்பினும் இவர்கள் இருவரோடு சேர்த்து தற்போது சுக்கிர பகவானும் என்று சேர்ந்துள்ளார். மூன்று கிரகங்களின் சேர்க்கையால் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகள் ராஜ வாழ்க்கையை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.
(5 / 7)
கும்ப ராசி: உங்களுடைய ராசியில் முதல் வீட்டில் சூரியன் சனி மற்றும் சுக்கிரன் சேர்க்கை நிகழ்ந்துள்ளது. இதனால் உங்களுக்கு ஆளுமை திறன் அதிகரிக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கக்கூடும். தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றம் இருக்கும். கூட்டு தொழில் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். செல்வம் பெருகும் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
(6 / 7)
ரிஷப ராசி: உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் சூரியன் சுக்கிரன் சனி மூன்று கிரகங்களின் சேர்க்கை நிகழ்ந்துள்ளது. இதனால் பல நல்ல செய்திகளை உங்களை தேடி வரும். வியாபாரத்தில் புதிய திட்டங்கள் உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.
(7 / 7)
மிதுன ராசி: உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் சூரியன் சனி மற்றும் சுக்கிரன் சேர்ந்துள்ளனர். இதனால் உங்களுக்கு அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக கிடைக்கும். எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. சொத்து சம்பந்தப்பட்ட சிக்கல்கள் விலகும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும்.
மற்ற கேலரிக்கள்