Lord Sun in Taurus: ரிஷபத்தின் முதுகில் ஏறிய சூரியன்.. பார்த்து சூதானமாக இருக்கவேண்டிய ராசிகள்
- Lord Sun in Taurus: ரிஷப ராசியில் சூரிய பகவான் சஞ்சரிப்பதால் சில ராசியினருக்கு நிதி மற்றும் பொருளாதாரப் பிரச்னைகள் உண்டாகும். அப்படி, சூரியப்பெயர்ச்சியால் எச்சரிக்கையாக இருக்கவேண்டிய ராசிகள் குறித்துக் காண்போம்.
- Lord Sun in Taurus: ரிஷப ராசியில் சூரிய பகவான் சஞ்சரிப்பதால் சில ராசியினருக்கு நிதி மற்றும் பொருளாதாரப் பிரச்னைகள் உண்டாகும். அப்படி, சூரியப்பெயர்ச்சியால் எச்சரிக்கையாக இருக்கவேண்டிய ராசிகள் குறித்துக் காண்போம்.
(1 / 8)
Lord Sun in Taurus: ஜோதிடத்தில், சூரிய பகவான் நவகிரகங்களுக்கு ராஜாவாக கருதப்படுபவர். சூரிய பகவானின், தாக்கம் ஒருவருக்கு மனநிம்மதியைத் தரும். ஒருவருக்கு சூரிய பகவான் சுப ஸ்தானத்தில் இருந்தால் நிறைய நன்மை கிடைக்கும். முடிவுகள் எடுப்பது மிகச்சரியாக இருக்கும். சூரியபகவானின் ஆசியால் இழந்த நற்பெயரைப் பெறுவர். முதலாளிகளின் பேச்சினைக் கேட்டு நடப்பார்கள். மே 2024-ல் ரிஷப ராசியில் சூரியனின் சஞ்சாரம், 12 ராசிகளிலும் தாக்கத்தை உண்டு செய்யும். சிலருக்கு நன்மைகளையும், பலருக்குப் பிரச்னைகளையும் ஏற்படுத்தலாம்.
(2 / 8)
ஆன்மாவிற்கும் சக்திக்கும் காரணகர்த்தாவாகத் திகழும் சூரிய பகவான், மே 14ஆம் தேதியான இன்று மாலை 5:41 மணிக்கு ரிஷப ராசியில் சஞ்சரிக்கிறார். இதனால் சில ராசியினர், வாழ்வில் நிதிப் பற்றாக்குறையைச் சந்திப்பர்.ரிஷப ராசிக்குச் செல்லும் சூரிய பகவானால், பொருளாதாரம் மற்றும் இன்னபிற விஷயங்களில் கவனமாக இருக்கவேண்டிய ராசிகள் குறித்துப் பார்ப்போம்.
(3 / 8)
ரிஷபம்:சூரிய பகவான், ரிஷப ராசியில் சஞ்சரிப்பதால் நிதி விஷயங்களில் ரிஷப ராசியினர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இந்த காலம் ரிஷப ராசியினருக்குச் சாதகமற்றதாக இருக்காது. பணம் சம்பாதிக்க போதுமான வாய்ப்புகள் கிடைக்காது. மாறாக பணம் சம்பாதிப்பதில் கடும்முயற்சிகளையும் போராட்டங்களையும் சந்திக்க நேரிடும். சிலநேரம் சம்பாதித்த பணம் விரயமாகப் போகலாம். இந்த காலத்தில் நீங்கள் எச்சரிக்கையாக இல்லாவிட்டால், பணத்தைச் சேமிக்க முடியாது. மொத்தத்தில் ரிஷப ராசிக்காரர்களுக்கு இருக்கும் பணத்தை தொலைக்காமல் வைத்துக்கொண்டாலே, இக்காலம் போதுமானது ஆகும்.
(4 / 8)
மிதுனம்:ரிஷப ராசியில் சூரிய பகவான் டிராவல் செய்வதால், மிதுன ராசிக்காரர்களுக்கு பணப்பற்றாக்குறை உண்டாகும். தங்கள் நிதி மேலாண்மையை சரியாகத் திட்டமிடாவிட்டால் மிதுனராசியினருக்கு, பல்வேறு சிக்கல்கள் வரலாம். செலவுகளும் அதிகமாக இருக்கும். மிதுன ராசிக்காரர்களுக்குச் செலவுகளை நிர்வகிப்பது பிரச்னையாக இருக்கும். இந்த காலத்தில், பணப் பிரச்னை ஏற்பட்டால் பெரிய அளவிலான நிதி இழப்பில் கொண்டுபோய் விட்டுவிடும்.
(5 / 8)
கன்னி:மேஷ ராசியில் சூரியனின் சஞ்சாரம் கன்னி ராசியினருக்கு சாதகமாக இல்லை. இந்த காலத்தில் கன்னி ராசியினர் கடனாளி ஆக வாய்ப்பு இருக்கிறது. நிதிச்சுமை அளவுக்கதிகமாக இருக்கும். சூரிய பகவானின் சஞ்சாரம் காரணமாக, கன்னி ராசிக்காரர்கள் தாங்கள் செலவு செய்யும்போது பார்த்து பார்த்து செலவு செய்யவேண்டும். வரவு செலவு கணக்குகளை எழுதிப் பார்த்து செலவு செய்யவேண்டும். இதனால் நிதிப் பிரச்னைகள் மூலம் உண்டாகும் கவலைகளில் இருந்து நாம் தப்பிக்க முடியும்.
(6 / 8)
துலாம்:துலாம் ராசியினருக்கு, ரிஷப ராசியில் சூரிய பகவானின் சஞ்சாரம் பொருளாதாரத்தில் இறக்கத்தையே கொடுக்கும். எனவே, நிதி ஒப்பந்தங்கள் மற்றும் பணப்பரிவர்த்தனைகளில் ஈடுபட இந்த காலம் சரியானது கிடையாது. இந்த காலகட்டத்தில், உங்கள் மந்தப் புத்தியால், பண இழப்புகளைச் சந்திக்க நேரிடலாம். ஆழம் தெரியாமல் புதிய தொழிலில் ஈடுபடவேண்டாம். துலாம் ராசியினர், தங்கள் பண விஷயங்களில் கவனக் குறைவாக இருக்கக்கூடாது. எனவே, ஒரு முறைக்கு இருமுறை ஆராய்ந்து பார்த்து சரியான முடிவுகளை எடுக்க வேண்டும்.
(7 / 8)
மகரம்:மகர ராசியினருக்கு, சூரிய பகவான் ரிஷப ராசியில் பெயர்ச்சி ஆவதால், இத்தனை நாட்களாக தொழிலில் கிடைத்த லாபம் கிடைக்காது. உங்களிடம் கடன் பெற்றவர்கள் திருப்பித் தராமல் இழுத்தடிப்பார்கள். எனவே, யாருக்கும் இந்த காலத்தில் கடன் கொடுக்காதீர்கள். உங்களால் எதையும் சேமிக்க முடியாது. வருமானம் அதிகரித்தாலும் உங்களுக்கு வீண் விரயச் செலவுகள் வந்துபோகும்.
(8 / 8)
பொறுப்புத் துறப்பு:இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
மற்ற கேலரிக்கள்