உஷார்..! காலில் வெளிப்படும் இந்த பிரச்னைகள்.. கல்லீரல் நோய் பாதிப்புக்கான அறிகுறிகள்
- கல்லீரல் தொடர்பான பல்வேறு பிரச்னைகள் உடல் நலத்தில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. கால்களில் வெளிப்படும் சில பாதிப்புகள் கல்லீரலில் பிரச்னை இருப்பதை குறிக்கின்றன. இந்த அறிகுறிகளை முன்கூட்டியே பார்ப்பதன் மூலம், கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க முடியும்
- கல்லீரல் தொடர்பான பல்வேறு பிரச்னைகள் உடல் நலத்தில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. கால்களில் வெளிப்படும் சில பாதிப்புகள் கல்லீரலில் பிரச்னை இருப்பதை குறிக்கின்றன. இந்த அறிகுறிகளை முன்கூட்டியே பார்ப்பதன் மூலம், கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க முடியும்
(1 / 7)
மனித உடலில் திடமான உறுப்பாக இருந்து வரும் கல்லீரல் பல முக்கியமான செயல்பாடுகளைச் செய்கிறது. இதில் முக்கியமாக, இரத்தத்தை வடிகட்டுதல், நச்சுகளை நீக்குதல், கொழுப்புகளை ஜீரணிக்க பித்தத்தை உற்பத்தி செய்தல், வளர்சிதை மாற்றத்தைக் கட்டுப்படுத்துதல், புரதங்கள் மற்றும் கொழுப்பு போன்றவற்றைச் சேமித்து வழங்குதல் போன்றவற்றை செய்கிறது. கல்லீரலில் பாதிப்பு ஏற்பட்டால் சில அறிகுறிகளின் மூலம் தெரிந்து கொள்ளலாம்
(2 / 7)
பாதங்கள் மற்றும் கணுக்கால்களில் வீக்கம்: கல்லீரல் சரியாக செயல்படவில்லை என்றால், உடலில் திரவம் தேங்கும். இது பாதங்கள் மற்றும் கணுக்கால்களில் வீக்கத்தை உருவாக்குகிறது. கல்லீரல் பிரச்னைகள் கால்களின் தோலின் நிறத்தையும் மாற்றுகின்றன. பல நேரங்களில், இந்த கல்லீரல் பிரச்சனை மஞ்சள் காமாலையின் அறிகுறியாகும்
(3 / 7)
கால்களில் தோல் அரிப்பு: கல்லீரல் பிரச்னைகள் உடலின் பல்வேறு பகுதிகளில் அரிப்பை ஏற்படுத்தும். இதேபோல், கால்களின் தோலிலும் அரிப்பு ஏற்படலாம். பல சந்தர்ப்பங்களில், கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த பிரச்னையை எதிர்கொள்ளவார்கள்
(4 / 7)
கால் தசை அல்லது மூட்டு வலி: கல்லீரல் பிரச்னைகள் உடலின் பல்வேறு பகுதிகளில் வலியை ஏற்படுத்தும். இதில் தசைகள் அல்லது கால்களின் மூட்டுகளும் அடங்கும். நடப்பதில் சிரமம் இருந்தாலோ அல்லது கால்களில் ஏதேனும் பிரச்னை இருந்தாலோ, கல்லீரல் செயல்பாட்டு பரிசோதனை செய்து கொள்வது நல்லது
(5 / 7)
அடர்ந்த சிறுநீர்: கல்லீரல் பிரச்னைகள் பல உடல்நல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். உதாரணமாக, சிறுநீரின் நிறம் கருமையாக மாறக்கூடும். இந்த அறிகுறிகளை நீங்கள் சந்தித்தால், நீங்கள் முன்கூட்டியே எச்சரிக்கையாக இருக்க வேண்டும்
(6 / 7)
மலம் நிறம்: கல்லீரல் பிரச்னைகள் காரணமாக மலத்தின் நிறத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும். அவை வெளிர் நிறமாக மாறக்கூடும். சில நேரங்களில் மல நிறம் மிகவும் கருமையாகவும் மாறலாம்
(7 / 7)
குறிப்பு: இந்த தகவல் பொது அறிவு மற்றும் இணையத்தில் காணப்படும் தகவல்கள், ஆய்வுகள் மற்றும் சுகாதார இதழ்களிலிருந்து சேகரிக்கப்பட்டதை அடிப்படையாகக் கொண்டது. இது மருத்துவம் அல்லது சிகிச்சைக்கு மாற்றாக இல்லை. இந்த தகவல் முற்றிலும் உண்மை என்று இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் கூறவில்லை. விரிவான மற்றும் துல்லியமான தகவலுக்கு தொடர்புடைய நிபுணர்களைத் தொடர்பு கொள்ளவும்.உங்கள் உடல்நலம் குறித்து ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால், உடனடியாக மருத்துவரை அணுகவும்
மற்ற கேலரிக்கள்