ஐபிஎல் தொடரில் ஒரு அணிக்காக அதிக ரன்கள் குவித்த முதல் 5 வீரர்கள் பட்டியல்.. கோலிக்கு அடுத்தது ரோஹித்!
ஹிட் மேன் ரோஹித் சர்மா ஐபிஎல் 2025 இல் ஃபார்முக்கு வர நேரம் எடுத்துக் கொண்டார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி அரைசதம் அடித்து முக்கிய பங்காற்றினார். இதன் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஐபிஎல் தொடரில் ரோஹித் சர்மா 6000 ரன்களை கடந்தார்.
(1 / 5)
ஐபிஎல் தொடரில் ஒரு அணிக்காக அதிக ரன்கள் குவித்த இரண்டாவது வீரர் என்ற பெருமையை ரோஹித் சர்மா பெற்றுள்ளார். 231 மேட்ச்களில் மும்பைக்காக 6024 ரன்களை ரோஹித் குவித்துள்ளார்.
(AFP)(2 / 5)
விராட் கோலி, இந்தப் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார். இவர் மொத்தம் 262 மேட்ச்களில் விளையாடி 8447 ரன்களை ஆர்சிபிக்காக குவித்துள்ளார்.
(PTI)மற்ற கேலரிக்கள்








