2025 இல் திருமணம் ஆக வேண்டுமா? அப்போ இந்த கோயில்களுக்கு போங்க அது போதும்! இதோ லிஸ்ட் ரெடி!
- திருமணம் என்பது ஒவ்வொருவரது வாழ்க்கையிலும் முக்கியமான ஒரு நிகழ்வாகும். ஆனால் ஜாதகம் மற்றும் ராசிகளின் அமைப்பால் சிலருக்கு திருமணம் தள்ளிப் போகும். இது போன்ற நேரத்தில் சில கோயில்களுக்கு செல்வது பரிகாரமாக அமையும் எனக் கூறப்படுகிறது. இந்த கோயில்களின் தொகுப்பை இங்கு காண்போம்.
- திருமணம் என்பது ஒவ்வொருவரது வாழ்க்கையிலும் முக்கியமான ஒரு நிகழ்வாகும். ஆனால் ஜாதகம் மற்றும் ராசிகளின் அமைப்பால் சிலருக்கு திருமணம் தள்ளிப் போகும். இது போன்ற நேரத்தில் சில கோயில்களுக்கு செல்வது பரிகாரமாக அமையும் எனக் கூறப்படுகிறது. இந்த கோயில்களின் தொகுப்பை இங்கு காண்போம்.
(1 / 6)
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திருமணஞ்சேரி என்ற ஊரில் அருளும் ஸ்ரீ உத்வாகநாதர் ஸ்வாமி கோயில் மிகவும் பழமையான கோயிலாகும். புராணத்தின் படி, பார்வதி தேவி பூமியில் சிவனை மணக்க விரும்பி தவம் செய்து திருமணஞ்சேரி என்ற இந்த இடத்தில் சிவனை மணந்தார். திருமணத்தில் தடை உள்ளவர்கள் திருமணஞ்சேரி வந்து பிரார்த்தனை செய்தால் தடைகள் விரைவில் நீங்கி திருமணம் எளிதாகும்.
(2 / 6)
நித்ய கல்யாணப்பெருமாள் திருமணம் தள்ளிப் போகக் கூடியவர்களுக்கு உதவிகரமானதாக இருக்கும் கடவுளாகும். திருமணத்தில் தாமதம் ஏற்படுபவர்கள், சென்னையில் இருந்து மகாபலிபுரத்திற்கு செல்லும் கிழக்குக் கடற்கரை சாலையில் 45 நிமிட தூரத்தில் உள்ள திருவிடந்தையில் உள்ள நித்ய கல்யாணப்பெருமாளைத் தரிசிக்க வேண்டும். தடைகள் விலக, விரைவில் திருமணம் நடக்கும்.
(3 / 6)
திருமணம் தொடர்பான பிரச்சினைகளை விலக, திருப்பதிக்கு அருகில் உள்ள சீனிவாச மங்காபுரம் எனும் கிராமத்தில் இருக்கும் ஸ்ரீ கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி கோவிலுக்கு செல்ல வேண்டும். திருமண பிரச்சனைகளை எதிர்கொள்பவர்கள் இந்தக் கோவிலில் பிரார்த்தனைகளை செய்வதன் மூலம் தடைகளிலிருந்து விடுபடலாம் என்று நம்பப்படுகிறது.
(4 / 6)
கும்பகோணத்தில் இருந்து 6 கி.மீ தொலைவில் உள்ள திருவிண்ணைநகரில், விஷ்ணு கோகிலாம்பையை மணந்து திருமண வரம் அளிக்கிறார். ஒரு பரவலான நம்பிக்கையின்படி, கோவிலுக்குச் செல்வது உங்கள் திருமணத் தடைகளை நீக்கி விரைவில் திருமணம் நடக்க இங்கு ஒரு வேத சடங்கு செய்யப்படுகிறது. மேலும் பக்தர்களுக்கு விரைவில் திருமணம் மற்றும் நல்லிணக்கத்தை வழங்க ஆசீர்வாதம் வழங்கப்படுகிறது.
(5 / 6)
மேல்கடம்பூர் என்ற ஊரில் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் உள்ளது. இது ஒரு செவ்வாய்தோஷ நிவர்த்தித் தலமாகவும் விளங்குகிறது. இங்கு வந்து அமிர்தகடேஸ்வரரை வழிபட்டுச் சென்றால், திருமணத் தடை உள்ளவர்களுக்கு விரைவில் திருமணம் நடந்தேறும்.
(6 / 6)
சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இத்தலம் கண்ணப்பர் தொண்டாற்றிப் பேறு பெற்ற தலம் எனப்படுகிறது. பஞ்சபூதத் தலங்களில் ஒன்றான இத்தலம் வாயுத் தலம் ஆகும். மேலும் இங்கு சென்று வழிபட்டு வந்தால் திருமணம் தடை நீங்கி திருமணம் நடைபெறும் என்பது வழக்கத்தில் உள்ள ஒன்றாகும்.
மற்ற கேலரிக்கள்