Padma Bhushan Awardees: அஜித்திற்கு முன்னதாக பத்ம பூஷன் விருதை பெற்ற நடிகர்கள்! எல்லாரும் டாப் ஹீரோவா! இதோ லிஸ்ட்!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Padma Bhushan Awardees: அஜித்திற்கு முன்னதாக பத்ம பூஷன் விருதை பெற்ற நடிகர்கள்! எல்லாரும் டாப் ஹீரோவா! இதோ லிஸ்ட்!

Padma Bhushan Awardees: அஜித்திற்கு முன்னதாக பத்ம பூஷன் விருதை பெற்ற நடிகர்கள்! எல்லாரும் டாப் ஹீரோவா! இதோ லிஸ்ட்!

Jan 26, 2025 02:19 PM IST Suguna Devi P
Jan 26, 2025 02:19 PM , IST

  • Padma Bhushan Awardees: நடிகர் அஜீத் குமாருக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டதை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். மேலும் இந்தியாவில் வழங்கப்படும் உயரிய விருதுகளில் ஒன்றாகவும் கருதப்படுகிறது. இந்த விருதினை தமிழ் ஹீரோக்களில் வேறு சிலரும் பெற்றுள்ளனர். 

இந்தியா அரசு சார்பாக நாட்டில் கலை, அறிவியல் சமூகப்பணி, பொதுப்பணி, அறிவியல், வர்த்தகம், மருத்துவம், இலக்கியம்,கல்வி, விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு நாட்டின் உயிரிய விருதான பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன், பத்ம விபூஷண் ஆகிய விருதுகளை மத்திய அரசு வழங்கி வருகிறது. இது குடியரசு தின விழாவை ஒட்டி அறிவிக்கப்பட்டு பின் வழங்கப்படும் விருதாகும். இந்த ஆண்டிற்கான பத்ம பூஷன் விருதுகளை தமிழ்நாட்டை சேர்ந்த 13 பேர் வாங்குகிறார்கள். அதில் நடிகர் அஜித் குமாரும் ஆவார். தமிழில் வேறு சில டாப் ஹீரோக்களுக்கும் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. 

(1 / 6)

நடிப்பு என்றால் தானாகவே கைகள் இவரது பெயரை எழுதி விடும். அந்த அளவிற்கு திறமை வாய்ந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பிற்கு பல அங்கீகாரங்கள் கிடைத்துள்ளது. அவரது திரை உலக பணிக்காக 1966 ஆம் ஆண்டு பத்ம ஸ்ரீ விருதும், 1984 ஆம் ஆண்டு பத்ம பூஷன் விருதும் வழங்கி இந்திய அரசு இவரை கௌரவித்தது. 

(2 / 6)

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ஆக அரை நூற்றாண்டுக்கும் மேல் ஜொலித்து வரும் நடிகர் ரஜினிகாந்திற்கு இந்திய அரசின் பத்ம விருதுகள் வழங்கப்பட்டுள்ளது. திரைத்துரையில் இவரது அர்ப்பணிப்பு காரணமாக 2000 ஆம் ஆண்டு பத்ம பூஷன், 2016 ஆம் ஆண்டு பத்ம விபூஷன் என இரண்டு விருதுகள் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது. 

(3 / 6)

நடிப்பிற்கு சிவாஜிக்கு பின் ஒருவர் இருக்கிறார் என்றால் அது கமல் ஹாசன் தான். அவருக்கும் இரண்டு முறை பத்ம விருதுகள் வழங்கப்பட்டுள்ளது. 1990 ஆம் ஆண்டு பத்ம ஸ்ரீ  மற்றும் 2014 ஆம் ஆண்டு பத்ம பூஷண் விருதும் வாங்கியுள்ளார். 

(4 / 6)

மறைந்த நடிகர் கேப்டன் விஜய்காந்திற்கு கடந்த 2024 ஆம் ஆண்டிற்கான பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இதனை அவரது மனைவி ஹேமலதா பெற்றுக் கொண்டார். இருப்பினும் விஜய்காந்த் உயிருடன் இருக்கும் போதே அவருக்கு விருது வழங்கி இருக்கலாம் எனவும் பேச்சு எழுந்தது. 

(5 / 6)

நடிகர் அஜித்குமாருக்கு 2025 ஆம் ஆண்டிற்கான பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியாக கொண்டாடி வருகின்றனர். மேலும் பல பிரபலங்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தும் வருகின்றனர். 

(6 / 6)

மற்ற கேலரிக்கள்