இந்த படத்தின் கதை இதுவா? படமாக மாறிய நாவல்களின் கதைகளின் பட்டியல்! இந்த படமும் இருக்கா?
- புதினங்களை அடிப்படையாகக் கொண்டு திரைப்படங்களை உருவாக்குவதில் முதன்மையானது மலையாள சினிமாதான் ஆனால் தமிழிலும் அதற்கான முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அப்படி நாவலாக இருந்து திரைப்படங்களாக மாறிய சில படங்களை இங்கு காண்போம்.
- புதினங்களை அடிப்படையாகக் கொண்டு திரைப்படங்களை உருவாக்குவதில் முதன்மையானது மலையாள சினிமாதான் ஆனால் தமிழிலும் அதற்கான முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அப்படி நாவலாக இருந்து திரைப்படங்களாக மாறிய சில படங்களை இங்கு காண்போம்.
(1 / 7)
பிரிவோம் சந்திப்போம் டூ ஆனந்த தாண்டவம் 2009 ஆம் ஆண்டு தமன்னா நடிப்பில் வெளிவந்த ஆனந்த தாண்டவம் திரைப்படம் எழுத்தாளர் சுஜாதா அவர்களின் பிரிவோம் சந்திப்போம் நாவலை உரித்தாற் போல் எடுக்கப்பட்டது. இருப்பினும் இப் புதினத்திற்கு கிடைத்த வரவேற்பில் சிறிதளவு கூட திரைப்படத்திற்கு கிடைக்கவில்லை.
(2 / 7)
காவலர் கோட்டம் டூ அரவான் மதுரை பாராளுமன்ற தொகுதி உறுப்பினரும் எழுத்தாளரும் ஆன சு. வெங்கடேசன் அவர்களின் கைவண்ணத்தில் விகடன் பதிப்பகத்தில் வெளிவந்த சாகித்ய அகாடமி விருது பெற்ற 'காவல் கோட்டம்' புதினத்தை அடிப்படையாக வைத்து இயக்குனர் வசந்த பாலன் அவர்கள் அரவான் திரைப்படத்தை தழுவி எடுத்துள்ளார். எழுதப்பட்ட வார்த்தையை திரையில் மாற்றியமைப்பது எளிதான காரியமல்ல; வசந்தபாலன் மற்றும் வெங்கடேசன் இணைந்து 18 ஆம் நூற்றாண்டின் தமிழ்நாட்டை கச்சிதமாக, பேச்சுவழக்குகளை வெளிப்படுத்தும் திரைக்கதை மற்றும் வசனங்களை உருவாக்கியுள்ளனர்.
(3 / 7)
லாக்கப் டூ விசாரணை நாவல்களைத் தழுவியெடுப்பதில் கைதேர்ந்தவரான இயக்குனர் வெற்றிமாறன் பல படங்களை அடிப்படையாக வைத்து இயக்கியுள்ளார். சந்திர குமாரின் வாழ்வனுபவத்தில் இருந்து எழுதப்பட்டது ’லாக்கப்’ நாவல். அதேபோல, இந்தப் படத்தில் வரும் சம்பவங்களில் பெரும்பான்மையானவை நிஜ வாழ்க்கையில் இருந்து எடுக்கப்பட்டவை. ‘விசாரணை’ திரைப்படம் ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப் பட்டிருக்கிறது. விகடன் விமர்சனக் குழுவின் இரண்டாவது அதிகபட்ச மதிப்பெண்ணை (61/100) பெற்ற திரைப்படமாக விசாரணை இன்று வரை இருந்து வருகிறது.
(4 / 7)
வெண்ணிற இரவுகள் டூ இயற்கை எழுத்தாளர் தாஸ்தயேவ்ஸ்கி வெண்ணிற இரவுகள் புதினத்தை அடிப்படையாக வைத்து புரட்சி இயக்குனர் எஸ் பி ஜனநாதன் இயக்கத்தில் வெளிவந்த இயற்கை திரைப்படம் பல ஒரு தலை காதல்களின் இதயத்தை கனகனக்க வைத்தது. மேலும் திரைப்படம் அந்த ஆண்டிற்கான சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான தேசிய விருதையும் பெற்றது.
(5 / 7)
வெக்கை டூ அசுரன் பூமணி அவர்களின் எழுத்தில் உருவான வெக்கை புதினத்தின் கருவை மையமாக வைத்து வெளிவந்த திரைப்படம் அசுரன். இப்படமும் அந்த ஆண்டிற்கான சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான தேசிய விருதையும் சிறந்த நடிகருக்கான விருதையும் தனுஷுக்கு பெற்று தந்தது.
(6 / 7)
ரெட் டீ டூ எரியும் பனிக்காடு டூ பரதேசி இந்தத் திரைப்படம் பால் ஹாரிஸ் டேனியலின் 1969 ஆம் ஆண்டு ஆங்கில நாவலான 'ரெட் டீ' யின் தமிழ் மொழிபெயர்ப்பான இரா. முருகவேளின் 'எரியும் பனிக்காடு' நாவலை அடிப்படையாகக் கொண்டது மற்றும் 1930 களில் சுதந்திரத்திற்கு முன் நடந்த நிஜ வாழ்க்கை சம்பவங்களால் ஈர்க்கப்பட்டது. இப்படத்திற்கு நாஞ்சில் நாடன் அவர்கள் வசனம் எழுதியுள்ளார். மேலும், பரதேசி திரைப்படத்தின் இயக்குனர் பாலா என்பது அனைவரும் அறிந்ததே.
மற்ற கேலரிக்கள்