Banupriya: டான்சிங் டால் பானுப்பிரியா பர்த்டே ஸ்பெஷல்! நடனத்தில் கலக்கிய பாடல்களின் லிஸ்ட் இதோ!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Banupriya: டான்சிங் டால் பானுப்பிரியா பர்த்டே ஸ்பெஷல்! நடனத்தில் கலக்கிய பாடல்களின் லிஸ்ட் இதோ!

Banupriya: டான்சிங் டால் பானுப்பிரியா பர்த்டே ஸ்பெஷல்! நடனத்தில் கலக்கிய பாடல்களின் லிஸ்ட் இதோ!

Jan 15, 2025 07:33 AM IST Suguna Devi P
Jan 15, 2025 07:33 AM , IST

  • Banupriya: தமிழ் சினிமாவின் 80 களில் கலக்கிய நடிகை பானுப்பிரியா அவரது 58 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். வசீகர நடனத்தால் ரசிகர்களை கவர்ந்துள்ளார். அவரது நடனத்திறமையை காட்டும் பாடல்களின் பட்டியலை இங்கு காண்போம். 

1967 ஆம் ஆண்டு ஜனவரி 15 அன்று ஆந்திராவில் பிறந்தார். இருப்பினும் சென்னையில் தான் வளர்ந்தார். சென்னைத்தமிழை சரளமாக பேசும் பானுப்பிரியா அற்புதமான நடிப்பாலும், அட்டகசமான நடனத்தாலும் 80 களின் சினிமா ரசிகர்களை மட்டுமில்லாமல் தற்கால ரசிகர்களையும் ரசிக்க வைத்து வருகிறார். அவரது பிறந்தநாளான இன்று பானுப்பிரியாவின் நடன திறமையை எடுத்துக் காட்டும் பாடல்களின் பட்டியலை காண்போம்.  

(1 / 6)

இயக்குனர் சபாபதி தக்ஷனா மூர்த்தி இயக்கி 1992 ஆம் ஆண்டு வெளியாகிய படம் பரதன். இப்படத்தில் கேப்டன் விஜய்காந்த், பானுப்பிரியா நடித்துள்ளனர். இப்படத்தில் இளையராஜா இசையில் “புன்னகையில் மின்சாரம்” என்ற பாடல் வரும். இப்படாலுக்கு பிரபுதேவா நடன அசைவுகளில் விஜய்காந்த் மற்றும் பானுப்பிரியா ஸ்டைலிஷ் ஆக நடனம் ஆடி இருப்பார்கள். பார்ப்பதற்கே மிகவும் கூல் ஆக இருக்கும். இளையராஜாவின் பெப்பி இசையும் அசத்தலாக இருக்கும். 

(2 / 6)

இயக்குனர் கே பாலச்சந்தர் இயக்கத்தில் 1997 ஆம் ஆண்டு வெளியான அழகன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி படமாகும் இப்படத்தில் மம்முட்டியுடன் மூன்று கதாநாயகிகள் நடித்திருப்பார்கள் அதில் மம்மூட்டிக்கு ஜோடியாகும் கதாபாத்திரத்தில் பானுப்ரியா நடித்திருப்பார் அதில் அவரது கதாபாத்திரமே நடனம் ஆடுபவர் தான். இதில் வரும் ஜாதிமல்லி பூச்சரமே பாடலுக்கு பரத நாட்டியம் ஆடியிருப்பார். இப்பாடலில் இவரது  முக பாவனை சிறப்பாக இருக்கும். மேலும் அப்படத்தில் நடனம் ஆடிய வாறே மம்மூட்டியிடம் சண்டையிடும் காட்சியும் பார்ப்பதற்கு சிறப்பாக இருக்கும். 

(3 / 6)

இயக்குனர் பிரியதர்சனின் முதல் படமான கோபுர வாசலிலே படத்தில் நவரச நாயகன் கார்த்தியுடன் நடித்து இருப்பார். மிகவும் அசத்தலான பரத நாட்டியத்தில் சிறப்பாக இருக்கும். 

(4 / 6)

பானுப்பிரியா நடித்த தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் இவரது நடனத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கூடிய வகையில் பல பாடல்கள் இருக்கும். இவரது நடனம் அப்படங்களுக்கு சிறப்பான அனுபவத்தை வழங்கும். 

(5 / 6)

90 ஸ் கிட்ஸ்களுக்கு பானுப்பிரியா நடனம் என்றால் செல்லமே படத்தில் வந்த செக்கச்சிவந்த அழக பாடலுக்கு நேர்த்தியான நடனம் தான் நினைவுக்கு வரும். இவர் வரும் பிரேம்களில் நம்மால் ரசிக்காமல் இருக்க முடியாது. 

(6 / 6)

மற்ற கேலரிக்கள்