Afghanistan vs Uganda: டி20 உலகக் கோப்பை போட்டிகளில் தனித்துவ சாதனை படைத்த ஆப்கானிஸ்தான் பவுலர் ஃபரூக்கி
- Afghanistan vs Uganda, T20 World Cup 2024: ரஷித்கான் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணி, உகாண்டாவுக்கு எதிரான தனது முதல் போட்டியில் மிக பெரிய வெற்றியை பெற்றுள்ளது. இந்த போட்டியில் நிகழ்த்தப்பட்டிருக்கும் சாதனைகள் பற்றி பார்க்கலாம்
- Afghanistan vs Uganda, T20 World Cup 2024: ரஷித்கான் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணி, உகாண்டாவுக்கு எதிரான தனது முதல் போட்டியில் மிக பெரிய வெற்றியை பெற்றுள்ளது. இந்த போட்டியில் நிகழ்த்தப்பட்டிருக்கும் சாதனைகள் பற்றி பார்க்கலாம்
(1 / 5)
உகாண்டா அணிக்கு எதிராக ஆப்கானிஸ்தான் 125 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் 183 ரன்கள் எடுத்த நிலையில், அதை சேஸ் செய்த உகாண்டா 58 ரன்களில் ஆல்அவுட்டானது
(2 / 5)
இந்த போட்டியில் முதல் விக்கெட்டுக்கு ரஹ்மனுல்லா குர்பாஸ் - இப்ராஹிம் ஜத்ரன் ஆகியோர் 154 ரன்கள் சேர்தLனர். இதன் மூலம் டி20 உலகக் கோப்பை போட்டிகளில் முதல் விக்கெட்டுக்கு சேர்க்கப்பட்ட இரண்டாவது பெரிய பார்ட்னர்ஷிப்பாக இது அமைந்தது. இந்தியாவுக்கு எதிராக 2022 உலகக் கோப்பை அரையிறுதியில் ஜோஸ் பட்லர் - அலெக்ஸ் ஹேல்ஸ் அடித்த 170 ரன்களே சிறந்த ஓபனிங் பார்ட்னர்ஷிப்பாக உள்ளது
(3 / 5)
ஆப்கானிஸ்தான் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரஹ்மனுல்லா குர்பாஸ் இந்த போட்டியில் 45 பந்துகளில் 76 ரன்கள், 4 பவுண்டரி, 4 சிக்ஸர்களுடன் அடித்தார். இதன்மூலம் டி20 உலகக் கோப்பையில் அதிக ரன்கள் அடித்த ஆப்கானிஸ்தான் விக்கெட் கீப்பர் என்ற சாதனை புரிந்தார். இதுமட்டுமில்லாமல் டி20 உலகக் கோப்பை போட்டியில் ஆப்கானிஸ்தான் பேட்ஸ்மேன் அடித்த அதிகபட்ச ஸ்கோர் என்ற சாதனையாகவும் இது அமைந்தது
(4 / 5)
ஆப்கானிஸ்தான் இடது கை வேகப்பந்து வீச்சாளரான ஃபசல் ஃபரூக்கி வெறும் 9 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன் மூலம் இங்கிலாந்து இடது கை வேப்பந்து வீச்சாளர் சாம் கரன் 5/10 என்ற சாதனையை முறியடித்துள்ளார். அத்துடன் டி20 உலகக் கோப்பை தொடரில் இடது கை வேகப்பந்து வீச்சாளரின் சிறந்த பவுலிங்காகவும் இது அமைந்துள்ளது.
மற்ற கேலரிக்கள்