இவர் தான் ரியல் பான் இந்தியா ஸ்டார்! எல்லா ஸ்டேட்லயும் இவர் தான் கில்லி! துல்கர் சல்மானை மெருகேற்றிய திரைப்பயணம்!
- தற்போதைக்கு இந்தியாவில் யார் வேண்டுமானாலும் பான் இந்திய நட்சத்திரம் என தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளலாம். ஆனால் உண்மையிலேயே ஒரு பான் இந்தியா நட்சத்திரம் என்றால் அது துல்கர் சல்மான் தான். ஏனென்றால் இந்தியாவின் பெரும்பான்மையான மொழிகளில் நடித்து சாதனை படைத்தவர்.
- தற்போதைக்கு இந்தியாவில் யார் வேண்டுமானாலும் பான் இந்திய நட்சத்திரம் என தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளலாம். ஆனால் உண்மையிலேயே ஒரு பான் இந்தியா நட்சத்திரம் என்றால் அது துல்கர் சல்மான் தான். ஏனென்றால் இந்தியாவின் பெரும்பான்மையான மொழிகளில் நடித்து சாதனை படைத்தவர்.
(1 / 6)
இந்தியா சினிமா ரசிகர்களில் அனைத்து மொழி பேசுபவர்களிடையேயும் ஒரு ஒற்றுமை உள்ளது. யாராக இருந்தாலும், அதிக பின்புலம் உள்ள நடிகராக இருந்தாலும் திறமையான நடிகரை மட்டுமே வெற்றி பெற வைப்பார்கள். அதில் ஒருவர் தான் மலையாளத் திரையுலகில் இருந்து வந்த துல்கர் சல்மான், மலையாளத்தில் உச்ச நடிகராக இருக்கும் மம்மூட்டியின் மகன் என்ற அடையாளத்துடன் சினிமா உலகிற்கு வந்து தற்போது இந்தியாவின் முன்னணி நடிகராக உயர்ந்துள்ளார்.
(2 / 6)
மலையாளத்தில் 2012 ஆம் ஆண்டு செகண்ட் ஷோ என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் துல்கர், முதல் படமே கேங்கஸ்டர் கதைக்களத்தில் கேரளா முழுவயதும் வணிக ரீதியாக பெரும் வெற்றி பெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து வந்த உஸ்தாத் ஹோட்டல் இன்று வரை சினிமா விமர்சகர்கள் கொண்டாடும் ஒரு பீல் குட் படமாக இருந்து வருகிறது.
(3 / 6)
மலையாளத்தில் கொடிக்கட்டி பறந்த துல்கர் 2014 ஆம் ஆண்டு வாயை மூடி பேசவும் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார். அடுத்த 2015 ஆம் ஆண்டே தமிழ் சினிமாவின் பெரிய இயக்குனராக பார்க்கப்படும் மணிரத்னத்தின் ஓகே கண்மணி திரைப்படத்தில் நடித்தார். இப்படத்தின் வாயிலாக தாராவின் ஆதியாகவும், ஆத்மார்த்தமான காதலனாகவும் தமிழ் ரசிகர்களின் மனதை களவாடி விட்டார்.
(4 / 6)
2018 ஆம் ஆண்டு இந்தி திரையுலக ரசிகர்களை மகிழ்விக்க களம் இறங்கினார் துல்கர். இயக்குனர் ஆகாஷ் குரானா இயக்கத்தில் காமெடி படமாக உருவான கர்வான் படத்தில் நடித்து இந்திக்கு அறிமுகமானார். அப்படத்திலேயே இர்பான் கானுடன் இணைந்து நடித்து அசத்தியிருப்பார். மேலும் இந்தியில் சோயா ஃபேக்டரி, சுப் என இந்தியிலும் அழியாத தடம் பதித்தார்.
(5 / 6)
தெலுங்கில் மகாநடி படத்தில் இவரை யாரும் துல்கராக பார்த்திருக்க மாட்டார்கள். ஜெமினி கணேசனாக அனைத்து காட்சிகளிலும் ரசிகர்களை ஆக்கிரமித்து இருப்பார். அடுத்ததாக நேரடி தெலுங்கு படமான சீதா ராமம் தெலுங்கு மட்டுமில்லாமல் தமிழ் ரசிகர்களையும் ஆட்கொண்டு விட்டது. இவர் ஏற்று கதாபாத்திரங்கள் அனைத்தையும் இவரைத் தவிர வேறு யாராலும் நடிக்க முடியாது என்று தான் கூற வேண்டும். அந்த அளவிற்கு இவரது நேர்த்தியான நடிப்பும், வசன உச்சரிப்பும் சிறப்பானதாக இருக்கும்.
(6 / 6)
2024 ஆம் ஆண்டில் இவர் நடிப்பில் வெளியான லக்கி பாஸ்கர் தெலுங்கு, தமிழ் உட்பட பல மொழிகளில் வசூலை அள்ளிக்குவித்தது எல்லாரும் அறிந்ததே. இவரது வாழ்க்கையில் எல்லா படங்களும் இவருக்கு ஒரு மைல் கல் தான். நடித்த அத்தனை மொழிகளிலும் அவரே டப்பிங் பேசியுள்ளார் என்பது இவரின் தனிச்சிறப்பு. இவர் தான் கடந்த சில வருடங்களாகவே ரியல் பான் இந்திய நட்சத்திரமாக ஜொலித்து வருகிறார்.
மற்ற கேலரிக்கள்