நடிகர் சூர்யா தவறவிட்ட படங்கள் என்னென்ன தெரியுமா? இந்த படமும் இருக்கா? சுவாரசிய தகவல்!
- தமிழில் வெளியாகும் பல படகளில் முதலில் ஒரு நடிகர் நடிக்க இருந்திருப்பார். சில காரணங்களால் அவர் அந்த படத்தில் இருந்து விலகி வேறு ஒரு நடிகரின் நடிப்பில் அந்த படம் வெளியாகும். இதில் நடிகர் சூர்யா நடிக்க இருந்து பின்னர் வேறு நடிகர் நடித்து வெளியான படங்களின் பட்டியலை இங்கு காண்போம்.
- தமிழில் வெளியாகும் பல படகளில் முதலில் ஒரு நடிகர் நடிக்க இருந்திருப்பார். சில காரணங்களால் அவர் அந்த படத்தில் இருந்து விலகி வேறு ஒரு நடிகரின் நடிப்பில் அந்த படம் வெளியாகும். இதில் நடிகர் சூர்யா நடிக்க இருந்து பின்னர் வேறு நடிகர் நடித்து வெளியான படங்களின் பட்டியலை இங்கு காண்போம்.
(1 / 6)
இயக்குனர் பாலா இயக்கத்தில் வணங்கான் படத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு சூர்யா நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார், ஆனால் சில காரணங்களால் இப்படத்தில் இருந்து வெளியேறுவதாக சூர்யா அறிவித்து இருந்தார். அடுத்து இப்படத்தில் நடிகர் அருண் விஜய் நடித்து கூடிய விரைவில் இப்படம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இப்படத்தில் இயக்குனர் பாலா சூர்யாவை சரியாக நடத்த வில்லை என கோலிவுட் வட்டாரத்தில் ஒரு பேச்சு அடிப்பட்டது.
(2 / 6)
இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் நடிகர் ராமசரண் நடித்து வெளியான திரைப்படம் மஹாதீரா, இப்படம் தமிழில் டப் செய்யப்பட்டது மாவீரன் என வெளியாகியது. இரண்டு மொழிகளிலும் கணிசமான வசூல் பெற்றிருந்த இப்படத்தில் முதலில் சூர்யா தான் நடிக்க இருந்தாராம். பின் வேறு காரணங்களால் நடிக்க முடியாமல் போனதாம்.
(3 / 6)
இயக்குனர் பா. ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் கார்த்தி வெளியான மெட்ராஸ் படத்திற்கு கிடைத்த வரவற்பை அடுத்து சூர்யாவை வைத்து ஒரு படத்தை இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் இப்படமும் கைவிடப்பட்டது.
(4 / 6)
இயக்குனர் ஹரியுடன் சேர்ந்த சிங்கம் சீரிஸ், வேல் என வெற்றிக் கூட்டணியில் இருந்த சூர்யா மீண்டும் அருவா என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாக்கினார். ஆனால் வேறு படங்களில் பிஸியான காரணத்தால் இப்படமும் வெளியாகவில்லை.
(5 / 6)
இயக்குனர் கௌதம் மேனனின் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகி இன்று வரை வெளியாகமல் இருக்கும் துருவ நட்சத்திரம் படத்தில் முதலில் நடிக்க இருந்தது சூர்யா தான். ஆனால் அவரின் கால்ஷீட் கிடைக்காத காரணத்தால் விக்ரம் நடித்து இருந்தார்.
மற்ற கேலரிக்கள்