Oscar 2025: ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட 7 இந்திய படங்கள்! எந்த ஓடிடி தளத்தில் பார்க்கலாம்?
Oscar 2025: இந்த ஆண்டு, 7 இந்தியப் படங்கள் ஆஸ்கார் 2025 இல் சிறந்த திரைப்படப் பிரிவில் இடம் பெற்றுள்ளன. இந்த படங்களை எந்த ஓடிடி தளங்களில் பார்க்கலாம் என இங்கு காணலாம்.
(1 / 8)
ஆஸ்கர் 2025 விருது குறித்தான பரிந்துரைப் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக நடிகர்கள் மட்டுமின்றி ரசிகர்களும் விருதுக்காக காத்திருக்கின்றனர். இந்த ஆண்டுக்கான ஆஸ்கர் விருது அறிவிக்கப்பட்டதிலிருந்து அனைவரும் மிகவும் உற்சாகமாக உள்ளனர். இந்த பட்டியலில் 323 திரைப்படங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 2025 ஆஸ்கர் விருதுகளின் சிறந்த திரைப்படப் பிரிவில் 7 இந்தியப் படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த படங்கள் என்ன, எந்த OTT தளங்களில் அவற்றைப் பார்க்கலாம் என இங்கு காணலாம்...
(2 / 8)
தமிழ் சினிமாவின் ஸ்டார் ஹீரோவான சூர்யா மற்றும் பாலிவுட் நடிகர் பாபி தியோல் ஆகியோர் நடித்து வெளியான 'கங்குவா' படமும் ஆஸ்கர் 2025 பட்டியலில் இடம் பிடித்துள்ளது. இப்படத்தை ஓடிடி தளமான அமேசான் பிரைம் தளத்தில் பார்க்கலாம்.
(3 / 8)
'ஆடுஜேவிதம்: தி கோட் லைஃப்' ஆஸ்கர் 2025 பந்தயத்தில் நுழைந்துள்ளது மற்றும் மலையாள நடிகர் பிருத்விராஜ் சுகுமாரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார், இப்படத்தை சர்வதேச ஓடிடி தளமான நெட்ஃபிளிக்ஸில் பார்க்கலாம்.
(4 / 8)
இந்தியாவின் கதையை அடிப்படையாகக் கொண்ட சந்தோஷ் என்ற குறும்படமும் இந்த பட்டியலில் உள்ளது. இருப்பினும், சந்தியா சூரி இயக்கிய இங்கிலாந்தை பிரதிநிதித்துவப்படுத்தும் படம் என்பதால் இது 2025 ஆஸ்கர் பரிந்துரையை எட்டியுள்ளது. ஓடிடி தளமான மொபியில் இந்த படத்தை பார்க்கலாம்.
(5 / 8)
பாலிவுட் நடிகர் ரன்தீப் ஹூடாவின் 'ஸ்வதந்திர வீர் சாவர்க்கர்' படமும் ஆஸ்கர் 2025 பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் தோல்வியடைந்தது, ஆனால் ஆஸ்கார் பட்டியலில் இடம் பிடித்தது. ஜி5 ஒடிடி தளத்தில் இந்த படத்தை நீங்கள் பார்க்கலாம்.
(6 / 8)
2025 ஆஸ்கர் விருது பட்டியலில் 'ஆல் வீ இமேஜின் அஸ் லைட்' படமும் சேர்க்கப்பட்டுள்ளது. திவ்யா பிரபா, கனி குஸ்ருதி, ஹிருது ஹாரூன் மற்றும் சாயா கதம் ஆகியோரின் நடிப்பு மிகவும் பாராட்டப்பட்டது. ஓடிடி தளமான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் படத்தை பார்க்கலாம்.
(7 / 8)
சுச்சி தலாட்டி இயக்கிய 'கேர்ள்ஸ் வில் பி கேர்ள்ஸ்' படமும் ஆஸ்கர் 2025 பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. இப்படம் ஓடிடி தளமான பிரைம் வீடியோவில் ஆங்கிலம், இந்தி மற்றும் மலையாளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
மற்ற கேலரிக்கள்