90s Tamil Directors: 90களை கலக்கிய இயக்குநர்கள்! ஃபீல்ட் அவுட் ஆகியவர்கள் யார்த் தெரியுமா?
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  90s Tamil Directors: 90களை கலக்கிய இயக்குநர்கள்! ஃபீல்ட் அவுட் ஆகியவர்கள் யார்த் தெரியுமா?

90s Tamil Directors: 90களை கலக்கிய இயக்குநர்கள்! ஃபீல்ட் அவுட் ஆகியவர்கள் யார்த் தெரியுமா?

Feb 03, 2025 03:16 PM IST Suguna Devi P
Feb 03, 2025 03:16 PM , IST

  • 90s Tamil Directors: சமூக வலைத் தளங்களில் க்ரிஞ்ச் என்றும், பூமர் என்றும் அழைக்கபடுபவர்கள் தான் இந்த 90 ஸ் கிட்ஸ்.  90 களில் பிறந்தவர்களின் வாழ்க்கையை மகிழ்ச்சிகரமாக மாற்றிய பங்கு தமிழ் சினிமாவிற்கும் உண்டு. அந்த வரிசையில் 90களை கலக்கிய தமிழ் இயக்குனர்களில் சிலரை இங்கு காணலாம். 

90 களில் தமிழில் வெளியான படங்கள் உறவுகளுக்கு முக்கியத்துவம் அளிப்பாவையாகவும், அதிக யதார்த்தம் நிறைந்த படங்களாகவும், போலித்தன்மை இல்லாதவையாகவும் உள்ளன எனக் கூறலாம். இன்றைய 2 கே கிட்ஸ்கள் க்ரிஞ்ச், பூமர் எனக் கூறும் விஷயங்களே அன்றைய படங்களில் முதன்மையானவையாக இருந்தன. 90 களை தாண்டியும் இன்றும் இப்படங்களுக்கு என நம் மனதில் தனி இடங்களை கொடுத்துள்ளோம். அப்படிப்பட்ட படங்களை இயக்கிய இயக்குனர்களில் சிலரையும், அதில் ஃபீல்ட் ஆனவர்களையும் குறித்து இங்கு காண்போம். 

(1 / 7)

இயக்குனர் விக்ரமனை கடக்காமல் 90 கள் இருந்திருக்காது. ஒரு முழு நீள படத்தின் வாயிலாக நாம் வாழ விரும்பும் அனைத்தையும் காட்டி விடுவார். இவரது படத்தில் எல்லாரும் நல்லவர்களாகவே காட்டப்படுவார்கள். இன்று வரை சூரியவம்சம், பூவே உனக்காக மற்றும் வானத்தை போல உட்பட அவரது பல படங்களை எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம். அந்த அளவிற்கு சலிப்பு ஏற்படாத வண்ணம் இருக்கும். இயக்குனர் விக்ரமனுக்கு இறுதியாக வெற்றிக் கொடுத்த படம் என்றால் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான பிரியமான தோழி மற்றும் வசந்தம் படங்கள் தான். அதன் பின்னர் சென்னையில் காதல், மரியாதை போன்ற படங்களை இயக்கினார். எதுவும் இவரது முந்தைய படங்களை போல செல்ல வில்லை. 

(2 / 7)

வயிறு வலிக்க வலிக்க சிரிப்பதற்கு சில காமெடி படத்தை சொல்லுங்கள் என்றால் அதில் பஞ்சதந்திரம் நிச்சயமாக இடம்பெறும். படம் தொடங்கியதில் இருந்து இறுதி காட்சி வரை நகைச்சுவையாக இருக்கும். கமல், ஜெயராம், ஸ்ரீமான், ஊர்வசி, நாகேஷ், சிம்ரன் மற்றும் ரம்யா கிருஷ்ணன் என ஒரு நட்சத்திர பட்டாளமே சேர்ந்து ரசிகர்களை சிரிக்க வைத்திருப்பார்கள். 90 களின் தொடக்கத்திலும் கே. எஸ். ரவிக்குமார் பல அற்புதமான படங்களை கொடுத்துள்ளார். முன்னணி நடிகர்களான ரஜினி, கமல், அஜித், விஜய் மற்றும் சரத்குமார் என எல்லா ஹீரோக்களுடனும் பணியாற்றியுள்ளார். தமிழில் ரஜினியை வைத்து 2014 ஆம் ஆண்டு லிங்கா என்ற படத்தை இயக்கி இருந்தார். அதன் பிறகு தமிழில் படங்கள் எதுவும் இயக்க வில்லை. தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். 

(3 / 7)

பாடகர் பாலசுப்பிரமணியத்தின் நடிகர் என்ற பரிணாமத்தை அற்புதமாக வெளிக்கொண்டு வந்தவர் இயக்குனர் வசந்த். அதுவும் கேளடி கண்மணி படம் வசந்தின் முதல் படமாகும். ஆசை, நேருக்கு நேர் என அன்றைய காலகட்டத்தில் அற்புதமான படங்களை கொடுத்துள்ளார். பலரது ஆல் டைம் பேவரைட் படமாக இருக்கும் ரிதம் படத்தினை இயக்கியதும் வசந்த் தான். கடைசியாக இவரது இயாயக்கத்தில் 2021 ஆம் ஆண்டு சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் என்ற படம் வெளியாகி சிறந்த படத்திற்கான தேசிய விருது கிடைத்தது. 

(4 / 7)

இயக்குனர் அகத்தியன் திரை வாழ்க்கையில் அக்மார்க் படம் என்றால் அது காதல் கோட்டை  தான். இன்று வரை சூர்யாவும் கமலியும் ரசிகர்களின் மனதில் வாழ்ந்து வருகின்றனர். கோகுலத்தில் சீதை, பொண்டாட்டி ராஜ்யம் போன்ற வித்தியாச கதைகளத்துடன் 90 களின் காலக்கட்டத்தை சிறப்பாக்கினார். 

(5 / 7)

இயக்குனர் பி. வாசு 1981 ஆம் ஆண்டே தமிழில் பன்னீர் புஷ்பங்கள் என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி விட்டார். அதனைத் தொடர்ந்து தெலுங்கு, கன்னட மொழிகளிலும் சில படங்களை இயக்கியுள்ளார். இவரது பயணத்தில் 90 களில் வெளியான பணக்காரன், சின்னத்தம்பி, மன்னன் மற்றும் உழைப்பாளி உட்பட பல படங்கள் முக்கியமான படங்களாகும். 2000 தொடங்கியபின்னர் இவரது இயக்கத்தில் வெளியான சந்திரமுகி படம் மாபெரும் வெற்றியடைந்தது. ஆனால் சமீபத்தில் வெளியான சந்திரமுகி 2 எதிர்பார்த்த அளவு வரவேற்பை பெறவில்லை. 

(6 / 7)

இயக்குனர் சேரன் 90 களின் இறுதியில் தான் தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்தார். ஆனால் அவர் வைத்த ஒவ்வொரு அடியும் சிறப்பான அடியாகத்தான் இருந்தது. பாரதி கண்ணம்மா, பொற்காலம் என எளிய மக்களின் வாழ்வியலை படம் பிடித்து காட்டினார். இவரின் இயக்கத்தில் வெளியான வெற்றி கொடி கட்டு சிறந்த ஊக்குவிப்பை அளிக்கும் படமாகும். 

(7 / 7)

மற்ற கேலரிக்கள்