டும் டும் மேளச்சத்தம்! 2024 இல் திருமணமான சினிமா பிரபலங்கள்! பக்கா லிஸ்ட்!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  டும் டும் மேளச்சத்தம்! 2024 இல் திருமணமான சினிமா பிரபலங்கள்! பக்கா லிஸ்ட்!

டும் டும் மேளச்சத்தம்! 2024 இல் திருமணமான சினிமா பிரபலங்கள்! பக்கா லிஸ்ட்!

Dec 13, 2024 02:42 PM IST Suguna Devi P
Dec 13, 2024 02:42 PM , IST

  • 2024 ஆம் ஆண்டில் சில சினிமா நடிகர்கள் அவர்களது திருமணத்தை செய்து முடித்துள்ளனர். இது குறித்து இங்கு காண்போம். 

கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், சோபிதா துலிபாலா உட்பட சில சினிமா பிரபலங்கள் 2024 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். அதில் பெரும்பாலான ஜோடிகள் காதலித்து திருமணம் செய்துக் கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதில் ஒரு சிலர் குறித்து இங்கு காண்போம். 

(1 / 6)

கீர்த்தி சுரேஷ் தனது காதலர் ஆண்டனி தட்டிலை கோவாவில் திருமணம் செய்து கொண்டார். 15 வருடங்களாக காதலித்து திருமணம் செய்து கொண்டனர். டிசம்பர் 12 அன்று கோலகலமாக இவர்களது திருமணம் நடந்து முடிந்துள்ளது. 

(2 / 6)

 நடிகை வரலக்‌ஷ்மி சரத்குமார் நிக்கோலாய் சச்தேவ் என்பவரை கடந்த ஜூலை 3, 2024 அன்று தாய்லாந்தின் கிராபியில் உள்ள ஒரு கடற்கரை ரிசார்ட்டில் பாரம்பரிய இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டார். நீண்ட காலமாக காதலித்து வந்த இந்த ஜோடிக்கு மார்ச் 2, 2024 அன்று நிச்சயதார்த்தம் நடந்தது. 

(3 / 6)

நடிகர் அர்ஜூனின் மகள் ஐஸ்வர்யா அர்ஜுன் மற்றும் நடிகர் ராமையாவின் மகன் உமாபதி ராமையா இருவர்ரும் நீண்ட காலமாக காதலித்து வந்த நிலையில் கடந்த  ஜூன் 10, 2024 அன்று சென்னை கெருகம்பாக்கத்தில் உள்ள அர்ஜுனின் ஸ்ரீ யோக ஆஞ்சநேயர் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். 

(4 / 6)

தெலுங்கு நடிகர் நாகசைதன்யா அவரது விவாகரத்துக்குப் பின்னர் நடிகை சோபிதா துலிபாலாவை காதலித்து வந்தார். இந்நிலையில் இரு வீட்டாரின் சம்மதத்துடன் இவர்களது திருமணம் கடந்த டிசம்பர் 4 ஆம் தேதி ஹைதராபாத்தில் உள்ள அன்னபூர்ண ஸ்டூடியோவில் நடந்து முடிந்தது. 

(5 / 6)

நடிகர் காளிதாஸ் ஜெயராம் மற்றும் அவரது நீண்ட நாள் காதலியும் ஊத்துக்குளி ஜமீன் வாரிசுமான தாரிணி காளிங்கராயருக்கும் கடந்த டிசம்பர் 8 ஆம் தேதி  குருவாயூர் கோயிலில் வைத்து குடும்பங்கள் சூழ திருமணம் நடைபெற்றது.

(6 / 6)

மற்ற கேலரிக்கள்