2024 இல் அறிமுகமாகி அதகளம் செய்த அறிமுக இயக்குநர்கள்! முழுத் தொகுப்பு உள்ளே!
- 2024 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவிற்கு ஒரு சிறந்த ஆண்டாக அமைந்து இருந்தது. அதிலும் குறிப்பாக பல அறிமுக இயக்குநர்கள் அவர்களது முதல் படைப்பிலேயே ரசிகர்களையும், விமர்சகளையும் ஒரு சேர திருப்தி படுத்தினார்கள். அவர்களின் தொகுப்பை இங்கு காணலாம்.
- 2024 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவிற்கு ஒரு சிறந்த ஆண்டாக அமைந்து இருந்தது. அதிலும் குறிப்பாக பல அறிமுக இயக்குநர்கள் அவர்களது முதல் படைப்பிலேயே ரசிகர்களையும், விமர்சகளையும் ஒரு சேர திருப்தி படுத்தினார்கள். அவர்களின் தொகுப்பை இங்கு காணலாம்.
(1 / 6)
இயக்குனர் தமிழரசனின் முதல் படம் என்ற எந்த சாயலும் இல்லாமல், கதை, திரைக்கதை, வசனங்கள் என எல்லா பக்கத்திலும் தெறிக்க விட்ட படம் தான் லப்பர் பந்து. கேப்டனின் பாடல் தொடங்கி ஒவ்வொரு கதாபாத்திரமும் அடித்த சிக்சர் வரை படம் அதகளம் செய்தது. 2024 ஆம் ஆண்டின் சிறந்த படங்களின் பட்டியலிலும், வசூலை குவித்த வரிசையிலும் இணைந்தது இந்தப் படம். கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து வந்த லப்பர் பந்து செப்டம்பர் 20 அன்று வெளியாகி எதிர்பாராத வெற்றி பெற்றது.
(2 / 6)
2024 ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்தில் அறிமுக இயக்குனர் எஸ். ஜெயக்குமார் இயக்கிய புளு ஸ்டார் திரைப்படம் ஒரு விளையாட்டு குடும்ப கதையாகும். கிரிக்கெட் விளையாட்டில் நடக்க கூடிய அரசியலையும், வாய்ப்பு மறுக்கப்படுவதையும் மிகவும் உணர்வுப் பூர்வமாக கொடுத்து இருந்தார் இயக்குனர். இப்படமும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
(3 / 6)
2024 ஆம் ஆண்டின் பிப்ரவரி மாதம் மணிகண்டன் மற்றும் ஸ்ரீ கௌரி பிரியா ஆகியோரது உணரவூப்பூர்வமான நடிப்பில் வெளியான படம் தான் லவ்வர், இன்றைய கால காதலின் சிக்கல்களையும், காதலர்களின் நடவடிக்கையையும் மிகவும் யதார்த்தமாக எடுத்துக் காட்டி இருந்தது. இப்படத்தின் இயக்குனர் பிரபுராம் வியாஸிற்கு இது முதல் படம் என்று கூறினால் நம்பவே முடியாது. இப்படம் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
(4 / 6)
கருணாஸ் மற்றும் விமலின் அற்புதமான நடிப்பில் ஆகஸ்ட் மாதம் வெளியான போகுமிடம் வெகு தூரமில்லை ஒரு பயணத்தில் நடக்க கூடிய கதையாக இருந்தது. இந்த படத்தின் இயக்குனர் மைக்கேல் கே ராஜாவிற்கு இது முதல் படமாகும். படம் வெளியாகி சில மாதங்கள் கழித்தே இப்படத்திற்கு வரவேற்பு கிடைத்தது.
(5 / 6)
2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியான இயக்குனர் பாரி இளவழகன் நடித்து இயக்கிய திரைப்படம் தான் ஜமா, கூத்துக் கலைஞனின் வாழ்க்கை, காதல், குடும்பம் மற்றும் உறவுகள் என அவன் சந்திக்கும் சிக்கல்களின் வழி படம் நகர்கிறது. இதில் இயக்குனரின் நடிப்பும் அபாரமாக இருந்தது.
(6 / 6)
அக்டோபர் மாதம் வெளியான டைம் லூப் திரில்லர் படமான பிளாக் ஒரு சிறந்த திரில்லர் படமாக அமைந்தது. இப்படத்தின் இயக்குனரான கே.ஜி.பாலசுப்பிரமணிக்கு இதுவே முதல் படமாகும். இது ஒரு ஹாலிவுட் படத்தின் ரீமேக் ஆக இருந்த போதிலும் தமிழ் ரசிகர்களுக்கு ஏற்றவாறு ஒரு சில மாற்றங்கள் இருந்தன. இசையமைப்பாளர் சாம் சி எஸ்ஸின் அற்புதமான இசையில் படம் திகில் அனுபவத்தை கொடுத்தது.
மற்ற கேலரிக்கள்