RCB Captains: ஆர்சிபி புதிய கேப்டனாக மாறிய ரஜத் பட்டிதார்.. இதுவரை ஆர்சிபி அணியின் கேப்டனாக இருந்தவர்கள் யார்?
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Rcb Captains: ஆர்சிபி புதிய கேப்டனாக மாறிய ரஜத் பட்டிதார்.. இதுவரை ஆர்சிபி அணியின் கேப்டனாக இருந்தவர்கள் யார்?

RCB Captains: ஆர்சிபி புதிய கேப்டனாக மாறிய ரஜத் பட்டிதார்.. இதுவரை ஆர்சிபி அணியின் கேப்டனாக இருந்தவர்கள் யார்?

Published Feb 13, 2025 11:54 PM IST Muthu Vinayagam Kosalairaman
Published Feb 13, 2025 11:54 PM IST

  • RCB Captains: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் புதிய கேப்டனாக இளம் பேட்ஸ்மேன் ரஜத் படிதார் நியமிக்கப்பட்டுள்ளார். 18வது ஆண்டாக ஐபிஎல் கோப்பை கனவுடன் களமிறங்க இருக்கும் ஆர்சிபி அணிக்கு இதுவரை கேப்டனாக இருந்தவர்கள் யாரெல்லாம் தெரியுமா?

ரஜத் படிதார்: ஐபிஎல் 2025 தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணியை பேட்ஸ்மேன் ரஜத் படிதார் வழிநடத்துவார் என அந்த அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. ஆர்சிபி புதிய கேப்டனாக படிதாரை இவர் ஆர்சிபி அணியின் எட்டாவது கேப்டன் ஆவார். இதுவரை 27 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள பட்டிதார், 34.74 சராசரியுடன் 799 ரன்கள் எடுத்துள்ளார். மத்திய பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த இவர் இந்தியாவுக்காக மூன்று டெஸ்ட் போட்டிகள் மற்றும் ஒரு ஒருநாள் போட்டியில் களமிறங்கியுள்ளார்

(1 / 8)

ராகுல் டிராவிட்: முன்னாள் இந்திய ஜாம்பவான் வீரரான ராகுல் டிராவிட் தான் ஐபிஎல் போட்டிகளில்  ஆர்சிபி அணியின் முதல் கேப்டனாக செயல்பட்டார். 2008ஆம் ஆண்டு ஐபிஎல் முதல் சீசனில் டிராவிட் தலைமையில் 14 போட்டிகளில் விளையாடி நான்கு போட்டிகளில் மட்டுமே ஆர்சிபி வெற்றி பெற்றது

(2 / 8)

கெவின் பீட்டர்சன்: 2009 ஐபிஎல் தொடரில் இங்கிலாந்து அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் கெவின் பீட்டர்சன் 6 போட்டிகளில் ஆர்சிபி அணியின் தலைமைப் பொறுப்பை ஏற்றார். அவரது தலைமையில், அந்த அணி இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று நான்கு போட்டிகளில் தோல்வியடைந்தது

(3 / 8)

அனில் கும்ப்ளே: 2009ஆம் ஆண்டு சீசனின் தொடரின் மத்தியில் பீட்டர்சனுக்குப் பதிலாக முன்னாள் இந்திய சுழற்பந்து வீச்சாளர் அனில் கும்ப்ளே கேப்டனாக நியமிக்கப்பட்டார். அதன் பின்னர் 2010ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரிலும் ஆர்சிபி அணியின் கேப்டன் பொறுப் ஏற்றுக்கொண்டார். கும்ப்ளேவின் தலைமையில், ஆர்சிபி 35 போட்டிகளில் 19 வெற்றிகளையும் 16 தோல்விகளையும் சந்தித்தது

(4 / 8)

டேனியல் வெட்டோரி: நியூசிலாந்தின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் டேனியல் வெட்டோரி, ஐபிஎல் 2011 மற்றும் 2012 ஆகிய சீசன்களில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டனாக இருந்தார். அவரது தலைமையில், அந்த அணி 28 போட்டிகளில் விளையாடியது. இதில் 15 வெற்றி, 13 தோல்விகளை சந்தித்து

(5 / 8)

விராட் கோலி: இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி ஐபிஎல் 2013இல் இருந்து 2021 வரை ஆர்சிபியின் கேப்டனாக செயல்பட்டார். இந்த காலகட்டத்தில் தனது பெயரிலும், அணியின் பெயரிலும் பல்வேறு சிறந்த சாதனையைப் படைத்தார். ஆர்சிபி அணிக்கு 50க்கும் மேற்பட்ட போட்டிகளில் தலைமை தாங்கிய ஒரே கேப்டன் இவர்தான். கோலியின் தலைமையில் ஆர்சிபி அணி 143 போட்டிகளில் விளையாடி 66 போட்டிகளில் வெற்றியும், 80 போட்டிகளில் தோல்வியும் அடைந்துள்ளது

(6 / 8)

ஷேன் வாட்சன்: ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் ஷேன் வாட்சன் ஆர்சிபி அணியின் தலைமைப் பொறுப்பையும் ஏற்றுள்ளார். 2017ஆம் ஆண்டில் பெங்களூரு அணியை மூன்று போட்டிகளில் வழிநடத்தி, ஒன்றில் வெற்றி பெற்று இரண்டில் தோல்வியடைந்தார். காயம் காரணமாக அந்த சீசனில் கோலி மூன்று போட்டிகளில் விளையாடவில்லை, இதன் காரணமாக வாட்சன் தற்காலிக கேப்டனாக செயல்பட்டார்

(7 / 8)

ஃபாஃப் டு பிளெசிஸ்: கோலி கேப்டன்சி பதவியில் இருந்து விலகிய பிறகு, முன்னாள் தென்னாப்பிரிக்க வீரர் ஃபாஃப் டு பிளெசிஸ் ஆர்சிபி அணியின் தலைமைப் பொறுப்பை ஏற்றார். ஐபிஎல் 2022 முதல் 2024 வரை அவர் அணியின் கேப்டனாக இருந்தார். அவரது தலைமையில், ஆர்சிபி மூன்று சீசன்களில் 42 போட்டிகளில் விளையாடியது. இந்தக் காலகட்டத்தில் அந்த அணி 21 போட்டிகளில் வெற்றி பெற்று 21 போட்டிகளில் தோல்வியை சந்தித்தது

(8 / 8)

Muthu Vinayagam Kosalairaman

TwittereMail
கோ. முத்து விநாயகம், இளங்கலை காட்சிவழி தொடர்பியல், முதுகலை மின்னணு ஊடகம் பிரிவில் பட்டம் பெற்றவர். 2007 முதல் ஊடகத்துறையில் இருந்து வருகிறார். தொலைக்காட்சி, டிஜிட்டல் ஊடகங்களில் பணியாற்றிய அணுபவம் மிக்கவர். மக்கள் தொலைக்காட்சி, இந்தியாகிளிட்ஸ், ஈடிவி பாரத் என 16 ஆண்டுகளுக்கு மேல் அனுபவத்துடன் ஹிந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் அனைத்து பிரிவுகளிலும் கட்டுரை எழுதுபவர். விளையாட்டு, கிரிக்கெட், சினிமா, லைப்ஸ்டைல் பிரிவுகளில் தனித்துவமான பங்களிப்பை அளித்து வருகிறார். விளையாட்டு, சினிமா, பயணம், சமைத்தல் பிடித்தமான பொழுபோக்கு

மற்ற கேலரிக்கள்