கொல்கத்தா செல்கிறீர்களா? இந்த இடங்களுக்கு மட்டும் தப்பித் தவறிகூட செல்லாதீர்கள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  கொல்கத்தா செல்கிறீர்களா? இந்த இடங்களுக்கு மட்டும் தப்பித் தவறிகூட செல்லாதீர்கள்

கொல்கத்தா செல்கிறீர்களா? இந்த இடங்களுக்கு மட்டும் தப்பித் தவறிகூட செல்லாதீர்கள்

Published Apr 06, 2022 11:57 PM IST Muthu Vinayagam Kosalairaman
Published Apr 06, 2022 11:57 PM IST

  • அச்சம், இளகிய மனம் படைத்தவர்களுக்கான பகுதியாக திகிலூட்டும் இடங்கள் இருப்பதில்லை. இருப்பினும் இதுபோன்ற இடங்களுக்கு சென்று அட்ரினலின் சுரப்பியால் உடலிலும், மனதிலும் ஒரு சேர ஏற்படும் அச்சத்தை உணர்ந்து பார்க்க வேண்டும் என விரும்புகிறவர்கள் ஏராளம். 

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு பகுதிகளிலும் திகிலூட்டும் கதைகள் நிறைந்த இடங்கள் ஏராளமாக உள்ளன. இந்தியாவின் பழமையான நகரங்களில் ஒன்றாக திகழும் கொல்கத்தா, சிட்டி ஆஃப் ஜாய் என்று அழைக்கப்படுகிறது. பல்வேறு பாரம்பரியமான இடங்களை பார்த்து ரசிக்க வரும் சுற்றுலா பயணிகளை வரவேற்பதோடு மட்டுமல்லாமல், ஏராளமான திகிலூட்டும் இடங்களாலும் இந்த நகரம் நம்மை அச்சுறுத்துகிறது என்ற நம்ப முடிகிறதா?

(1 / 6)

(Representative image/Unsplash)

எழுத்தாளர்கள் கட்டிடம்: 300 ஆண்டு பழமை வாய்ந்த இந்த கட்டிடத்தில் உள்ள அறை ஒன்றில் பல்வேறு ரகசியங்கள் ஒளிந்திருப்பதாக நம்பப்படுகிறது. இந்த அறையில்தான் பிரிட்டீஷ் கிழக்கு இந்தியா கம்பெனியின் கேப்டன் சிம்சன், இந்தியாவைச் சேர்ந்த புகழ்பெற்ற புரட்சியாளர்களான தினேஷ், பாடல், பினே ஆகியோரால் கொல்லப்பட்டார். தற்போது இந்த கட்டிடங்கள் ஏராளமனோர் பணி செய்தாலும், சூரிய அஸ்தமனத்துக்கு முன்னர் அங்கிருந்து டக்கென புறப்பட்டு விடுவார்களாம்

(2 / 6)

(Instagram/@avixart)

ரபிந்த்ரா சரோபார் மெட்ரோ ரயில் நிலையம்: கொல்கத்தாவிலுள்ள மிக முக்கியமான திகிலூட்டும் இடமாக இந்த மெட்ரோ ரயில் நிலையம் உள்ளது. கடந்த சில தசாப்பதங்கள் இங்கு ஏராளமான தற்கொலைச் சம்பங்கள் நிகழ்ந்துள்ளது. குறிப்பாக கடைசி ரயில் பயணத்தின்போதும், சென்ற பிறகும் சில உருவங்கள், நிழல்கள் தோன்றுவதாக பயணிகள் பலரும் சத்தியம் செய்யாத குறையாக அச்சத்துடன் கூறுகிறார்கள்

(3 / 6)

(Instagram/@mayuresh_roy_chowdhury)

தேசிய நூலகம்: நகரின் மிகப் பெரிய நூலகமாக கருதப்படும் இங்கு புத்தகம் வாசிக்கும்போது தங்கள் கழுத்து அருகே மூச்சு விடுவது போல் உணர்வதாக வாசகர்கள் பலரும் அச்சம் குறையாமல் சொல்கிறார்களாம். இதற்கு நானே சாட்சி என்று கூறும் நூலகர்களும் மற்றொரு அதிர்ச்சி தகவலாக நூலகத்தில் யாரும் இல்லாதபோது திடீரென சேர்கள் நகர்வதாகவும், புத்தகங்கள் அலமாரியிலிருந்து கீழே விழுவதாகவும் தெரிவிக்கின்றனர்

(4 / 6)

(Instagram/@sratravelogue)

ஹவுரா பாலம்: ஹூக்லி ஆற்றின் இரு கரையோரங்கள் இணைக்கும் இந்தியாவின் மிகப் பெரிய கேண்டிலீவர் பாலமாக திகழும் ஹவுரா பாலத்துக்கு அருகே முல்லிக் காட் பூ சந்தை உள்ளது. இந்த பாலத்தின் கீழ்பகுதியில் பல்வேறு விதமான அமானுஷ்ய நிகழ்வுகள் நடப்பதாக கூறப்படுகிறது. ஆற்றுப்பகுதியில் சில கைகள் தோன்றி அழைப்பதை பார்த்ததாக அதிகாலை பொழுதில் பயிற்சி மேற்கொள்ள வரும் மல்யுத்த வீரர்கள் கூறுகின்றனர்

(5 / 6)

(Instagram/@the_.kolkata._diariesandsnehasishdas3389)

புடுல் பாரி அல்லது பொம்மைகளின் வீடு: வடக்கு கொல்கத்தா பகுதியிலுள்ள ஷோபா பஜார் பகுதியில் புடுல் பாரி அமைந்துள்ளது. இருபதாம் நூற்றாண்டில் இந்த இடமானது வெளிநாடுகளிலிருந்து வணிக கப்பல் மூலம் இறக்குமதி ஆகும் மசாலா, பட்டு, கயறு போன்ற பொருள்களை சேமித்து வைக்கும் சேமிப்பு கிடங்காகவே இருந்து வந்தது. இந்தப் பகுதியின் முதலாளிகள் அல்லது பெரியண்ணன்கள் சிலர் இளம்பெண்களை கற்பழித்து, கொலை செய்து பின் அந்த கிடங்கில் உள்ள அறைகளில் வைத்து எரித்ததாக கூறப்படுகிறது. அவர்களின் ஆவி இந்த பகுதியில் உலா வந்து அச்சுறுத்துவதாக பேசப்படுகிறது

(6 / 6)

(Instagram/@sanbcnmadrid)

மற்ற கேலரிக்கள்