தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Eat These Wonderful Plant-based Foods To Stop Hair Fall

தலை முடி உதிர்வை தடுக்கும் தாவரம் சார்ந்த உணவுகள்!

Mar 31, 2022 02:35 PM IST Muthu Vinayagam Kosalairaman
Mar 31, 2022 02:35 PM , IST

  • தலைமுடி உதிர்வு பெரும் பிரச்னையாக இருக்கிறதா? தாவரம் சார்ந்த உணவுகள் சிலவற்றை தொடர்ந்து எடுத்துக்கொள்வதன் மூலம் தலைமுடி உதிர்வு தடுக்கப்படுவதோடு, முடி வளர்ச்சியையும் ஊக்குவிக்கிறது.

முடி உதிர்வை தடுப்பதற்கு அனைத்து விதமான முயற்சிகளும் மேற்கொண்ட பிறகு எதிர்பார்த்த பலன் கிடைக்காமல் கவலைப்படுகிறீர்களா? என்னதான் அதற்கான மருந்துகள், மாத்திரைகள், மூலிகை எண்ணெய் வகைகளை தலைமுடியில் தேய்த்தாலும், மோசமான அளவில் ஊட்டச்சத்துகள் இருப்பது தலைமுடி உதிர்வுக்கு முக்கிய காரணமாக உள்ளது. எனவே நீங்கள் ஊட்டச்சத்துகள் மிகுந்த சரியான உணவை சாப்பிடுவதன் மூலம் தலை முடி ஆரோக்கியத்தை பேனி பாதுகாக்கலாம்.

(1 / 6)

முடி உதிர்வை தடுப்பதற்கு அனைத்து விதமான முயற்சிகளும் மேற்கொண்ட பிறகு எதிர்பார்த்த பலன் கிடைக்காமல் கவலைப்படுகிறீர்களா? என்னதான் அதற்கான மருந்துகள், மாத்திரைகள், மூலிகை எண்ணெய் வகைகளை தலைமுடியில் தேய்த்தாலும், மோசமான அளவில் ஊட்டச்சத்துகள் இருப்பது தலைமுடி உதிர்வுக்கு முக்கிய காரணமாக உள்ளது. எனவே நீங்கள் ஊட்டச்சத்துகள் மிகுந்த சரியான உணவை சாப்பிடுவதன் மூலம் தலை முடி ஆரோக்கியத்தை பேனி பாதுகாக்கலாம்.(Pixabay)

பாதாம், முந்திரி, பிஸ்தா போன்ற கொட்டை வகைகளில் பல்வேறு விதமான அடிப்படையான ஊட்டச்சத்துகள் நிரம்பியுள்ளன. இவற்றை நாள்தோறு கையளவு சாப்பிட்டு வந்தால் உடலுக்கு மட்டுமல்ல, தலை முடிக்கு பலம் சேர்க்கிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் தினமும் சாப்பிடும் ஆரோக்கியமற்ற நொறுக்கு தீனிக்களை ஒதுக்கிவைத்துவிட்டு அதற்கு மாற்றாக மேற்கூறிய ஊட்டச்சத்து உணவுகளை சாப்பிட வேண்டும்

(2 / 6)

பாதாம், முந்திரி, பிஸ்தா போன்ற கொட்டை வகைகளில் பல்வேறு விதமான அடிப்படையான ஊட்டச்சத்துகள் நிரம்பியுள்ளன. இவற்றை நாள்தோறு கையளவு சாப்பிட்டு வந்தால் உடலுக்கு மட்டுமல்ல, தலை முடிக்கு பலம் சேர்க்கிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் தினமும் சாப்பிடும் ஆரோக்கியமற்ற நொறுக்கு தீனிக்களை ஒதுக்கிவைத்துவிட்டு அதற்கு மாற்றாக மேற்கூறிய ஊட்டச்சத்து உணவுகளை சாப்பிட வேண்டும்(Pixabay)

கொட்டை வகைகளைப் போல் விதைகளிலும் எக்கச்சக்கமான ஊட்டச்சத்துகள் நிரம்பியுள்ளன. சியா விதைகள், ஆளி விதைகள் போன்றவை தலை முடி வளர்ச்சிக்கு உதவுகிறது. இவற்றில் ஒமேகா 3 மற்றும் இதர முக்கிய ஊட்டச்சத்துகள் அதிகமாக உள்ளன. எனவே இந்த விதைகளை ஸ்மூத்தீஸ், சாலட், தானியங்கள், தயிர் மற்றும் பழங்களுடன் சேர்த்து சாப்பிடலாம்

(3 / 6)

கொட்டை வகைகளைப் போல் விதைகளிலும் எக்கச்சக்கமான ஊட்டச்சத்துகள் நிரம்பியுள்ளன. சியா விதைகள், ஆளி விதைகள் போன்றவை தலை முடி வளர்ச்சிக்கு உதவுகிறது. இவற்றில் ஒமேகா 3 மற்றும் இதர முக்கிய ஊட்டச்சத்துகள் அதிகமாக உள்ளன. எனவே இந்த விதைகளை ஸ்மூத்தீஸ், சாலட், தானியங்கள், தயிர் மற்றும் பழங்களுடன் சேர்த்து சாப்பிடலாம்(Pixabay)

நமது அடிப்படையான உணவு வகைகள் பக்கம் மீண்டும் திரும்புவதன் மூலம் சீரான ஆரோக்கிய நன்மைகளை பெறலாம். பருப்பு வகைகள் புரதம் சார்ந்த சத்துகளுக்கு சிறந்த ஆதாராமாக உள்ளது. இவை தலைமுடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது

(4 / 6)

நமது அடிப்படையான உணவு வகைகள் பக்கம் மீண்டும் திரும்புவதன் மூலம் சீரான ஆரோக்கிய நன்மைகளை பெறலாம். பருப்பு வகைகள் புரதம் சார்ந்த சத்துகளுக்கு சிறந்த ஆதாராமாக உள்ளது. இவை தலைமுடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது(Pixabay)

கீரை வகைகளில் அதிகளவிலான ஃபோலேட், வைட்டமின் ஏ, சி மற்றும் இரும்புச் சத்துகள் நிறைந்துள்ளன. இவை முடி வளர்ச்சிக்கு உதவுகிறது. பாலக் பன்னீர், பரோட்டாக்களில் கீரையை ஸ்டஃப் செய்து சாப்பிடுவது போன்று பல வகைகளில் உங்கள் உணவுகளில் கீரைகளை சேர்க்கலாம்

(5 / 6)

கீரை வகைகளில் அதிகளவிலான ஃபோலேட், வைட்டமின் ஏ, சி மற்றும் இரும்புச் சத்துகள் நிறைந்துள்ளன. இவை முடி வளர்ச்சிக்கு உதவுகிறது. பாலக் பன்னீர், பரோட்டாக்களில் கீரையை ஸ்டஃப் செய்து சாப்பிடுவது போன்று பல வகைகளில் உங்கள் உணவுகளில் கீரைகளை சேர்க்கலாம்(Pixabay)

நெல்லிக்காயில் அதிக அளவில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. அதுமட்டுமில்லாமல் வைட்டமின் சி நிறைந்துள்ளது. உணவில் இரும்புச்சத்துக்களை உறிஞ்சி தலை முடி ஆரோக்கியத்தை பராமரிக்கிறது

(6 / 6)

நெல்லிக்காயில் அதிக அளவில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. அதுமட்டுமில்லாமல் வைட்டமின் சி நிறைந்துள்ளது. உணவில் இரும்புச்சத்துக்களை உறிஞ்சி தலை முடி ஆரோக்கியத்தை பராமரிக்கிறது(Pixabay)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்