இப்படியும் வேலை இருக்கா? உங்களால் நம்ப முடியாத வேடிக்கையான வேலைகள்!
- டாக்டர், இன்ஜினியர், வக்கீல் என குழந்தைகளிடம் நாம் வழக்கமாக கேட்கும் வேலைகளை விட சற்று வினோதமாகவும், நல்ல வருமானத்தை தரக்கூடிய வேடிக்கையான வேலைகள் இந்த உலகில் பலரால் பார்க்கப்பட்டு வருகிறது. அப்படி நம்ப முடியாத வேலைகள் என்னவெல்லாம் இருக்கிறது என்பது பற்றி பார்க்கலாம்.
- டாக்டர், இன்ஜினியர், வக்கீல் என குழந்தைகளிடம் நாம் வழக்கமாக கேட்கும் வேலைகளை விட சற்று வினோதமாகவும், நல்ல வருமானத்தை தரக்கூடிய வேடிக்கையான வேலைகள் இந்த உலகில் பலரால் பார்க்கப்பட்டு வருகிறது. அப்படி நம்ப முடியாத வேலைகள் என்னவெல்லாம் இருக்கிறது என்பது பற்றி பார்க்கலாம்.
(1 / 8)
நீங்கள் தற்போது பார்த்து வரும் வேலை உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் அதனை உதரித் தள்ளிவிட்டு, கீழ்க்காணும் ஏதேனும் விசித்திரமான வேலையை தேர்ந்தெடுக்கலாம்.
(Unsplash)(2 / 8)
தொழில்முறையாக தூங்குபவர்: தூக்கம் என்பது தனி உலகம். உங்கள் புற உலக கவலைகள், பிரச்னைகள், இன்பம், துன்பம் என அனைத்திலும் இருந்து விடுபட்டு அதுபற்றிய சிந்தனை இல்லாமல் முற்றிலும் உங்களை நிம்மதியான மற்றொரு உலகத்துக்கு அழைத்துச் செல்வது. இப்படியொரு செயலை செய்வதுதான் உங்கள் வேலை, அதற்கு குறிப்பிட்ட தொகை சம்பளம் என்று அளித்தால் எப்படியிருக்கும். ஆம் இப்படியொரு வேலையும் உள்ளத. எங்கு என்பதை நீங்கள்தான் தேடிக் கண்டுபிடித்துக்கொள்ளவும்
(Unsplash)(3 / 8)
ட்ரெயின் புஸ்ஸர்: கூட்ட நெரிசல் மிகுந்த நேரங்களில் ரயில் இறங்குபவர்களை கைப்பிடித்து இழுக்கவும், ஏறுபவர்களை உள்ளே தள்ளவும் என இந்த ட்ரெயின் புஸ்ஸர் வேலை உருவாக்கப்பட்டுள்ளது. ஜப்பானில் இந்த வேலையை செய்பவர்களை ஓஷியாஸ் என்று அழைக்கிறார்கள்.
ஓஷியாஸ்கள் கூட்ட நெரிசல் மிகுந்த ரயில் வந்து நின்றவுடன் கதவு மூடுவதற்கு கீழே இறங்க வருபவர்கள் வெளிய வருவதற்கு உதவி செய்கிறார்கள்
(4 / 8)
முழுநேர நெட்பிளிக்ஸ் பார்வையாளர்: பொழுதுபோக்கு அம்சங்கள் அனைத்தும் நெட்பிளிக்ஸ் போன்ற ஓடிடி தளங்கள் மூலம் உள்ளங்கைக்குள் வந்துவிட்டது. அந்த வகையில் தங்களது தளத்தில் வரும் அனைத்து உள்ளடங்கங்களையும் பார்ப்பதற்கு, பயனாளர் தேடுவதற்கு உகந்தவாறு தேடுதல் சொற்களை உருவாக்குவதற்கு என ஆட்கள் வேலைக்கு நியமிக்கப்பட்டுகிறார்கள்
(Unsplash)(5 / 8)
தொழில்முறையாக ஒப்பாரி வைப்பவர்: நம்மூரில் சாவு வீடுகளில் ஒப்பாரி என்பது சாதாரணமானது. ஒரு சிலரின் அழுகைக் குரலை இறப்பு வீட்டையும் தாண்டி விண்ணை பிளக்கும் விதமாக அமையும். இதில் குழுவாக ஒப்பாரி வைத்து அழுவதும் உண்டு. இதைச் செய்பவர்கள் கவனிக்க, உங்களுக்கான சம்பளத்துடன் கூடிய வேலைதான் இது.
தென் கிழக்கு ஆசிய பகுதிகளில் அதிக சத்தத்துடன் கேட்கப்படும் அழுகை குரல் ஒருவரது மரணத்துக்கு பின்னான அவரது பயனத்துக்கு வழிவகுக்கும் என நம்பப்படுகிறது. இதற்காகவே தொழில்முறையாக சத்தமாக அழுபவர்களை வரச்சொல்லி பணம் கொடுத்து அழுகை சேவை புரிய சொல்கிறார்கள். உங்களுக்கு சத்தமாக அழத்தெரியும் என்றால் இந்த வேலைக்கு தாராளமாக விண்ணப்பிக்கலாம்
(6 / 8)
பெயிண்ட் காய்வதை கண்காணிப்பவர்: இது முற்றிலும் புதுமையானது மட்டுமில்லை, பார்வைத்திறனை மேம்படுத்தும் வேலை எனவும் கூறலாம். புதிதாக பெயிண்ட் அடிக்கப்பட்ட சுவரை கண்இமைக்காமல் உற்று நோக்கி, வண்ண மாற்றங்கள் குறித்து கவனிக்கவும், பெயிண்ட் முழுமையாக காய்வதற்கு எடுத்துக்கொள்ளும் நேரம் ஆகியவற்றை குறிப்பு எடுத்து கொடுக்கும் விதமாக இந்த வேலை உள்ளது
(Unsplash)(7 / 8)
நாய்களுக்கான உணவை ருசிப்பவர்: நாய்களுக்கான உணவு என்பதை தற்போது பல்வேறு சுவைகளிலும், தரத்திலும் கிடைக்கின்றன. இந்த உணவை நாய்களுக்கு அளிக்கும்போது அதன் சுவை குறித்து பல்வேறு சந்தேகங்களும், சுவைத்து பார்க்கலாமா என்ற எண்ணம் ஏற்படாமல் இருப்பவர்கள் யாரும் இருக்க முடியாது. ஆனால் இதை ஒரு வேலையாக செய்பவர்கள் இருக்கிறார்கள். இவர்கள் நாய்களுக்கு தயாரிக்கப்படும் உணவின் சுவை, தரம் ஆகிவற்றை பரிசோதிப்பதுடன், போட்டி பிராண்டுகளுடன் ஒப்பீடவும் செய்கிறார்கள்
(Unsplash)மற்ற கேலரிக்கள்