Top Dosas in India: டாப் 100 உணவுகளில் இருக்கும் இந்திய தோசை வகைகள்! எந்த இடத்தில் எந்தெந்த தோசைகள் - முழு லிஸ்ட்
- உலக அளவில் இந்திய உணவுகளுக்கான மவுசானது அதிகரித்துள்ளது. குறிப்பாக இந்திய தோசை வகைகளில் மசாலா தோசை, நீர் தோசை ஆகியவை உலகின் சிறந்த 100 பான்கேக்குகளில் டாப் 15 இடத்தில் உள்ளது
- உலக அளவில் இந்திய உணவுகளுக்கான மவுசானது அதிகரித்துள்ளது. குறிப்பாக இந்திய தோசை வகைகளில் மசாலா தோசை, நீர் தோசை ஆகியவை உலகின் சிறந்த 100 பான்கேக்குகளில் டாப் 15 இடத்தில் உள்ளது
(1 / 10)
டேஸ்ட் அட்லஸ் என்ற ஆன்லைன் பயணம் மற்றும் உணவு வழிகாட்டி நிறுவனம் இந்த லிஸ்டை வெளியிட்டுள்ளது. பான்கேக்குகள் அல்லாத சில உணவுகளும் இந்த லிஸ்டில் இடம்பிடித்துள்ளது
(Canva)(2 / 10)
தோசை பிரபலமான தென் இந்திய உணவாக இருக்கிறது. தோசையானது அரிசு, தானியங்கள், கோதுமை ஆகியவற்றில் தயார் செய்து பரிமாறப்படுகின்றன. இது உலகின் டாப் 100 பான்கேக் லிஸ்டில் 10வது இடத்தில் உள்ளது. தோசை குறித்து 1 ஆம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியத்தில் முதன்முறையாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் கர்நாடகாவின் உடுப்பி தோசையும் இந்த லிஸ்டில் உள்ளது
(tasteatlas.com)(3 / 10)
மசாலா தோசை இந்த லிஸ்டில் 13வது இடத்தில் உள்ளது. நாடு முழுவதும் பிரபலமான தோசையாக இது உள்ளது. மைசூர் மசாலா தோசை, ரவா மசாலா தோசை, ஆனியன் மசாலா தோசை, பேப்பர் மசாலா தோசை போன்றவை மசாலா தோசை வகைகளில் பிரபலமானவையாக உள்ளன. இதற்கு தொடுகறியாக சாம்பார், சட்னி ஆகியவை இருக்கின்றன
(tasteatlas.com)(4 / 10)
ஊத்தப்பம், ஆனியன் தோசை இந்த லிஸ்டில் 59வது இடத்தில் உள்ளது. இது ஸ்டீரிட் உணவாக இருக்கிறது. காலை நேர உணவாக தென்னிந்தியாவில் சாப்பிடப்படுகிறது. பிட்சாவை போன்று தோற்றத்தை பெற்றதாக ஊத்தப்பம் உள்ளது
(tasteatlas.com)(5 / 10)
ஆந்திரா, ராஜஸ்தான் மாநிலங்களில் பிரபலமாக இருந்து வரும் பெசரா தோசை 61வது இடத்தில் உள்ளது. அரிசி, கடலை மாவு ஆகியவற்றால் இந்த தோசை மாவு தயார் செய்யப்படுகிறது. தேங்காய் சட்னி, சாம்பார் இதற்கான சைடு டிஷ் ஆக உள்ளது
(tasteatlas.com)(6 / 10)
இந்த லிஸ்டில் 62வது இடத்தில் தமிழ்நாட்டில் பிரபலமாக இருந்து வரும் பேப்பர் தோசை இருந்து வருகிறது. பெயருக்கு ஏற்றார் போல் மிகவும் மெல்லிதாக இருக்கும் இந்த தோசை கர்நாடகாவிலும் பாப்புலராக இருக்கிறது
(tasteatlas.com)(7 / 10)
கேரளாவில் பிரபலமான ஆப்பம் இந்த லிஸ்டில் 65வது இடத்தில் உள்ளது. அரிசி மாவு, தேங்காய் பால் ஆகியவற்றுடன் தயார் செய்யப்படுகிறது. கேரளா மட்டுமல்லாமல் தமிழ்நாடு, இலங்கையிலும் பிரபலமாக இருந்து வருகிறது
(tasteatlas.com)(8 / 10)
கர்நாடகாவில், குறிப்பாக தக்ஷின கன்னடா, உடுப்பி பகுதிகளில் பிரபலமாக இருக்கும் நீர் தோசை 77வது இடத்தில் உள்ளது. இந்த தோசை மாவு அரிசி, உப்பு ஆகியவை சேர்த்து தயார் செய்யப்படுகிறது
(tasteatlas.com)(9 / 10)
கேரளா, தமிழ்நாடு ஆகிய பகுதிகளில் பிரபலமானதாக இருக்கும் கல் ஆப்பம் 80வது இடத்தில் உள்ளது. அரிசி, தேங்காய், பால் மற்றும் இதர கலவைகளை சேர்த்து தயார் செய்யப்படுகிறது
(tasteatlas.com)மற்ற கேலரிக்கள்