குரு வக்ர நிலை அடைந்தார்.. செமயான வாழ்க்கை வாழும் ராசிகள்.. ரிஷபம்.. சிம்மம்.. கடகம் மீது குறி..!
- Guru Bhagwan:
- Guru Bhagwan:
(1 / 7)
நவகிரகங்களில் மங்கள நாயகனாக விளங்கக்கூடியவர் குருபகவான். இவர் வருடத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
(2 / 7)
குருபகவான் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம், தன்னம்பிக்கை, தைரியம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார். குருபகவான் ஒரு ராசியில் உச்சத்தில் இருந்தால் அவர்களுக்கு அனைத்து யோகங்களும் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
(3 / 7)
அந்த வகையில் குரு பகவான் கடந்த மே மாதம் மூன்றாம் தேதி என்று மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு தனது இடத்தை மாற்றினார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். குருபகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
(4 / 7)
அந்த வகையில் கடந்த அக்டோபர் ஒன்பதாம் தேதி என்று குரு பகவான் வக்கிர நிலை பயணத்தை ரிஷப ராசியில் தொடங்கினார். வருகின்ற 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் குரு பகவான் வக்கர நிவர்த்தி அடைகின்றார். குருபகவானின் வக்கிர நிலை பயணம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகளில் இதன் மூலம் ராஜ யோகத்தை பெற்றுள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
(5 / 7)
ரிஷப ராசி: உங்கள் ராசியில் முதல் வீட்டில் குரு பகவான் வத்திர நிலை அடைந்துள்ளார். இதனால் உங்களுக்கு மிகவும் அற்புதமான காலமாக இது அமைந்துள்ளது. வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு சிறப்பான முன்னேற்றம் இருக்கும். தனிப்பட்ட வாழ்க்கை உங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கக்கூடும்.
(6 / 7)
சிம்ம ராசி: உங்கள் ராசியில் பத்தாவது பெட்டில் குருபகவான் வக்ர நிலை அடைந்துள்ளார். இதனால் உங்களுக்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரை யோகம் கிடைக்கப்போகிறது. வேலை மற்றும் வியாபாரத்தில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். வணிகத்தில் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.
(7 / 7)
கடக ராசி: உங்கள் ராசியில் 11-வது வீட்டில் குருபகவான் வக்கிர நிலை அடைந்துள்ளார். இதனால் உங்களுக்கு வருமானத்தில் மிகப்பெரிய உயர்வு கிடைக்கக்கூடும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். நல்ல நிதி நன்மைகள் உங்களுக்கு கிடைக்கக்கூடும். நிறைய பணத்தை சம்பாதிப்பதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். செலவுகள் குறைந்து சேமிப்புகள் அதிகரிக்கும்.
மற்ற கேலரிக்கள்