கோடிகளால் மாடி கட்டும் ராசிகள்.. கேது பண மழை பெய்ய தயாராகி விட்டார்.. யார் அந்த ராசி?
- Lord Ketu: கேது பகவானின் பூரம் நட்சத்திரம் பயணமானது கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் இதன் மூலம் ராஜயோகத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
- Lord Ketu: கேது பகவானின் பூரம் நட்சத்திரம் பயணமானது கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் இதன் மூலம் ராஜயோகத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
(1 / 6)
நவகிரகங்களில் அசுப நாயகனாக விளங்க கூடியவர் கேது பகவான். இவர் எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருக்கக்கூடியவர். ராகு மற்றும் கேது இணை பிரியாத கிரகங்களாக திகழ்ந்து வருகின்றனர். ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல இவர்கள் 18 மாதங்கள் எடுத்துக் கொள்கின்றனர். வெவ்வேறு ராசிகளில் பயணம் செய்தாலும் ராகு மற்றும் கேது செயல்பாடு ஒரே மாதிரி இருக்கும்.
(2 / 6)
அந்த வகையில் கேது பகவான் கடந்த ஆண்டு அக்டோபர் மாத இறுதியில் கன்னி ராசியில் தனது பயணத்தை தொடங்கினார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார் வரும் 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை மாற்றுகிறார். கேது பகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
(3 / 6)
அந்த வகையில் நவம்பர் 10ஆம் தேதி என்று கேது பகவான் பூரம் நட்சத்திரத்தில் நுழையுள்ளார். வருகின்ற 2025 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 20ஆம் தேதி வரை இதே நட்சத்திரத்தில் பயணம் செய்வார். கேது பகவானின் பூரம் நட்சத்திரம் பயணமானது கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் இதன் மூலம் ராஜயோகத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
(4 / 6)
மேஷ ராசி: கேது பகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு பல்வேறு விதமான நன்மைகளை கொடுக்கப்போகின்றது. நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
(5 / 6)
கடக ராசி: கேது பகவான் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கப் போகின்றது. உடன் பிறந்தவர்களால் உங்களுக்கு உதவி கிடைக்கும். நண்பர்களால் உங்களுக்கு சிறப்பான முன்னேற்றம் கிடைக்கும். மற்றவர்களிடத்தில் மதிப்பு மற்றும் மரியாதை அதிகரிக்கும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். நிதி தொடர்பான வேலைகள் உங்களுக்கு சிறப்பாக அமையும். நிறைய பணத்தை சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும்.
(6 / 6)
சிம்ம ராசி: கேது பகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு இறைவனின் அருளை முழுமையாக பெற்று தரப் போகின்றது. ஆன்மீகத்தில் உங்களுக்கு ஆர்வம் அதிகரிக்கும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். வெளிநாடு சென்று மேற்படிப்பு படிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. உங்கள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும்.
மற்ற கேலரிக்கள்